தீர்க்க சுமங்கலி வரம் பெற தை வெள்ளி வழிபாடு

mangalyam
- Advertisement -

எல்லா பெண்களின் வேண்டுதலும் இதுதான். கடைசி காலம் வரை தீர்க்க சுமங்கலையாக வாழ வேண்டும். கணவரின் மடியில் உயிர் பிரிய வேண்டும் என்று நினைப்பார்கள். பெண்களின் இந்த வேண்டுதல் நிறைவேற அவர்களுக்கு, தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி வரத்தை பெற வேண்டும் என்றால் தை மாதம் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் கட்டாயம் பின் சொல்லக்கூடிய பூஜையை வீட்டில் செய்யணும்.

இதை செய்தாலே போதும். உங்களுக்கான தீர்க்க சுமங்கலி வரம் கிடைத்துவிடும். ஆயுல் முழுவதும் நீங்கள் கணவரோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்வீர்கள். சரி அந்த தை மாத வெள்ளிக்கிழமை சுமங்கலி பூஜை வழிபாடு எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

தை வெள்ளி சுமங்கலி பூஜை வழிபாடு

தை மாதத்தில் வரக்கூடிய ஒரு வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த வெள்ளிக்கிழமை சௌகரியப்படுமோ அந்த வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளணும். சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்யக்கூடிய பொருட்களை உங்கள் வசதிக்கு ஏற்ப வாங்கி வைத்துக் கொள்ளணும்.

புடவை, ரவிக்கை, வளையல், மஞ்சள், குங்குமம், சீப்பு, சின்ன கண்ணாடி, மருதாணி, வெற்றிலை பாக்கு, பூ, பழம், இந்த பொருட்களில் உங்களால் எது வாங்க முடியுமோ அதை வாங்கிக்கணும். ஒற்றைப்படையில் வாங்கணும். ஐந்து சுமங்கலி பெண்களை வீட்டிற்கு கூப்பிட்டு கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் மூன்று பெண்களுக்கு கூட இந்த பொருட்களை தானம் கொடுக்கலாம்‌.

- Advertisement -

புடவை ரவிக்கைத் துணி எல்லாம் எங்களால் வாங்க முடியாது என்பவர்கள் வெற்றிலை பாக்கு, விரலி மஞ்சள், பூ, வாழைப்பழம், இந்த தாம்பூலத்தை மட்டுமாவது வாங்கி சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுப்பது சிறப்பு. இதோடு முடிந்தால் ஒரு நல்ல ரவிக்கை துணி வைத்தால் இன்னும் சிறப்பு. அதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாங்கிய இந்த மங்களப் பொருட்களை எல்லாம் ஒரு தாம்பூல தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி உங்களால் முடிந்த ஒரு சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து வைத்து உங்கள் வீட்டில் மறைந்த சுமங்கலி பெண்களை எல்லாம் நினைவு கூர்ந்து வழிபாடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமை பூஜை எப்படி செய்வீங்க விளக்கு ஏற்றி, தீப தூபம் ஆரத்தி எல்லாம் காண்பித்து, சிறப்பாக வழிபாட்டை செய்யவும்.

- Advertisement -

வழிபாடு முடிந்த பிறகு உங்கள் வீட்டிற்கு வந்திருக்கக் கூடிய சுமங்கலி பெண்களுக்கு பாத பூஜை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. பாத பூஜையை முடித்துவிட்டு அவர்களுடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, அவர்களுக்கு நீங்கள் செய்த சர்க்கரை பொங்கலை பிரசாதமாக கொடுத்துவிட்டு, வாங்கி வைத்திருக்கும் மங்களப் பொருட்களை எல்லாம் தாம்பூல தட்டில் வைத்து கொடுத்துவிட்டு குங்குமம் கொடுக்க வேண்டும்.

அந்த குங்குமத்தை அவர்கள் தங்களுடைய நெற்றியிலும், மாங்கல்யத்திலும் இட்டுக் கொள்வார்கள். உங்களுடைய நெற்றியிலும் மாங்கல்யத்திலும் இட்டு விடுவார்கள். அதன் பிறகு மன நிறைவோடு பூஜையை முடித்துக் கொள்ளுங்கள். வந்தவர்களை எல்லாம் மனநிறைவோடு வழி அனுப்பி வையுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் வயதான தம்பதியர்கள் யாராவது இருந்தால் அந்த சுமங்கலியை கூப்பிட்டு இந்த வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

இதையும் படிக்கலாமே: தை பௌர்ணமி வழிபாடு

அவர்களுடைய ஆசிர்வாதத்தை நாம் பெரும் போது நமக்கு தீர்க்க சுமங்கலி பிரார்த்தம் கிடைத்துவிடும். அந்த மகாலட்சுமியின் அருளும் முழுமையாக கிடைக்கும். இந்த தை மாதத்தில் வரக்கூடிய வெள்ளி கிழமையில் எப்போது முடிகிறதோ அப்போது இந்த வழிபாட்டை உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எளிமையாக செய்யுங்கள். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -