தங்கம் அணியும் முறை! இந்த ராசியினர் இப்படித்தான் தங்கம் அணிய வேண்டும் தெரியுமா? அதிர்ஷ்டம் வர தங்கத்தை அணியுங்கள்.

gold-jewel-uppu-salt
- Advertisement -

மற்ற உலோகங்களைப் போல் அல்லாமல் தங்கத்திற்கு அதிக மதிப்பு உண்டு என்பதால் தங்கம் சிறந்த ஒரு பொருளாக கருதப்பட்டு வருகிறது. எல்லோருடைய உடம்பிலும் சிறு தங்கம் இருப்பது மகாலட்சுமியின் அருளை பெற்று தரும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியான இந்த தங்கத்தை எந்த ராசியினர் எப்படி அணிய வேண்டும்? அணியக்கூடாது? என்பதை தான் இந்த ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

தங்கம் அணியும் முன்பு அதை தோஷங்கள் அல்லாதது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். புதிய நகைகளுக்கு எந்தவிதமான தோஷமும் கிடையாது. எனினும் தங்கத்தை முதன் முதலில் வாங்கினால் அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு, கொஞ்சம் உப்பு கலந்து வைத்து எடுத்து துடைத்து சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் பூஜை செய்து அணிந்து கொள்ளலாம். கிழக்கு முகமாக பார்த்து தான் தங்கத்தை அணிய வேண்டும். தங்க நகைகளை நீங்கள் எந்த இடத்தில் வைத்தாலும் அதை ஒரு சிகப்பு நிற பட்டு துணியில் கட்டி பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

- Advertisement -

சிகப்பு நிற துணியில் தங்கம் இருந்தால் மென்மேலும் தங்கம் சேரும் என்கிற ஐதீகம் உண்டு. தங்கத்துடன் மற்ற உலோகங்களை சேர்த்து கழுத்தில் அணியக்கூடாது, இது தோஷத்தை உண்டு பண்ணும். மற்றவர்களுடைய நகையை நீங்கள் அணிந்து கொள்ளும் முன்பு, உப்பு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்த பின்பே அணிந்து கொள்ள வேண்டும். மீண்டும் நீங்கள் அவர்களிடம் கொடுக்கும் பொழுது இதே போல செய்து கொடுக்க வேண்டும். இதுதான் அந்த உறவை மென்மேலும் வளர செய்யும். அடகிற்கு சென்ற நகைகளையும் இதுபோல செய்து பின்னர் அணிந்து கொள்ளுங்கள், தோஷங்கள் தொலையும்.

தங்கத்தை எந்த ராசியினரும் இடது கையில் அணிவதை காட்டிலும், வலது கையில் அணிவதே முறையாகும். வலது கையில் தான் தங்கத்தை அணிய வேண்டும். வலது கையில் தங்கத்தை அணிந்து கொண்டிருக்கும் பொழுது மாமிச உணவுகளை அந்த கைகளால் உண்ணக்கூடாது எனவே கறி உணவுகளை உட்கொள்ளும் பொழுது, தங்கத்தை இடது கையில் அணிந்து கொண்டு பின்பு நீங்கள் உணவு சாப்பிடலாம். தங்கம் குரு பகவான் உடைய அம்சம் என்பதால் புனிதம் நிறைந்தது என்பதால் அசைவம் சாப்பிட வேண்டாம்.

- Advertisement -

மகரம் மற்றும் துலாம் ராசியினர் அதிக அளவிலான தங்கத்தை அணிந்து கொள்ள கூடாது. குறைந்த அளவிலான தங்கத்தை அணிவது சிறப்பம்சமாக இருக்கும். இவர்கள் அதிக வேலைபாடு உள்ள நகைகளை அணிவதை காட்டிலும், குறைந்த வேலைப்பாடு உள்ள எளிமையான நகைகளை அணிவது நல்லது. ரிஷபம், மிதுனம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் தங்கத்தை கனமாக அணியக்கூடாது. இலகுவான தங்கத்தை இவர்கள் அணிவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
உங்க வீடு இந்த திசையில் இருந்தால் நீங்கள் எந்த மிதியடியை பயன்படுத்த வேண்டும் தெரியுமா? வாஸ்துபடி இதை செய்து பாருங்கள் அதிர்ஷ்டம் தானாக வரும்.

நான்கு ராசியினர்களுக்கும் தங்கத்திற்கும் ஒரு எதிர்வினை உண்டு. இவர்களுக்கும் தங்கத்திற்கும் ஆகவே ஆகாது எனவே இவர்கள் தங்கம் அணியும் பொழுது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மற்ற ராசியினர் தங்கங்களை தாராளமாக வாங்கி குவிக்கலாம். இவர்கள் தங்கம் அணியும் பொழுது மென்மேலும் அவர்களுடைய செல்வமானது பெருக துவங்கும். எப்பாடுபட்டாவது நீங்கள் உழைக்கும் பணத்தை வீணாக்காமல் தங்கத்தில் சிறு முதலீடாவது செய்து பயனடையுங்கள்.

- Advertisement -