தை மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு

Thai-matha-rasi palan

மேஷம்:
Mesham Rasi

இந்த மாதம் உங்களது தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு சீராக இருக்கும். நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்வதற்கும் வாய்ப்பு உண்டு. வேலைக்கு செல்பவர்கள் தங்களது வேலையில் அதிக ஈடுபாடுடன் செயல்படுவார்கள். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதை மட்டும் தவிர்த்து கொள்வது நல்லது மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றுவது நல்லது.

ரிஷபம்:
Rishabam Rasi
பணவரவு சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இதுநாள் வரை கணவன்-மனைவி இடையே இருந்த பிரச்சினை தீரும். வேலைக்கு செல்பவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். உங்களது வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.  மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நன்மை தரும். வீட்டில் இருக்கும் பெண்கள் அவசரப்பட்டு வார்த்தையை விட வேண்டாம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பொறுமையாக செயல்படுங்கள்.

பரிகாரம்
வியாழக்கிழமை தோரும் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும். அம்மன் கோவிலுக்கு சென்று வந்தால் மன நிம்மதி கிடைக்கும்.

மிதுனம்:
midhunam
இந்த மாதம் பணவரவிற்கு எந்த குறையும் இருக்காது. ஆனால் வருமானத்தில் பெரும்பகுதியை மருத்துவத்திற்கு செலவிடும் படி சூழ்நிலை அமைய வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் அக்கறை கொள்வது அவசியம். உங்கள் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் மந்தமாக தான் செல்லும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் மகிழ்ச்சியான மாதமாக தான் இது அமையும்.

- Advertisement -

பரிகாரம்
வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவிப்பது நன்மை தரும்.

கடகம்:
Kadagam Rasi
நீங்கள் திருப்தி அடையும் அளவிற்கு பணவரவு உங்களை வந்து சேரும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைச்சுமை சற்றே அதிகமாகத்தான் இருக்கும். உங்களது வேலையில் அதிக கவனம் செலுத்தி செயல்படுவது நன்மை தரும். வியாபாரம் நல்ல முன்னேற்றத்தை அடையும். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் தான் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்
திங்கட்கிழமை தோறும் விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

சிம்மம்:
simmam
பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை விலகி நெருக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களின் பேச்சுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை அடையலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு உறவினர்களிடம் நல்ல பெயர் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்
செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும். பிரதோஷ வழிபாடு மனநிம்மதியை தரும்.

கன்னி:
Kanni Rasi
உங்கள் தேவைக்கு அதிகமாகவே இந்த மாதம் பணவரவு இருக்கும். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயரை வாங்கிக் குவிக்கப் போகிறீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் அதிக அக்கறை எடுத்து படிப்பில் ஆர்வம் காட்டினால் வெற்றிதான்.

பரிகாரம்
சனிக்கிழமைகளில் ஹனுமன் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

துலாம்:
Thulam Rasi
போன மாதம் உண்டான பணப்பற்றாக்குறையானது இந்த மாதம் சரியாகிவிடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சியில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இதுநாள் வரை இருந்த பிரச்சனையானது இந்த மாதம் தீரும். சொந்தத் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் நன்றாக யோசித்து முடிவு எடுப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்
ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருப்பது மன நிம்மதி அளிக்கும். துர்க்கைக்கு ராகுகால விளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

விருச்சிகம்:
virichigam
உங்களை சுற்றி உள்ளவர்களிடம் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்களால் வெற்றி அடைய முடியாது என்று நினைத்துக் கொண்டு இருந்த காரியங்கள் கூட இந்த மாதம் வெற்றிபெறும். வேலைக்கு செல்பவர்களுக்கு உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உங்கள் வியாபாரத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கப் போகிறது. மாணவர்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் ஆர்வம் காட்டுவது நல்லது.

பரிகாரம்
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் வழிபாடு மன நிம்மதியை அளிக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2022 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

தனுசு:
Dhanusu Rasi
இந்த மாத தேவைக்கான  பணவரவிற்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக தான் இருக்கும். சொந்த தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிக முயற்சி அதிக லாபத்தை கொடுக்கும். இதுநாள்வரை மாணவர்களுக்கு இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.

பரிகாரம்
தினம்தோறும் சிவன் கோவிலுக்கு சென்று வருவது நன்மை தரும். பிரதோஷ காலங்களில் ஓம் நமசிவாய என்று கூறப்படும் மந்திர மன நிம்மதி அளிக்கும்.

மகரம்:
Magaram rasi
இந்த மாதம் பணவரவிற்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் இந்த மாதம் கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவது நல்லது.

பரிகாரம்
சனிக்கிழமை தோறும் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நன்மை தரும். ராகுகால துர்க்கை அம்மன் விளக்கு மன நிம்மதியை அளிக்கும்.

கும்பம்:
Kumbam Rasi
பணவரவு சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வேலைப்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். இட மாற்றம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். உஷாராக செயல்படுவது நன்மை தரும். மாணவர்கள் மற்ற விஷயங்களில் ஆர்வத்தை செலுத்தாமல் படிப்பில் மட்டும் ஆர்வம் காட்டுவது நல்லது.

பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று முல்லைப் பூ சாத்துவது நன்மைதரும்.

மீனம்:
meenam
பண வரவு அதிகமாக இருந்தாலும் அதற்கான செலவு வந்து கொண்டே இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். உங்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் எந்தவிதமான அவப்பெயரும் ஏற்படாது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிகம் ஈடுபாடு காட்டுவார்கள்.

பரிகாரம்
செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று வருவது நன்மை தரும். அம்மன் கோவிலுக்கு சென்று அரளிப்பூ சாத்துவது மன நிம்மதியை கொடுக்கும்.