கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் சண்டே சச்சரவுகள் நீங்க வழிபாட்டு முறை.

couple fighting
- Advertisement -

வாழ்க்கை என்னும் வண்டியில் கணவன் மனைவி என்பவர்கள் இரண்டு சக்கரங்கள். அதில் ஒன்று ஏதாவது ஒரு பிரச்சனை செய்தாலும் வாழ்க்கை என்ற வண்டி ஓடாது. அப்படி வாழ்க்கை என்ற வண்டி சீராக ஓட வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் ஒருவரின் மனநிலையை அறிந்து மற்றொருவர் செயல்பட வவேண்டும். ப்படி ஒற்றுமையுடன் செயல்படுவதற்கும் சண்டை சச்சரவுகள் எதுவும் வராமல் இருப்பதற்கும் என்ன வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம்.

ஆயிரம் காலத்து பயிர் என்று கூறப்படுவது தான் திருமண வாழ்க்கை. நம் வாழ்க்கையில் முக்கால் பாகம் கணவன் மனைவிக்காகவும் மனைவி கணவனுக்காகவும் வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்ட வாழ்க்கை நிம்மதியாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும் என்றால் ஜாதகரீதியாக சில கட்டங்களில் சுப கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பிரிந்து செல்வதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும்.

- Advertisement -

ஜாதகத்தில் எப்படிப்பட்ட பாவ கிரகங்களின் ஆதிக்கம் இருந்தாலும் இந்த முறையில் வழிபாடு செய்யும் பொழுது அவை அனைத்தும் நீங்கி கணவன் மனைவி அன்புடனும், ஒற்றுமையுடனும், ஆதரவுடனும் இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமையுடன் இருப்பதற்கு உதவக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் விளங்குகிறார். சுக்கிர பகவானுக்குரிய கிழமை என்றால் அது வெள்ளிக்கிழமை என்று அனைவருக்கும் தெரியும். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று நவகிரகங்களில் வீற்றிருக்கும் சுக்கிர பகவானிற்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

அவ்வாறு நெய் தீபம் ஏற்றும் பொழுது அந்த தீபத்தில் சிறிது டைமண்ட் கற்கண்டு சேர்த்து ஏற்ற வேண்டும். பிறகு சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற பூக்களை வாங்கி தர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அடுத்ததாக வெள்ளிக்கிழமை அன்று வரும் ராகு காலத்தில் கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் சிகப்பு நிறத்தில் உடை அணிந்து துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்று வேண்டும். பிறகு பாசிப்பருப்பு பாயாசத்தை துர்க்கை அம்மனுக்கு நெய்வேத்தியமாக வழங்கி அதை கணவனும் மனைவியும் உண்டு வர அவர்களுக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும்.

- Advertisement -

அதே வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் அர்த்தநாரீஸ்வரர் என்று கூறக்கூடிய சிவனும் பார்வதியும் சேர்ந்து இருக்கும் கோவில்களில் அவருக்கு கணவன் மனைவி இருவரின் பெயரில் அர்ச்சனை செய்து, பாலில் ஏலக்காய் மற்றும் கற்கண்டு சேர்த்து நெய்வேத்தியமாக கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வந்தாலும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இப்படி அர்த்தநாரீஸ்வரர் இல்லாத பட்சத்தில் சிவபெருமானுக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கோடி நன்மைகள் தரும் கோமாதா பூஜை.

இந்த எளிமையான வழிபாட்டு முறையை மேற்கொண்டால் கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய எப்பேற்பட்ட சண்டைகளாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

- Advertisement -