பல வருடங்களுக்கு உங்களுடைய முடியை பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டுமா? இந்த பொடி போட்டு தலைக்கு குளிங்க உங்க முடி எந்த டேமேஜும் ஆகாது.

hair9
- Advertisement -

முடியை வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. முடியை வளர்த்து விட்டால் அதை பாதுகாப்பது அதைவிட மிக மிக கஷ்டமான ஒரு விஷயம். தலை முடியை அடர்த்தியாக வளர்க்கவும், வளர்த்த முடியை பத்திரமாக பாதுகாக்கவும் நாம் நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் ஒரு முயற்சியாக கூட இந்த குறிப்பை பின்பற்றி வரலாம். நம்முடைய தலையை சுத்தம் செய்வதற்கு பெரும்பாலும் ஷாம்பு தான் பயன்படுத்துகின்றோம். நேரமின்மை காரணமாக சிலர் ஷாம்புவை பயன்படுத்தலாம். சிலருக்கு சீயக்காய் போட்டு தலை கசக்குவதில் சிரமம் இருக்கலாம்.

இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் சரி அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, வாரத்தில் ஒரு நாள் ஆவது இந்த பொடியை பின் சொல்லக்கூடிய முறையை பின்பற்றி உங்களுடைய தலை முடிக்கு பயன்படுத்தி வாருங்கள். நிச்சயமாக உங்களுடைய தலை முடி ஆரோக்கியமாக அடர்த்தியாக பாதுகாப்பாக வளரும்.

- Advertisement -

இன்றைக்கு நாம் ஒரு தலை குளியல் பொடியை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்க கூடிய பொடி தான் இது. இதற்கு வெறும் நான்கு பொருட்கள் மட்டுமே போதும். பச்சைப்பயிறு 50 கிராம், பச்சரிசி 50 கிராம், வெந்தயம் 50 கிராம், சீயக்காய் 50 கிராம், இந்த நான்கு பொருட்களையும் வாங்கி நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு கடையில் கொடுத்து மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். கொரகொரப்பாக இருந்தால் தலைக்கு பயன்படுத்துவதில் சிரமம் இருக்கும். தேவைப்பட்டால் இந்த பொடியை சலித்துக் கூட நைசாக பயன்படுத்தலாம்.

நாம் தயார் செய்த இந்த பொடியை ஒரு காற்று புகாத கண்டைனரில் போட்டு ஸ்டோர் செய்து வைத்தால் மாதக்கணக்கில் கெட்டுப் போகாது. ஈரம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தலைக்கு எப்படி பயன்படுத்துவது. இன்றைக்கு சாதம் வடித்த கஞ்சியை எடுத்து மூடி போட்டு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை அந்த பழைய அரிசி வடித்த கஞ்சி தண்ணீரில் இந்த தலை குளியல் பொடியை கலக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டுக் கொள்ளுங்கள். இந்த தலை குளியல் பொடியோடு தேவையான அளவு முந்தைய நாள் எடுத்து வைத்த அரிசி வடித்த கஞ்சியை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலந்து மூடி போட்டு 2 மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். இதை ரொம்பவும் கட்டியாக கலக்க வேண்டாம். கொஞ்சம் தளதளவென கலந்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் ஊறிய பின்பு இதை தலைக்கு போட்டு தேய்த்து குளிக்க பயன்படுத்த வேண்டும்.

தலைக்கு குளிப்பதற்கு முன்பு உங்களுடைய தலையில் கட்டாயமாக தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்திருக்க வேண்டும். இப்படி தலைமுடியில் எண்ணெயை வைத்துவிட்டு அதன் பின்பு குளியல் பொடி போட்டு தலைக்கு குளிக்கும்போது தலைமுடி மிகவும் ஆரோக்கியமாக வளரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். டிரையாக இருக்கக்கூடிய தலையில் ஷாம்பு சியக்காயோ போட்டு தலைக்கு குளிக்க கூடாது இது முடி உதிர்வை அதிகப்படுத்தும்.

வாரத்தில் இரண்டு நாள், மூன்று நாட்கள் எல்லாம் மேல் சொன்ன குறிப்பை பின்பற்ற முடியாது என்பவர்கள் கூட, வாரத்தில் ஒரே ஒரு நாள் உங்களுக்கு லீவு கிடைக்கும் போது இந்த குறிப்பை பின்பற்றினால் கூட போதும். உங்களுடைய முடி பாதுகாப்பாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மூன்று மாதங்கள் பின்பற்றி வாருங்கள் ரிசல்ட்டை கண்கூடாக காணலாம்.

- Advertisement -