தை மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

thai matha rasi palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திறமையை வெளிப்படுத்தும் மாதமாக திகழப் போகிறது.பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு சாதகமாகவே இருக்கும். உடல் நலனில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற முடியும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதே சமயம் உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது கவனமுடன் பேசுவது பிரச்சினையை தவிர்ப்பதற்கு உதவும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மன அமைதி ஏற்படும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்வதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொறுத்த வரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அண்ணாமலையாரை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வளர்ச்சி மிகுந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பாராத பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, உடல் நலனில் கவனம் தேவை. காயங்கள் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கவனத்துடன் செயல்படுவதன் மூலம் வேலையில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய நுணுக்கங்களை கையாண்டு தொழிலில் வெற்றியும் அடைவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது என்றாலும் செலவை விட வரவு அதிகமாகவே இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். இருப்பினும் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது தக்க பாதுகாப்புடன் மேற்கொள்வது நன்மையை தரும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். ஆர்வத்துடனும் பொறுமையுடனும் செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. உடன் இருப்பவர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் யாரையும் நம்பி எந்த ரகசியத்தையும் சொல்லாமல் இருப்பது நன்மை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு இருக்காது. உடல் நலனில் சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் உதவியால் வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். புதிதாக வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை வரும். புதிதாக எந்த முதலீட்டையும் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மங்களகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகாது. உடல் நலனில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சூழ்நிலை சாதகமாகவே இருக்கிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலின் அடுத்த கட்ட முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள். இருப்பினும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மாரியம்மனை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. வரவை விட செலவு அதிகமாகவே இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். மூன்றாவது நபரின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுவை சற்று அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். யாரையும் நம்பி எந்த முதலீட்டையும் செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மாற்றங்கள் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது. உடல் நலனில் கவனம் தேவை. ஒரு சிலர் விபத்துகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சுமாராக இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபத்தை பெற பல புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோசித்து செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிக அளவு பணவரவு ஏற்படும். உடல் நலனில் பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். யாரையும் நம்பி எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். யாரையும் நம்பாமல் தாமே அந்த வேலையை செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உடன் இருப்பவர்களை நம்பி எதிலும் கையெழுத்து இடுவதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நம்பிக்கை அதிகரிக்கும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த பணவரவு ஏற்படும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் தென்படும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். ஒரு சிலருக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். பொறுமையுடன் வேலையை செய்து முடிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். அதனால் மனதில் புது நம்பிக்கை ஏற்படும். சேமிப்பு ஏறும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாகவே திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. இருப்பினும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கடினமான உழைப்பிற்கு ஏற்ற பலனை பெறக்கூடிய மாதமாக திகழும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக செயல்படுவது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு கால பைரவரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வருமானம் அதிகரிக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிகளவு பண வரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.

வேலையை பொருத்தவரை வேலை சூழ்நிலை சாதகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிகமான லாபத்தை பெறுவீர்கள். இருப்பினும் உடன் இருப்பவர்களை நம்பாமல் தாமே செயலில் ஈடுபட்டு செய்வது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -