பிரியாணி சுவையில் தக்காளி சாதம், ஆச்சரியமாக உள்ளதா? வாருங்கள் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

சமைப்பதற்கு எளிமையாக இருக்கும் என்பதனாலும், குறைந்த அளவு நேரமே செலவாகும் என்பதனாலும் வீட்டில் தக்காளி சாதத்தை அடிக்கடி செய்வதுண்டு. எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தயார் செய்யக்கூடிய இந்த தக்காளி சாதத்தை அடிக்கடி செய்து கொடுத்தாலும் அதன் சுவை, சாப்பிடுபவர்களுக்கு சலிப்புத் தன்மையை உண்டாக்கி விடும். ஆனால் இதனையே பிரியாணி சுவையில் சமைத்து கொடுத்தோம் என்றால் எத்தனை முறை செய்தாலும் வீட்டில் உள்ளவர்கள் எதுவும் சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

thakkali

தக்காளி சாதத்தை பிரியாணி சுவையில் சமைப்பதற்கு முதலில் அதில் சேர்க்க வேண்டிய ஒரு ரகசிய மசாலாவை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிரியாணி மசாலாவிற்கு தேவையான பொருட்கள் :
பட்டை – 100 கிராம்
ஏலக்காய் – 50 கிராம்
கிராம்பு – 50 கிராம்.

- Advertisement -

இவற்றை வெயிலில் நன்றாக காய வைத்தோ, அல்லது கடாயில் வறுத்தோ எடுத்துக்கொள்ளலாம். பிறகு அவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை தான் பாய் வீடுகளில் பிரியாணி செய்யும் பொழுது சேர்த்து சமைப்பார்கள். எனவே தான் அவர்களின் பிரியாணி எப்பொழுதும் ஒரு தனி சுவையில் இருக்கும்.

masala

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் – அரை கிலோ, எண்ணெய் – 50 கிராம், நெய் – 2 ஸ்பூன், வெங்காயம் – 200 கிராம், தக்காளி – 250 கிராம், இஞ்சி, பூண்டு விழுது – 3 ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, புதினா – ஒரு கைப்பிடி, கருவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பிரியாணி இலை – இரண்டு, சோம்பு – அரை ஸ்பூன், பிரியாணி மசாலா – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியில் தண்ணீர் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஊற வைத்த அரிசியை சமைக்கும்பொழுது அரிசி உடையாமலும், விரைவாகவும் வெந்துவிடும்.

basmathi arisi

அடுப்பைப் பற்றவைத்து அதில் ஒரு குக்கரை வைத்து அதனுள் எண்ணை மற்றும் நெய் சேர்க்க வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும் அதனுடன் சோம்பு மற்றும் பிரிஞ்சி இலை சேர்க்க வேண்டும். இவை நன்றாக பொரிந்ததும் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் 3 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுதினை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் கருவேப்பிலை, தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பிரியாணி பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து கிளறவேண்டும். பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்க்க வேண்டும். நீங்கள் இரண்டு டம்ளர் அரிசி எடுத்திருந்தால் 3 டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும்(அரிசியை பொறுத்து இது மாறுபடும்). தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்துவிட வேண்டும். இப்பொழுது இவற்றுடன் உப்பு சேர்த்து சுவையை சரிபார்த்து குக்கரை மூடி விட வேண்டும்.

cooker

குக்கரில் இருந்து காற்று வெளி வரும் வரை அடுப்பின் தீயை அதிகமாக வைத்திருக்க வேண்டும். பிறகு விசில் போட்டு அடுப்பின் தீயை குறைத்து 7 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். அதன் பின் அடுப்பை அனைத்து விட வேண்டும். விசில் வரும்வரை வைக்காமல் இவ்வாறு சிறிய தீயில் வேக வைத்தால் சாதம் அடி பிடிக்காமல், குழையாமல் உதிரியாக கிடைக்கும்.

thakkali sadham

தயாரான தக்காளி சாதத்தினை நீங்கள் பரிமாறிக் கொடுத்தால் அனைவரும் பிரியாணி என்று நினைத்து தான் சாப்பிடுவார்கள். இதன் சுவையும் பிரியாணியின் சுவைக்கு நிகராகவே மிகவும் அசத்தலாக இருக்கும்.

- Advertisement -