டல் அடிக்கும் தங்க நகையை, இரண்டு நிமிடத்தில் டால் அடிக்கும் தங்க நகையாக மாற்ற ஒரு சூப்பர் ஐடியா. இந்த ஐடியா தெரிஞ்சா, பழைய நகை எல்லாம், புது நகைகள் போல ஜொலி ஜொலிக்கும்.

gold1
- Advertisement -

பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி நிரந்தரமாக ஏதாவது ஒரு தங்க நகையை அணிந்திருப்பது வழக்கமாக இருக்கும். குறிப்பாக பெண்கள் பெரும்பாலும் தங்க நகை இல்லாமல் இருப்பது இல்லை. தினம்தோறும் அணிந்திருக்கக்கூடிய இந்த தங்க நகை ஒரு சில நாட்களிலேயே அழுக்கு படிந்து மங்கிப் போய், ஜொலி ஜொலிப்பை இழந்து விடும். உடம்போடு போட்டிருக்கும் தங்க நகைகளை பார்த்தால் கவரிங் நகைகள் போல பொலிவிழந்து காணப்படும். இப்படி மங்கி காணப்படக்கூடிய தங்க நகைகளை புதுசு போல மாற்றுவதற்கு ஒரு சூப்பரான வீட்டுக்குறிப்பு இதோ உங்களுக்காக.

பழைய தங்க நகையை வீட்டிலேயே புதுசு போல மாற்றுவது எப்படி:
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பழைய தங்க நகைக்கு இந்த முறையில் பாலிஷ் போடுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் தங்க நகைகள் மூழ்குவதற்கு ஏற்ப குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். தண்ணீர் நன்றாக கொதி வந்ததும் அதில் 1 ஸ்பூன் ஆப்ப சோடா போட்டு கொதிக்க வைத்து, அந்த கொதிக்கின்ற தண்ணீரில் பழைய தங்க நகைகளை போட வேண்டும்.

- Advertisement -

கொதிக்கின்ற ஆப்ப சோடா தண்ணீரில் தங்க நகைகளை போட்டால் எதுவுமே ஆகாது. இரண்டிலிருந்து மூன்று நிமிடம் அடுப்பில் வைத்து தண்ணீரை, நகைகளுடன் அப்படியே கொதிக்க வைக்கலாம். உங்களுக்கு இதில் விருப்பமில்லை. கொடுக்கின்ற தண்ணீரில் நகையை போட பிடிக்கவில்லை. பயமாக இருக்கிறது என்றால், கொதிக்கின்ற தண்ணீரில் ஆப்ப சோடாவை போட்டுவிட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு அந்த சுடுதண்ணீரில் தங்க நகைகளை போட்டு நன்றாக ஊற வைத்து விடுங்கள்.

தண்ணீர் சூடு ஆறும் வரை, நகை அந்த ஆப்ப சோடா தண்ணீரிலேயே ஊறட்டும். இந்த ஃபர்ஸ்ட் ஸ்டெப்லேயே தங்க நகையில் இருக்கக்கூடிய அழுக்கு மொத்தம் நீங்கிவிடும். தண்ணீர் ஆறியதும் ஆப்ப சோடா கலந்த தண்ணீரில் இருந்து நகையை எடுக்கும் போது, வித்தியாசம் தெரியும். சுடுதண்ணீரில் போட்டு ஊற வைத்த தங்க நகைகளை சாதாரண தண்ணீரில் போட்டு விடுங்கள். பிறகு கொஞ்சமாக தலைக்கு போடும் ஏதாவது ஒரு ஷாம்புவை பல் தேய்க்கும் பிரஷ்ஷில் தொட்டு, நகைகளை லேசாக தேய்த்துக் கொடுக்க வேண்டும். அப்போது அந்த நகையில் ஒட்டி இருக்கும் மிச்சம் மீதி அழுக்கும் ஆப்ப சோடா முழுவதும் நீங்கிவிடும்.

- Advertisement -

பிறகு அந்த நகைகளை சாதாரண தண்ணீரில் போட்டு அலசி எடுத்தால் அழுக்கு மொத்தம் நீங்கி உங்களுடைய தங்க நகை பாலிஷ் போட்டது போல பளிச் பளிச் என ஆகிவிடும். இதுவே கொஞ்சம் டிசைன்கள் உள்ள வளையல் கம்பல்களில் உள்ள இடுக்கில் அதிகப்படியான அழுக்கு ஒட்டி இருந்தால், சுடுதண்ணீரில் போட்ட நகையை எடுத்து ஷாம்பு போட்டு ஒரு முறை தேய்த்து விட்டு, அந்த பிரஷில் கொஞ்சமாக ஆப்ப சோடாவை தொட்டு மீண்டும் அந்த நகையை லேசாக தேய்த்து கொடுத்தால், டிசைன்களின் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகள் கூட மொத்தமாக நீங்கிவிடும். பிறகு நல்ல தண்ணீரில் கழுவி துடைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வளவுதாங்க.

இதையும் படிக்கலாமே: இனி வாஷிங் மெஷினில் துவைச்ச துணி கூட கையில துவைச்ச மாதிரி பளிச்சுன்னு இருக்க இதை மட்டும் சேர்த்தா போதும். இனி வெள்ளை துணியை கூட கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியமே கிடையாது.

நீங்கள் தினமும் அணிந்திருக்கும் தங்க நகைகளை அடிக்கடி ஆப்ப சோடா போட்டு கழுவ வேண்டாம். மாதத்திற்கு ஒரு முறை வெறும் ஷாம்பு போட்டு கழுவி சுத்தம் செய்த பயன்படுத்தினால் சீக்கிரத்தில் அழுக்கு படிந்து மங்கி போகாது. வருடத்திற்கு ஒருமுறை ஆப்ப சோடா போட்டு கழுவி கொள்ளுங்கள். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -