தங்க நகைகளை தெரியாமல் கூட இந்த இடத்தில் வைக்காதீர்கள் ஸ்வர்ணம் சேரவே சேராது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது!

gold-jewel-lakshmi-abishegam
- Advertisement -

தங்க நகைகள் என்பதும் ஒரு வகையான சொத்து தான் என்றாகிவிட்டது. நகையை எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் பணமாக மாற்றிக் கொள்ளலாம். இப்படி சொத்தாக இருக்கக் கூடிய நகையின் விலை எப்போதும் ஏற்றத்துடன் காணப்படுவதால் சிறுக சிறுக சேமித்து வாங்கி வைத்தால் பிற்காலத்தில் அது பல நல்ல பலன்களை கொடுக்கும். இப்படிப்பட்ட தங்க நகைகளை வீட்டில் இந்த இடத்தில் நீங்கள் வைப்பதால் சுத்தமாக தங்கமானது சேரவே சேராது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அப்படியான இடங்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் காண இருக்கிறோம்.

தங்க நகைகளை வடமேற்கு மூலையில் வைக்கவே கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வடமேற்கு திசையில் வைத்தால் அந்த இடத்தில் வைக்கப்படும் தங்க நகை ஆனது திருடு போகவும் வாய்ப்பு இருக்கிறதாம். அடிக்கடி அடகு கடைக்கு நகை செல்வதற்கு இந்த திசை காரணமாக அமைந்துவிடுமாம். மேலும் தங்க நகையை இரும்பு பீரோவில் வைக்கும் பொழுது இரும்பில் நேரடியாக படும்படி வைக்கக் கூடாது. அதற்கென கொடுக்கப்பட்ட மென்மையான வெல்வெட் பொருத்திய டப்பாவில் போட்டு வைப்பது நல்லது. சிகப்பு, பிங்க் மற்றும் பச்சை நிற பேப்பர் அல்லது வெல்வட் துணியில் போட்டு பத்திரப்படுத்தி வைக்கலாம்.

- Advertisement -

தங்க நகையை அரிசி, பருப்பு இருக்கும் பாத்திரங்களில் சிலர் போட்டு வைப்பது உண்டு. இது ஸ்வர்ண தோஷத்தை ஏற்படுத்தும். அரிசி, பருப்பு மற்றும் அஞ்சரை பெட்டி போன்ற இடங்களில் நகையை சேமித்து வைத்தால் மீண்டும் அந்த நகையானது சேராது போகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அரிசி, பருப்பு மட்டும் அல்லாமல் சமையலறையில் எந்த இடத்திலும் ஸ்வர்ணத்தை வைக்க வேண்டாம்.

அக்னி மூலையில் ஸ்வர்ணத்தை வைத்தால் தங்கம் பெருகவே பெருகாது, அது குறைய ஆரம்பிக்கும். அடிக்கடி அடகு போகும், களவு போகும் அபாயம் உண்டு என்று எச்சரிக்கிறது வாஸ்து சாஸ்திரம். அக்னி பகவான் என்பது நெருப்பு ஆகும். நெருப்பு இருக்கும் இடத்தில் தங்கம் சேராது என்பது தான் ஐதீகம் எனவே எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் சமையலறையில் கொண்டு போய் நகைகளை வைக்காதீர்கள்.

- Advertisement -

அட்சய திருதியை மட்டும் அல்லாமல் பரணி, பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களிலும் நீங்கள் நகை கடைக்கு சென்று தங்க நகை வாங்கினால் அது மென்மேலும் பெருகுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். இத்தகைய புதன் கிழமையிலும், மகாலட்சுமி அம்சமாக இருக்கக் கூடிய வெள்ளிக் கிழமையிலும் கூட நீங்கள் தங்க நகைகளை வாங்கலாம். மற்ற நாட்களில் நகை வாங்குவதை தவிர்க்கவும்.

இதையும் படிக்கலாமே:
உங்க வீட்டில் மாமரம் இப்படி இருந்தால் கஷ்டம் தான் வரும் தெரியுமா? மாமரம் வீட்டில் இருக்கக் கூடாத இடம் என்ன?

நாட்காட்டியில் குளிகை நேரத்தில் நீங்கள் நகை வாங்கினாலும் அது மென்மேலும் பெருகும். குளிகை நேரத்தில் எதை செய்தாலும் அது திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது ஐதீகம் எனவே பஞ்சாங்கத்தின்படி குளிகை நேரத்திலும் நகைகளை நீங்கள் வாங்கலாம். மேலும் உங்களிடம் இருக்க கூடிய சிறு தங்க நகையுடன் ரெண்டு துளசி இலைகள், மூன்று கிராம்பு, சிறிது பச்சை கற்பூரத்தை சேர்த்து மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி பீரோவில் வைக்கலாம். இதனாலும் ஸ்வர்ணமானது மென்மேலும் சேருவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -