இந்த விஷயங்களை நீங்கள் சரியாக செய்தாலே போதும், தங்கம் சேரும் வாய்ப்பு பெருகி, தங்கம் உங்களிடம் நிரந்தரமாக தங்கி விடும்.

- Advertisement -

தங்கம் வாங்க நமக்கு ஒரு யோகம் வேண்டுமென்றால் வாங்கிய தங்கம் நம்மிடம் நிலைக்க அதை விட பெரும் யோகம் வேண்டும். சிலருக்கு தங்கம் வாங்கும் யோகமே இருக்காது பெட்டி பெட்டியாக பணமே வைத்திருந்தாலும், அதை வைத்து அவர்கள் நகை வாங்க வேண்டும் என்று நினைத்தால் கூட, அது தடைப்பட்டு கொண்டே செல்லும். அல்லது அவர்கள் விரும்பி வாங்கிய நகைகளை அவர்களால் வாங்கி அணியவே முடியாத சூழ்நிலை ஏற்படும். இன்னும் சிலருக்கோ இதை விட மோசம் வாங்கிய தங்கம் அடகுக்கு சென்று விடும். இப்படி தங்கமானது நம்மிடம் தங்காமல் போவதற்க்கு சில காரணங்கள் உண்டு அதை நாம் சரி செய்வது எப்படி என்பதை பற்றிய ஒரு பதிவு தான் இது.

முதலில் நம்மிடம் உள்ள ஒரு சிறு தங்கமாக இருந்தாலும் சரி, அதை சுத்தமாகவும் நல்ல முறையிலும் பராமரிக்க வேண்டும். யார் எதை போற்றி பாதுகாக்கிறோம் அவர்களிடம் தான் அது சேரும் அது தங்கமாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி நாம் எந்த அளவிற்கு அதைப் பாதுகாக்கிறோமோ அந்த அளவிற்கு நம்மிடம் கட்டாயமாக வந்து சேரும்.

- Advertisement -

இப்படி அந்த தங்க நகைகளை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை முடிந்த வரையில் புதன் கிழமைகளில் செய்தால் நல்லது. வெள்ளிக்கிழமையும் செய்யலாம் ஆனால் வெள்ளிக்கிழமையில் நகையை கழற்றி போடுவது அவ்வளவு நல்லதல்ல. ஆகையால் புதன்கிழமைகளில் உங்கள் தங்க நகையை நீங்கள் சுத்தம் செய்து உடனே அணிந்து கொள்ளுங்கள் நகைகள் இல்லாமல் வெகு நேரம் இருக்கக் கூடாது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் தாலி கொடியை எந்த காரணம் கொண்டும் கழற்றி சுத்தம் செய்ய கூடாது. அதை நீங்கள் குளிக்கும் போதே சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் வீட்டில் நகை வைக்கும் பெட்டி எதுவாக இருந்தாலும் அது முடிந்த அளவிற்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் மிகவும் விஷேசம். மஞ்சள் நிறத்தில் வைக்கும் போது நகை சேரும் வாய்ப்பு அதிகம். மஞ்சள் என்றாலே மங்களகரமானது தானே. அப்படி நகை, பணம் வைக்கும் இடத்தில் பச்சை நிற துணியை விரித்து அதன் மேல் வைத்து விடுங்கள். அதுவும் மிகவும் நல்லது இந்த மஞ்சள் பச்சை எல்லாம் அம்மனுக்கு உகந்த நிறங்கள். பணம் நகை வைக்கும் இடத்தில் மஹாலக்ஷ்மி தாயார் படம் இருந்தால் மிகவும் நல்லது

- Advertisement -

இவை அனைத்திலும் விட முக்கியமான ஒன்று நீங்கள் ஒரு தங்க நகை வாங்க செல்கிறீர்கள் என்றால் உங்களுடன் அழைத்து செல்லும் நபரை பற்றி தெரிந்து கொண்டு அழைத்துச் செல்லுங்கள். பெரும்பாலும் அருகில் இருப்பவர்கள் தெரிந்தவர்கள் போன்றவர்களை கூட்டி சென்று நகை எடுப்பார்கள், ஆனால் நீங்கள் நகை எடுக்கும் போது அவர்களின் எண்ணம் எதுவாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. அவர்கள் உங்களுடன் வரும் போது நகை எடுப்பது உங்களுக்கு நல்லதாக அமைகிறதா என்று தெரிந்து கொண்டு செய்யுங்கள்.

இதில் இன்னொரு விஷயம் அவர்களுக்கு ஒரு மாடல் பிடித்திருக்கும் உங்களுக்கு வேறுறொன்று பிடித்திருக்கும். சில சமயங்களில் அவர்கள் சொல்லுவதை நீங்கள் வாங்க கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படக்கூடும். தங்கம் என்பதை வாங்கும் போது கொஞ்சம் கூட மனது சஞ்சலம் இல்லாமல் சந்தோஷமான மனநிலையில் மட்டுமே வாங்க வேண்டும் அப்போது தான் தங்கம் நம்மிடம் சேரும்.

இதையும் படிக்கலாமே: இந்த தண்ணீரைக் கொண்டு நிலை வாசல் கதவை துடைத்தால் வீட்டிற்குள் கண் திருஷ்டி வராது கெட்ட சக்தியும் வராது. வீட்டில் இருக்கும் தெய்வ சக்தியும் வெளியேறாது.

இந்த பதிவின் மூலம் தங்க வாங்க வேண்டிய முறையும், அது நிலைக்க செய்ய வேண்டிய முறையும் நீங்கள் தெரிந்து கொண்டு செயல்பட்டால் மஹாலக்ஷ்மி தாயாரின் அம்சமான தங்கம் உங்களிடம் நிரந்தமாக நிறைந்து இருக்கும்.

- Advertisement -