இந்த ஒரு வேர் உங்களிடம் இருந்தால் வீணாக செலவு செய்ய மாட்டீர்கள்! உங்களிடம் இருக்கும் பணமும் இரண்டு மடங்காகி விடும்.

cash-lotus-root

நாம் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டே இருப்பது பணத்தின் பின்னால் தான். உடம்பு சரி இல்லை என்றால் கூட ஒரு நாள் சம்பளம் போய்விடும் என்று வேலைக்கு செல்லும் நபர்களை பார்த்திருப்போம். பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு வாய் வரைக்கும் பணம் தான் முக்கியமா? என்று கேள்விகள் வந்துவிடும். ஆனால் அவர்களும் கடைசியில் பணத்தின் பின்னால் தான் சென்று கொண்டிருப்பார்கள் என்பது தான் உண்மை. ஆக நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீணாவதை நாம் தடுக்க விரும்புகிறோம். மேலும் மேலும் பணம் சேர்வதற்கு என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள்.

money

பணம் பல வழிகளில் வந்து நம்முடைய பாக்கெட்டை நிரப்பி விட்டு சென்றாலும் கூட, ஒரே நாளில் மீண்டும் பாக்கெட் காலியாகிவிடும். இதற்கு என்ன காரணம்? வீண் விரயங்களும், வீண் செலவுகளும் ஏற்படுவதற்கு உங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் காரணமாகும். அந்த எதிர்மறை ஆற்றல்களை நீக்கவும், நேர்மறை ஆற்றல்களை பெருக செய்யவும் இந்த வேர் சக்தியாக செயல்படுகிறது. லட்சுமியின் அம்சமமாக இருக்கும் இந்த வேரை மட்டும் நீங்கள் எடுத்து வந்து விட்டால் அதன் பிறகு ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம்.

தாமரை மலரின் வேரை காலை வேளையில் பறித்து எடுத்து வந்து காய வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வேரின் ஒரு சிறு துண்டை கூட மஞ்சள் துணியில் முடிந்து உங்களிடம் வைத்துக் கொண்டால் போதும். எப்பேர்பட்ட செலவாளிகள் கூட கஞ்சனாக மாறி விடுவீர்கள். எதற்கு தேவையோ அதற்காக மட்டுமே செலவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இவ்வேரின் மகத்துவமே தனித்துவமானது. இந்த வேரை வைத்திருந்தால் நம்மிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். மேலும் மேலும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

lotus-root

இந்த வேரை நீங்கள் உங்களுடைய மணி பர்சில் வைத்துக் கொள்ளலாம். இதனால் பர்சில் இருக்கும் பணம் இரட்டிப்பாக மாறும். வீணாக பணம் செலவாவது தடுக்கப்படும். உங்களுடைய எதிர்மறை சிந்தனைகள் உங்களை விட்டு சென்று விட்டால் தேவையில்லாத விஷயத்திற்காக நீங்கள் செலவு செய்யவும் மாட்டீர்கள். அத்தியாவசிய தேவைக்காக செலவு செய்ய ஆரம்பித்தாலே செலவுகள் கட்டுப்பட்டு, ஈட்டிய பணமும் நிரந்தரமாக நம்மிடம் தங்கிவிடும்.

- Advertisement -

ஒரு சிலர் எல்லாம் எதற்காக செலவு செய்கிறோம்? என்றே தெரியாமல் இஷ்டத்திற்கு பணத்தை செலவு செய்து கொண்டே இருப்பார்கள். சேமிப்பு என்பது கொஞ்சம் கூட அவர்களிடம் இருக்காது. கடைசி நேரத்தில் யாரிடமாவது கையேந்தி நின்று கொண்டிருப்பார்கள். பணம் இருக்கும் பொழுது அதனை சேர்த்து வைப்பது தான் உங்களுடைய மரியாதையை உயர்த்தும் என்பதை எப்பொழுதும் மறந்து விடக்கூடாது.

சோழி

உங்களுடைய பர்ஸில் அதே போல் சில சோழிகளை வைத்துக் கொள்ளுங்கள். குறி சொல்லும் சோழி பணத்தை இரட்டிப்பாக்கும் வேலையையும் செய்யும். சோழியை எப்பொழுதும் ஒற்றை படையில் வைத்திருங்கள். 3, 5, 7, 9 என்ற எண்ணிக்கையில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்திருந்தால் பணம் இரட்டிப்பாக சேருமாம். வீட்டில் சோழி வைத்திருந்தால் நல்லதா? என்கிற கேள்வியும் பலருக்கு இருக்கும். வீட்டில் சோழிகள் வைத்திருப்பது நல்லது தான். உங்கள் மனம் குழப்பமாக இருக்கும் சமயத்தில் சோழி போட்டு பார்த்து நீங்களே தெளிவான முடிவை எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த ஒரு பொருள் உங்களுடைய வீட்டில் இருந்தால் போதுமே! உங்கள் வீட்டையும், உங்கள் வீட்டில் இருப்பவர்களையும் எந்த ஒரு தோஷமும் தாக்குவதற்கு வாய்ப்பே கிடையாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.