தாம்பூலம் கொடுக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது. இந்த தவறை செய்தால் தாம்பூலம் கொடுத்த பலனை முழுமையாக நம்மால் பெற முடியாது.

- Advertisement -

நம்முடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சில பரிகாரங்களை நாம் செய்கின்றோம். ஆனால் அந்த பரிகாரங்களை செய்யும் போது நம்மை அறியாமலேயே, நம்முடைய அறியாமையால் சில தவறுகளை செய்து விடுகின்றோம். அப்படி செய்யக் கூடிய ஒரு தவறை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் தொடர்ந்து மங்கல காரியங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும், வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க வேண்டும், வீட்டில் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கக்கூடிய தானம் தாம்பூல தானம்.

thambulam

அதாவது வெற்றிலை பாக்கு பூ பழம் மஞ்சள் குங்குமம் வளையல் ரவிக்கைத்துணி இப்படி வெற்றிலை பாக்குடன் எந்தெந்த பொருட்களை வைத்துக் கொடுக்க முடியுமோ அந்தந்த பொருட்களை வைத்து தானமாக கொடுப்பது நம் வழக்கம். இப்படியாக இந்த வெற்றிலை பாக்கு சேர்ந்த தாம்பூலத்தை பொது இடங்களில் வைத்து தானமாக கொடுக்கும் போது, அதாவது கோவில்களில் வைத்து தானமாக கொடுக்கும் போது, தானத்தை பெறுபவர் சுமங்கலியாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து சிலர், தானத்தை கொடுப்பார்கள். கணவனை இழந்தவர்கள் வந்து தாம்பூலத்தை கேட்டால், தாம்பூலத்தை கொடுப்பதற்கு சிலர் மறுப்பார்கள். அந்த சமயம் கணவரை இழந்தவர்கள் உடைய மனது நிச்சயமாக வருத்தப்படும்.

- Advertisement -

கணவன்மார்களை இழந்த பெண்களுக்கு வெற்றிலை பாக்கு சேர்த்த தாம்பூலத்தை தானமாக கொடுப்பது தவறு ஒன்றும் கிடையாது. அவர்கள் தங்களுக்காக அந்த தாம்பூலத்தை பெறுவது கிடையாது. அவர்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் சுமங்கலிப் பெண்களுக்கு தான், தான் வாங்கும் தாம்பூலத்தை கொடுக்கப் போகிறார்கள். இருப்பினும் நம் கையால் கைம்பெண்களுக்கு தாம்பூலத்தை கொடுப்பதா? என்று சிலர் அவர்களை உதாசீனப் படுத்துவது உண்டு.

thambulam-1

பரிகாரம் செய்வது நம்முடைய குடும்பத்தின் நன்மைக்காக. அந்த பரிகாரத்தை செய்யும் போது ஒரு பெண்ணின் மனது நோகும் படி நடந்து கொண்டு செய்யக்கூடிய பரிகாரத்திற்கு முழு பலனை நிச்சயம் நம்மால் அடையவே முடியாது. இப்படி கைம்பெண்களுக்கு நம்முடைய கையால் தாம்பூலத்தை கொடுத்தால் நமக்கு ஏதேனும் தோஷம் வந்துவிடுமோ என்ற பயமும் தேவையே கிடையாது. (இன்னும் ஒரு சில பேர் உள்ளார்கள், தானம் பெறுபவர் நம் குல தவறா? நம் சனத்தை சேர்ந்தவரா? என்றெல்லாம் பார்த்துக் கூட தானம் செய்வார்கள். அப்படி செய்யக்கூடிய தான் அதில் ஒரு போதும் நமக்கு பலன் கிடைக்காது.)

- Advertisement -

நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் அந்த ஆண்டவனின் கணக்கு என்ற ஒன்று இருக்கின்றது. நாம் பரிகாரத்தை செய்யும் போது நம் முன்னே யார் வந்து நின்றாலும் சரி, அது சுமங்கலிப் பெண்களாக இருந்தாலும் சரி, கன்னிப் பெண்களாக இருந்தாலும் சரி, சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி, கைம் பெண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தெய்வத்தின் அம்சம் பொருந்தியவர்கள் தான்.

thambulam-2

நாம் கொடுக்கக்கூடிய தானத்தை யார் ஏற்க வேண்டுமென்று முடிவு செய்யப்போவது அந்த ஆண்டவன். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கும் அந்த குறிப்பிட்ட நபர்களை நாம் என்றைக்குமே மனது நோகும் படி நடத்தக்கூடாது. அவர்கள் அந்த ஆண்டவனின் சொரூபமாக பட்டவர்கல் தான்.

vetrilai-pakku-pazham

பரிகாரத்தை செய்வது புண்ணியத்தை தேடிக் கொள்வதற்காக, ஆனால் அதே பரிகாரத்தை செய்து யாரும் பாவத்தைத் தேடிக் கொள்ளக்கூடாது. இனி நீங்கள் யாருக்கேனும் தாம்பூலம் கொடுப்பதாக இருந்தால், ஏழை பணக்காரர்கள், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள், கைம் பெண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தாம்பூலம் கேட்கும்போது மனதார கொடுங்கள். அதன் மூலம் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. கைம்பெண்கள் ஆக இருந்து அவர்கள், தாம்பூலத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் வராது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -