ஏற்கனவே எழுதப்பட்ட உங்கள் தலையெழுத்தை இந்த கோவிலுக்கு சென்றால் படைத்த பிரம்மனே மாற்றி எழுதுவாராம் தெரியுமா? நம் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி!

bramma
- Advertisement -

ஒரு மனிதன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் பொழுதே அவன் தலையெழுத்து எழுதி விடப்படுகிறது. அனைத்து ஜீவராசிகளுடைய தலையெழுத்தை எழுதக்கூடிய பிரம்ம தேவர் ஒரு முறை எழுதிவிட்டால் அது சாகும் வரை மாறுவது கிடையாது. அவரவர் செய்த கர்மாவை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது விதியாகும். அப்படி இருக்க நம் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி இந்த கோவிலுக்கு இருக்கிறதாம்! அது என்ன கோயில்? அதன் வரலாறு என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

புவியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் நம் தலையெழுத்து சரியாக அமையவில்லை என்று ஏதாவது ஒரு சூழ்நிலையில் புலம்பிக் கொண்டு தான் இருப்போம். ஆனால் எல்லோருடைய தலையெழுத்தையும் இந்த கோவில் மாற்றி அமைத்து விடுவது கிடையாது. தலையெழுத்து மாற வேண்டும் என்கிற விதி இருப்பவர்களுக்கு மட்டுமே இக்கோவிலுக்கு சென்று வரக்கூடிய பிராப்தம் இருக்குமாம்.

- Advertisement -

நம் தலையெழுத்தை யாராவது மாற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று நாம் என்றாவது சிந்தித்திருப்போம். அப்படி ஒரு விஷயம் இந்த கோவிலில் நடக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? திருச்சியில் இருக்கின்ற பிரம்மபுரீஸ்வரர் என்னும் கோவிலில் தான் இவ்வதிசயம் நடைபெறுகிறது. பிரம்ம தேவருக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து விமோசனம் பெற இங்கு வந்து தான் சிவ பார்வதியை வணங்கி வழிபட்டாராம்.

பிரம்மதேவருடைய சாபத்தை நீக்கி அவருக்கு காட்சியளித்த சிவபெருமான் இங்கு வந்து எம்மையும், உம்மையும் வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் ‘விதி இருந்தால் மதி செய்க’ என்று வரம் ஒன்று அளித்தாராம். அதாவது விதியை மாற்றி அமைக்கக்கூடிய அம்சம் ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால் அவர் நிச்சயம் இங்கே வருவார். அவருடைய விதியை நீங்கள் உன்னுடைய மதியால் மாற்றி எழுதலாம் என்று வரம் நல்கினார் சிவபெருமான்.

- Advertisement -

தமிழ் மாதங்களில் எல்லா மாதங்களிலும் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைய முடிவது கிடையாது. சித்திரை மாதம் மட்டுமே இங்கு வந்து தங்களுடைய விதியை மாற்றிக் கொள்ள முடியுமாம். ஜாதகம் சரி இல்லாதவர்கள், வாழ்க்கையில் துன்ப நிலையை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், எப்படியாவது தன் விதி மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய ஜாதகத்தை அல்லது குடும்பத்தினர் யாருடைய ஜாதகம் தேவையோ அவர்களுடைய ஜாதகத்தை கொண்டு வந்து இங்கு வைத்து அவர்களுடைய பெயரில் ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
பணம் எப்போதும் தாராளமாக புழங்க இதை மட்டும் தினமும் உங்கள் கைகளில் கொஞ்சம் பூசிக் கொண்டால் போதும் பணத்தை காந்தம் போல ஈர்த்து நிரந்தரமாக கையில் தக்க வைத்து கொள்ளும்.

இங்கு வரும் பக்தர்கள் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வியாழன் கிழமையில் தங்களுடைய ஜாதக புத்தகத்தை வைத்து அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்வதால் தங்களுடைய விதி மாறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ‘விதியை மதியால் வெல்ல முடியும்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் நம் விதியை வெல்லக்கூடிய அந்த மதியை கொடுப்பதே ஒரு விதி தான் என்பதை இக்கோவில் நமக்கு உணர்த்துகிறது. நமக்கு நடக்கும் யாவும் நம்முடைய செயல்களால் அன்றி, மற்றவர்களுடைய செயல்களால் அல்ல.. என்பதை உணர்ந்து நமக்கு ஒரு கெடுதல் நடந்தால் அது நம்மால் நடந்தவை என்று நினைத்து அதற்குரிய பரிகாரத்தை செய்து நம்மை நாமே தான் திருத்திக் கொள்ள வேண்டும்.

- Advertisement -