தள்ளுவண்டி கடை சாம்பாரின் ரகசியம் இதுதானா? இதனால தான் அவங்க வைக்கிற சாம்பார் மட்டும் அவ்வளவு ருசியா இருக்குதா.

sambar
- Advertisement -

சில தள்ளுவண்டி கடையில் கொஞ்சம் வித்தியாசமாக சாம்பார் நமக்கு கிடைக்கும். அதை சாப்பிட்டு பார்த்தால் முழுமையாக சாம்பார் சுவையும் இருக்காது. முழுமையாக குருமா சுவையும் இருக்காது. ஒரு விதமாக நல்ல மனத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும். சுட சுட இட்லிக்கு மேல் அந்த சாம்பாரை ஊற்றி கொடுப்பார்கள். அப்படி ஒரு சாம்பார் ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இதை தண்ணீர் குருமா அல்லது தண்ணீர் சாம்பார் எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். சரி ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் தேங்காய் துருவல் – 4 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், பொட்டுக்கடலை – 5 ஸ்பூன், சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் கொஞ்சமாகத்தான் சேர்க்க வேண்டும். பொட்டுக்கடலையை கொஞ்சம் அதிகமாக சேர்க்கும்போது இந்த சாம்பாரின் சுவை கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1 ஸ்பூன், வர மிளகாய் – 4 கிள்ளி போட்டுக் கொள்ளவும். பிறகு கருவேப்பிலை – 2 கொத்து, குறுக்கே கீறிய பச்சை மிளகாய் – 4, சின்ன வெங்காயம் – 10 பல், சேர்த்து நன்றாக வதக்குங்கள். பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – இரண்டு அல்லது மூன்று சேர்த்துக் கொள்ளவும்.

குழம்புக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் இவைகளை போட்டு தக்காளியை பச்சை வாடை போக வதக்கி விடுங்கள். பின்பு குழம்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன் போட்டு, இரண்டு வதக்கு வதக்கி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பெருங்காயம் – 1/4 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இந்த தண்ணீர் நன்றாக கொதி வந்த பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை இதில் ஊற்றி, கொஞ்சம் நிறைய தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதில் பொட்டுக்கடலை நாம் அதிகமாக சேர்த்து இருக்கின்றோம் அல்லவா. சாம்பார் கொதிக்க கொதிக்க திக்காகும்.

- Advertisement -

தேங்காய் அரவை ஊற்றிய பின்பு இந்த சாம்பார் நன்றாக கொதித்து வர வேண்டும். பச்சை வாடை அனைத்தும் நீங்கிய பின்பு இறக்குவதற்கு இரண்டு மூன்று நிமிடத்திற்கு முன்பு, 1 ஸ்பூன் சாம்பார் பொடியை இதன் மேலே தூவி நன்றாக கலந்து விடுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி சுடச்சுட இட்லிக்கு மேல் ஊற்றி சாப்பிட்டால் இதனுடைய சுவை சூப்பராக இருக்கும்.

கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி தான் இது. நீங்க ட்ரை பண்ணி பாருங்க. சுடச்சுட இட்லிக்கு மேலே ஊற்றி சாப்பிட இதை விட சூப்பர் சைடிஷ் வேற இருக்கவே முடியாது. இதற்கு பெயர் சாம்பார் என்றும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அல்லது தண்ணீர் குருமா என்றும் வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். சில தள்ளுவண்டி கடைகளில் இந்த சாம்பார் நமக்கு கிடைக்கும்‌. நிறைய பேர் இப்படிப்பட்ட சாம்பாரை நிறைய தள்ளுவண்டி கடைகளில் ருசித்திருக்க வாய்ப்பு உள்ளது. நீங்க ஏதாவது கடைகளில் இப்படிப்பட்ட சாம்பாரை சாப்பிட்டு இருக்கீங்களா? இந்த ருசி உங்களுக்கு பிடிச்சிருந்தா வீட்டுலயும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -