கண் திருஷ்டி நீங்க போகி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

bogi1
- Advertisement -

இந்த வருடம் போகி பண்டிகையானது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. கண் திருஷ்டியை நீக்க இந்த ஞாயிற்றுக்கிழமை ரொம்ப ரொம்ப உகந்த நாள். நம் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை எல்லாம் இந்த போகி நெருப்பில், எப்படி வெளியேற்றுகின்றோமோ, அதே போல நம் உடம்பை பிடித்திருக்கும் கண்திருஷ்டி, பீடை தரித்திரத்தையும், வெளியேற்ற இந்த போகிநாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரம் இருக்கிறது. அதைத்தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கண் திருஷ்டி நீங்க போகி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

சில வீடுகளில் போகி கொளுத்தும் வழக்கம் இருக்கும். சில ஊர்களில் போகி கொளுத்தும் வழக்கம் இருக்காது. உங்களுடைய வீட்டில் போகி நெருப்பு மூட்டினாலும் சரி, இல்லை போகி கொளுத்தும் வழக்கம் இல்லை என்றாலும் சரி, இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு 3 பொருட்கள் தேவை.

- Advertisement -

மிளகு, கல்லுப்பு, வர மிளகாய். ஒரு சிவப்பு நிற துணியில் மிளகு 5, கல்லுப்பு 1 ஸ்பூன், சிவப்பு மிளகாய் 3, வைத்துக் கொள்ளுங்கள். அந்த சிவப்பு துணியை முடிச்சாக கட்டி தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அத்தனை முடிச்சு தனித்தனியாக தயார் செய்ய வேண்டும்.

போகி நெருப்பு கொளுத்தும் சமயத்தில் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் அந்த நெருப்பை சுற்றி நிற்போம் அல்லவா. சிவப்பு துணியில் கட்டி வைத்திருக்கும் இந்த முடிச்சை இடது கையால் எடுத்து, தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் போட்டு விட வேண்டும். குழந்தைகளுக்கு அம்மா செய்யலாம். கணவருக்கு மனைவி செய்யலாம். உங்களுக்கு நீங்களே இந்த முடிச்சை எடுத்து உங்கள் தலையை சுற்றி நெருப்பில் போட்டு திருஷ்டி கழித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

போகி பண்டிகை அன்று இப்படி செய்தால் உங்கள் உடம்பை பிடித்த பீடை கண் திருஷ்டி எல்லாம் நீங்கிவிடும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த முடிச்சை அந்த போகி நெருப்பில் போடும்போது உங்கள் உடம்பைப் பிடித்த கண் திருஷ்டி எல்லாம் அந்த நெருப்போடு நெருப்பாக எரிந்து வெடித்து சிதறி பொசுங்கி போகும்.

ஒருவேளை உங்களுடைய வீட்டில் போகிக் கொளுத்தும் பழக்கம் இல்லையா. இந்த முடிச்சுகளை எல்லாம் தலையை சுற்றிக் கொள்ளுங்கள். வீட்டுக்கு வெளியே இந்த முடிச்சுகளை எல்லாம் மொத்தமாக வைத்து, அதன் மேலே ஒரு கட்டி கற்பூரம் வைத்து, கொளுத்தி விடுங்கள். இந்த முடிச்சுக்குள் இருக்கும் பொருட்கள் எல்லாம் நெருப்போடு நன்றாக எரிந்து சாம்பலாகும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: மங்களங்கள் உண்டாக மஞ்சள் பிள்ளையார்

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேலை 3.00 மணியிலிருந்து 4.30 முப்பதுக்குள் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை போகி கொளுத்தக்கூடிய நேரமும் இதுதான். போகி கொளித்துவிட்டு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கையோடு சென்று தலைக்கு குளிச்சிடனும். அப்போது தான் நம்மை பிடித்த கெட்டது எல்லாம் நம் உடம்பை விட்டுப் போகும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -