தை செவ்வாய் வீரபத்திர வழிபாடு

veerabathirar
- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கிறது. அந்த சக்திகளின் அருளால் நமக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்றால் அந்த தெய்வத்தை வழிபட வேண்டும். அப்படி வழிபடும் பொழுது அந்த தெய்வத்திற்குரிய நாட்களை தேர்வு செய்து வழிபடுவதன் மூலம் நல்ல பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் எதிரிகளின் தொல்லைகளை விரட்டி அடித்து தீய சக்திகளை ஓட விடும் வீரபத்திரரை தை செவ்வாய்க்கிழமை எப்படி வழிபாடு செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சிவபெருமானின் அவதாரமாக கருதப்படுபவர் தான் வீரபத்திரர். இவரை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லையை நீக்குவார். மேலும் தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி அடிப்பார். நியாயமான கோரிக்கை எதை வைத்தாலும் அதை உடனே நிறைவேற்றக்கூடிய அற்புதமான தெய்வமாக வீரபத்திரர் திகழ்கிறார். இவரை முறையாக வழிபடுவதன் மூலம் பல நல்ல பலன்களை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

தை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் விஷேஷகரமான ஒன்றாக திகழ்கின்றது. இந்த செவ்வாய்க்கிழமை அன்று குலதெய்வத்தை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. பொதுவாக செவ்வாய்க்கிழமை என்றதும் முருகப்பெருமானையும் துர்க்கை அம்மனையும் வழிபடுவோம். அதேபோல் தை மாதம் ஒரு செவ்வாய்க்கிழமையாவது வீரபத்திரரை நம் மனதார வழிபட்டோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லைகள் அனைத்தையும் நீக்கி நமக்கு நன்மையை வாரி வழங்குவார்.

வீரபத்திரரின் படம் இருந்தால் அந்த படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்துக் கொள்ளலாம். அவரின் படம் இல்லாத பட்சத்தில் சிவபெருமானின் படத்திற்கே நாம் அலங்காரம் செய்து கொள்ளலாம். வீரபத்திரரை வழிபடுவதற்குரிய நேரமாக பிரம்ம முகூர்த்த நேரம் திகழ்கிறது. அவ்வாறு பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபட இயலாதவர்கள் ராகு காலத்தில் வழிபடலாம்.

- Advertisement -

இப்படி வீரபத்திரரை வழிபடும் பொழுது அவருக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருள் அல்லது உலர் திராட்சை, கற்கண்டு, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் இவற்றை வைத்து வழிபட வேண்டும். பிறகு அவருக்கு முன்னால் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து அவருடைய மந்திரத்தை மனதார 27 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

- Advertisement -

ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே
பக்தரக்ஷகாய தீமஹி
தந்நோ வீரபத்ர: ப்ரசோதயாத்

வீரபத்திரரை மனதார நினைத்து ஒரு வருட காலம் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் அவரை வழிபட்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிப்பதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிரிகள், தீய சக்திகள் மற்றும் தடைகள் அனைத்தையும் விலக்கி சுகமான வாழ்க்கையை அருள்வார். தை மாதம் வரக்கூடிய அனைத்து செவ்வாய்க்கிழமையும் வீரபத்திரருக்கு உகந்த தினங்களே. அனைத்து செவ்வாய்க்கிழமையும் வழிபடலாம் அல்லது தை மாதத்தில் வரக்கூடிய ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமை மட்டுமாவது அவரை வழிபடுவர் வேண்டும்.

இதையும் படிக்கலாமே: காரிய தடை விலக விநாயகர் வழிபாடு

தீய சக்திகளை விரட்டியடிக்கும் அற்புதமான தெய்வமான வீரபத்திரரை நாமும் மனதார நம்பிக்கையுடன் வழிபட்டு நன்மைகள் பல பெறுவோம்.

- Advertisement -