சுவையான தக்காளி தொக்கை இப்படியும் செய்யலாம். 4 நாட்கள் ஆனாலும் இப்படி செய்யும் தக்காளி தொக்கு கெட்டுப்போவதற்கு வாய்ப்பே கிடையாது.

thakalli-thokku
- Advertisement -

எங்கயாவது டூர் செல்லும்போது சப்பாத்தி இட்லிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான ஒரு தக்காளி தொக்கு இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். நீங்கள் பிக்னிக் செல்வதாக இருந்தாலும் சரி அல்லது வீட்டிலேயே இந்த தக்காளி தொக்கை செய்து வைத்துக் கொண்டாலும் சரி, நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை இந்த தக்காளி தொக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். தேவைப்படும்போது எடுத்து சைட் டிஷ்ஷாக பயன்படுத்திக் கொள்ளலாம். சூப்பரான சுலபமான கெட்டுப்போகாத தக்காளி தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோமா.

thakalli-thokku1

முதலில் ஒரு 15 மீடியம் சைஸில் இருக்கும் பழுத்த தக்காளி பழங்களை எடுத்து நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை நீளவாக்கில் மெல்லிசாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். நறுக்கிய தக்காளி பழங்கள் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு சிறிய உரலில் தோல் உரித்த பூண்டு பல் 10 லிருந்து 15, சிறிய நெல்லிக்காய் அளவு புளி, இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நன்றாக நசுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பூண்டு புளி விழுதும் அப்படியே இருக்கட்டும்.

thakalli-thokku2

ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரம் ஆக இருக்கட்டும். நல்லெண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு – 1 ஸ்பூன் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். கடுகு பொரிந்தவுடன் நசுக்கி வைத்திருக்கும் புளி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை மிளகாய் 1, சேர்த்து நறுக்கிய தக்காளி பழங்களை கடாயில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, 2 நிமிடங்கள் வரை இந்த தக்காளி பழங்களை கடாயில் இருக்கும் எண்ணெயில் நன்றாக வதக்கி விட வேண்டும். (உப்பு சேர்த்து தக்காளியை வதக்கும்போது தக்காளியில் இருந்து தானாக தண்ணீர் விட்டு வரும்.)

- Advertisement -

தக்காளியில் இருந்து பிரிந்து வரும் தண்ணீரிலேயே தக்காளியை 10 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இடையிடையே கரண்டியை வைத்து கடாயில் இருக்கும் தொக்கை கலந்து விடுங்கள். 10 நிமிடங்கள் தக்காளி பழங்கள் நன்றாக வெந்து வந்தவுடன் 1 டேபிள்ஸ்பூன் அளவு மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் அளவு மஞ்சள்தூள் சேர்த்து கடாயில் இருக்கும் தொக்கை நன்றாக கலந்து விட்டு, மீண்டும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு 15 நிமிடங்கள் இந்த தொக்கை நன்றாக சிவக்க வைத்து எடுத்தால் போதும் சூப்பரான தக்காளி தொக்கு தயார். (தேவைப்பட்டால் உங்கள் காரத்திற்கு ஏற்ப இன்னும் கொஞ்சம் மிளகாய் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்த பொடியை தான் இந்த தொக்கிற்க்கு பயன்படுத்த வேண்டும். குழம்பு மிளகாய் பொடி, சாம்பார் பொடி போட்டால் தொக்கு ஒரு நாளைக்கு தான் நன்றாக இருக்கும். மறுநாள் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.)

thakalli-thokku3

இந்த தக்காளி தொக்கினை ஈரமில்லாத பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொண்டால், 5 நாட்கள் வரை கூட கெட்டுப் போகாமல் இருக்கும். இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் சைட்டிஷ். தேவைப்பட்டால் வடித்த சுடச்சுட சாதத்தில் இந்த தொக்கை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மிக்ஸி ஜாரில் அரைத்து செய்யக்கூடிய தக்காளி தொக்கை விட இப்படி தக்காளிகளை வெட்டிப் போட்டு ஒரு முறை உங்களுடைய வீட்டில் தொக்கு செய்து பாருங்கள். இந்த தொக்கின் சுவை உங்களுடைய நாக்கில் ஒட்டிக்கொள்ளும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -