தைப்பொங்கல் 2024 பொங்கல் வைக்க நல்ல நேரம் எது.

pongal
- Advertisement -

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்முடைய முன்னோர்களின் வாக்கு. நம்முடைய கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் மறைந்து, தைப்பிருக்கும் நேரத்தில் நம்முடைய குடும்பத்திற்கு ஒரு நல்ல நேரம் பிறக்காதா என்று எதிர்பார்த்து, தமிழர்கள் அனைவரும் கொண்டாட கூடிய பண்டிகை இந்த தை பொங்கல். இதை மகர சங்கராந்தி என்றும் சொல்லுவார்கள்.

அறுவடை செய்யக் கூடிய இந்த தினத்தில் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது. உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களும் கொண்டாட கூடிய பண்டிகை இது. நம் எல்லோர் மனதிலும் சந்தோஷம் நிறைவாக இருக்கின்றது. இந்த வருடம் தைப்பொங்கலை எந்த நேரத்தில் வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பொங்கல் வைக்க நல்ல நேரம்

சில பேர் ‘சூரிய பொங்கல்’ என்று காலையிலேயே சூரியன் உதயமாகும் சமயத்திற்கு முன்பாகவே பொங்கல் வைத்து, சூரிய உதயமாக கூடிய நேரத்தில் அந்த சர்க்கரை பொங்கலை சூரிய பகவானுக்கு படைத்து, கொண்டாடுவார்கள். இதை ‘சூரிய பொங்கல்’ என்று சொல்லுவார்கள். சில பேர் நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பார்கள். நாம் சூரிய பொங்கல் வைக்கக்கூடிய நேரத்தையும் பார்த்து விடுவோம். நல்ல நேரம் எது என்பதையும் பார்த்துக் கொள்வோம். உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் பொங்கல் வைத்துக் கொள்ளுங்கள்.

சூரிய பொங்கல் வைக்கக்கூடிய நேரம். 15-1-2024 திங்கட்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு சூரிய பொங்கல் வைத்து விடுங்கள். பொங்கல் பொங்கி தயாராக 6:00 மணி ஆகிவிடும். 6 மணிக்கு சூரிய பகவான் அப்படி கிழக்கு பக்கம் உதிக்கும் போது, அந்த சூரிய பகவானுக்கு இந்த பொங்கலை படைக்கும் போது, உங்கள் மனதில் ஒரு சந்தோஷம் எழும் பாருங்கள்.

- Advertisement -

அதை வார்த்தையால் இந்த பதிவில் சொல்லி விட முடியாது. 6 மணிக்கு சூரியன் அப்படி உதயமாகும் போது பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்தை எழுப்பி குடும்பத்தோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடலாம். இவ்வளவு அதிகாலை வேலையில் எங்களால் பொங்கல் வைக்க முடியாது என்பவர்கள் காலை 6:45 மணியிலிருந்து 7:30 க்குள் பொங்கல் வைத்து சாமி கும்பிடலாம்‌.

அதுவும் எங்களுக்கு முடியாது என்பவர்கள் காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபாடு செய்யலாம். இதுவும் உங்களால் முடியாதா. மதியம் 12:00 மணியிலிருந்து 2:00 மணி வரை இதற்கு இடைப்பட்ட காலத்தில் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைத்தும் வழிபாடு செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க போகி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா. நாளைய தினம் காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்குள் பொங்கல் வைக்க கூடாது. காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணி வரை பொங்கல் வைக்க கூடாது. இது இரண்டும் ராகுகால நேரம். அதையும் கொஞ்சம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

- Advertisement -