தைப்பூச சிறப்புகளும் வழிபாடுகளும்

thai poosam
- Advertisement -

தைப்பூசம் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருபவர் முருகப்பெருமானே. அதிலும் குறிப்பாக பழனியில் இருக்கக்கூடிய முருகப் பெருமானின் ஆலயத்தில் மிகவும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். உலகில் இருக்கக்கூடிய அனைத்து தமிழர்களும் தமிழ் கடவுள் ஆன முருகனை கண்டிப்பான முறையில் தைப்பூச நாளில் வழிபடுவார்கள். அவ்வளவு சிறப்பு மிக்க தைப்பூசத்தை எப்படி பயன்படுத்திக் கொண்டால் நம் வாழ்வில் வெற்றிகளை குவிக்க முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று பூச நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய தினம் தான் தைப்பூசமாக கூறப்படுகிறது. இந்த தைப்பூச திருநாள் அன்று முருகப் பெருமானை அனைவரும் வழிபடுவார்கள். அவரை தவிர்த்து இந்த தைப்பூச திருநாளில் தான் வள்ளலார் ஜோதி வடிவில் ஐக்கியமானார். அதனால் வள்ளலார் ஆலயத்தில் ஜோதி திருவிழா தைப்பூச தினத்தன்று தான் நடைபெறும்.

- Advertisement -

மேலும் சிவபெருமானும் பார்வதி அம்மனும் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் புரிந்து தரிசனம் தந்த நாளும் இந்த தைப்பூச திருநாள் தான். அதனால்தான் இந்த தைப்பூச திருநாளில் முருகன் ஆலயத்திலும் சிவபெருமான் ஆலயங்களிலும் பல சிறப்பு மிகுந்த வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதை திருவிழாவாகவே கொண்டாடும் கோவில்களும் இருக்கிறது.

தேவர்களுக்கு குருவாக திகழக்கூடியவர் பிரகஸ்பதி. இவருக்குரிய நட்சத்திரமாக தான் பூச நட்சத்திரம் திகழ்கிறது. இன்றைய தினத்தன்று நாம் வழிபாடு மேற்கொண்டு வருவதன் மூலம் நமக்கு சிறந்த ஞானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் வாயு பகவானும், வர்ண பகவானும், அக்னி பகவானும் சிவபெருமானின் சக்தியை உணர்ந்த நாளாக இந்த நாள் திகழ்கிறது.

- Advertisement -

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த தைப்பூச தினத்தன்று நாம் புதிதாக எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி ரீதியான முயற்சிகளை எடுப்பதற்கும் அல்லது சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கும் இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. இந்த தைப்பூச திருநாள் அன்று நாம் முருகப் பெருமானையும், சிவபெருமானையும் சேர்த்து வழிபட வேண்டும்.

அன்றைய தினம் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சிவபெருமானின் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது தேவாரம், திருவாசகம் இவற்றை பாராயணம் செய்ய வேண்டும். மேலும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பு. பால், பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டு இருக்கலாம்.

- Advertisement -

மாலை நேரத்தில் முருகப்பெருமானுக்கு தங்களால் இயன்ற அபிஷேக அர்ச்சனைகளை செய்து கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர முருகர் மந்திரம்

இப்படி வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய வறுமை அனைத்தும் நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும். துன்பங்கள் நீங்கி இன்பம் உண்டாகும்.

- Advertisement -