கரு கரு கூந்தல் நீளமாக அடர்த்தியுடன் வளர நெல்லிக்காயை தலைக்கு எப்படி முறையாக பயன்படுத்துவது தெரியுமா?

nellikkai-hair
- Advertisement -

தலைமுடியின் வேர் கால்களிலிருந்து முடியை வலுவாக்க கூடிய அதீத சக்தி நெல்லிக்காயில் உண்டு. இந்த நெல்லிக்காயுடன் சில பொருட்களை சேர்த்து அரைத்து தலைக்கு வாரம் இரண்டு முறை தடவி வந்தால் முடி கரு கருவென காடு போல அடர்த்தியாக நீளமாக வேகமாக வளரத் துவங்கும். ஆனால் பலருக்கும் நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது? என்பது தெரிவதில்லை. இந்த முறையில் நெல்லிக்காயை தலைக்கு பயன்படுத்தி பாருங்கள், இழந்த முடியை விரைவாக மீட்டு விடலாம்.

முதலில் நீங்கள் பயன்படுத்தும் நெல்லிக்காய் இயற்கையாக பிரஷ்ஷாக கிடைத்ததாக இருப்பது நல்லது. கடைகளிலிருந்து நெல்லிக்காய் பவுடர் வாங்குவதை விட நாமே நெல்லிக்காயை வாங்கி துண்டுகளாக்கி விதையுடன் சேர்த்து நன்கு உலர விட்டு விட வேண்டும். 7 நாட்கள் மிதமான வெயில் படும் இடங்களில் வைத்து உலர்த்தினால் நன்கு உலர்ந்துவிடும். உலர்ந்த இந்த துண்டுகளுடன், ஒரு கைப்பிடி அளவிற்கு காய்ந்த கறிவேப்பிலை இலைகளை சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை பவுடர் 3 ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். சோற்றுக் கற்றாழையில் இருந்து எடுத்த ஜெல் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நெல்லிக்காய் மற்றும் கற்றாழை ஜெல் உடலை குளிர்ச்சி அடைய செய்யும் என்பதால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். தலைபாரம், ஜலதோஷம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே இஞ்சிச் சாறு ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சியை இடித்து எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியில் இருக்கும் சூடு இதனை சமன் செய்து விடும். இதனால் உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது, தலைமுடியும் நீளமாக நன்கு வளரும். இஞ்சிச் சாறுடன் அரைமூடி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை பேஸ்ட் போல குழைக்க தேவையான அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். இந்த நெல்லிக்காய் பேஸ்ட் தலையின் வேர்கால்களில் நன்கு மசாஜ் செய்து பின்னர் தலைமுடி முழுவதும் தடவி வைத்து ஊற விட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் தலையில் ஊறினால் போதும் பின்னர் சாதாரணமாக நீங்கள் தலைக்கு குளிப்பது போல சென்று குளித்து விடலாம். இதனை பயன்படுத்தும் பொழுது ஷாம்பூ அல்லது சிகைக்காய் தூள் எதுவாக இருந்தாலும் நீங்கள் கவலைப்படாமல் தாராளமாக பயன்படுத்தலாம். ஷாம்பூ பயன்படுத்துபவர்கள் ஷாம்புவை முதலில் ஒரு மக் எடுத்துக் கொண்டு அதில் கால்வாசி அளவிற்கு தண்ணீரை நிரப்பி அதில் ஷாம்பூவை ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரை மட்டுமே தலைக்கு தடவி தலைமுடியை அலச வேண்டும். இதனால் ஷாம்பூவில் இருக்கும் தேவையற்ற கெமிக்கல் பாதிப்புகள் நமக்கு நேரடியாக வேர்களுக்கு போகாமல் இருக்கும். மேலும் ஷாம்பூ மைல்டாக இருக்கும் பொழுது நமக்கு அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் குறையும். இது போல் வாரம் 2 முறை மட்டும் நீங்கள் தொடர்ந்து செய்து வர ஒரு மாதத்திலேயே முடி உதிர்வது நின்று முடியின் வேர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து, செம்பட்டையான முடி கூட கருகருவென அடர்த்தியாக வளரத் துவங்கும்.

- Advertisement -