இனி கறுத்து போன உங்க பழைய வெள்ளி கொலுசை கூட, பத்தே நிமிஷத்துல புதுசு போல மாத்த பக்காவான ஐடியா இருக்கு வாங்க தெரிஞ்சிக்கலாம்.

kolusu
- Advertisement -

வெள்ளி பொருட்களிலே அதிகமாக நாம் பயன்படுத்துவது கொலுசு தான். சில வீடுகளில் வெள்ளி பூஜை பொருட்கள், வெள்ளை பாத்திரங்கள் போன்றவைகள் பயன்படுத்துவார்கள். ஆனால் பெரும்பாலும் வெள்ளியை ஆபரணமாக தான் பயன் படுத்துவோம். இதை வாங்கும் போது புதுச அழகாக இருக்கும். ஆனால் போட்ட சில நாட்களிலே கறுத்துப் போய் பார்க்க நன்றாகவே இருக்காது. அப்படி இல்லாமல் இனி உங்கள் கொலுசு எப்பொழுதுமே புதுசு போல மின்ன, இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நிறைய ஐடியா இருக்கு வாங்க தெரிஞ்சிக்கலாம்.

குறிப்பு 1
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் துணி துவைக்கும் பவுடரை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் உங்க பழைய கொலுசை போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பு அணைத்து விடுங்கள். சூடு குறைந்ததும் அதிலிருந்து கொலுசை எடுத்து லேசாக ப்ரஷ் வைத்து தேய்த்துக் கொடுத்தாலே அழுக்குகள் நீங்கி கொலுசு பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -

குறிப்பு 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும் போது கொலுசை போட்ட பிறகு, பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் சேர்த்த பிறகு அலுமினியும் பேப்பரை ஒரு பால் போல உருட்டி அதில் போட்டு விடுங்கள். அல்லது வீட்டில் பழைய அலுமினியும் கோட்டிங் உள்ள மாத்திரை அட்டை இருந்தால் அதையும் சின்ன சின்னதாக போடலாம். இத்துடன் வீம் லிக்விட்யும் சேர்த்து அனைத்தையும் பத்து நிமிடம் கொதிக்க வைத்து, அதன் பிறகு தண்ணீர் ஆறிய உடன், உங்கள் கொலுசை எடுத்து தேய்த்தால் புதுசு போல மாறி விடும்.

குறிப்பு 3
வீட்டில் கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏற்றிய பிறகு அதன் துகள்களை எல்லாம் நாம் வீணாக கீழே கொட்டுவோம். இனி அப்படி செய்யாமல் அதை எல்லாம் சேகரித்து வைத்து அத்துடன் கொஞ்சம் தயிர் சேர்த்து பேஸ்ட் போல குழைத்து அதை கொலுசின் மேல் தேய்த்து ஐந்து நிமிடம் கழித்து விம் லிக்விடை சேர்த்து பிரஷ் வைத்து தேய்த்து பாருங்கள். கொலுசு புதுசு போல மின்னும்.

- Advertisement -

குறிப்பு 4
இந்த முறையில் ஒரு கொட்டாங்குச்சி எடுத்து கொளுத்தி அதை பவுடராக்கி சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை விம் லிக்வீடுடன் கலந்து பேஸ்ட் போல செய்து கொலுசின் மீது தேய்த்து விடுங்கள். அதன் பிறகு ஒரு வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு, லெமன் சேர்த்த பிறகு அதில் தேய்த்த கொலுசை போட்டு ஐந்து நிமிடம் ஊறிய பிறகு மறுபடியும் ஒரு பிரஷ் வைத்து தேய்த்துப் பாருங்கள். கடையில் இருந்து வாங்கிய கொலுசுக்கும், இதற்கும் வித்தியாசமே தெரியாது. அந்த அவ்வளவு பளிச்சென்று மாறி விடும்.

குறிப்பு 5
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த பிறகு கொலுசை போட்டு அதில் ஒரு ஸ்பூன் சர்ப் எக்ஸெல் பவுடர், அரை எலுமிச்சை பழம் இரண்டையும் சேர்த்து நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். ஆறிய பிறகு கொலுசை அதிலிருந்து எடுத்து ஒரு துணி வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதன் மேல் கொஞ்சம் முகத்திற்கு போடும் பவுடரை தேய்த்து, துணி வைத்து துடைத்தால் கொலுசு பாலிஷ் போட்டதை போலவே மின்னும்.

- Advertisement -

குறிப்பு 6
இதற்கு வெள்ளை நிற கோல்கேட் பேஸ்டை எடுத்து கொள்ளுங்கள். இது பவுடராக இருந்தால் அப்படியே கொலுசின் மீது தேய்த்து ஐந்து நிமிடம் கழித்து டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை பேஸ்ட் ஆக இருந்தால் அதை தண்ணீரில் லேசாக கரைத்து பிரஷ் வைத்து கொலுசின் மீது தேய்த்து அதன் பிறகு அலசி பயன்படுத்துங்கள். கொலுசில் உள்ள அழுக்குகள் நீங்கி கொலுசு புதுசு போல மின்னும்.

குறிப்பு 7
இந்த முறையில் நாம் கொலுசை சுத்தப்படுத்தப் போவதில்லை, கொலுசை வாங்கி பயன்படுத்தும் முன்பே அதன் மேல் நெயில் பாலிஷ் நகம் நிறத்திலே இருக்கும் அல்லவா அதை ஒரு கோட்டின் கொடுத்து விட்டால் போதும். கொலுசு அவ்வளவு சீக்கிரத்தில் கறையும் படியாது, கருத்தும் போகாது.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு அடிப் பிடித்த, கறை படிந்த பாத்திரங்களாக இருந்தாலும் நிமிசத்துல கிளீன் பண்ண இதை ட்ரை பண்ணுங்க, அப்புறம் என்ன கறை எல்லாம் போயே போச்சு தான்

இந்த பதிவில் உள்ள குறிப்புகளில் உங்களுக்கு எந்த குறிப்பு சுலபமாக உள்ளது என்று நினைக்கிறீர்களோ, அந்த முறையில் உங்கள் கொலுசை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இது கொலுசு மட்டுமல்ல உங்கள் வீட்டில் இருக்கும் எந்த வெள்ளி பொருட்களையும், இந்த முறையில் சுத்தப்படுத்தலாம்.

- Advertisement -