தங்கத்தை எப்போது வாங்க கூடாது. தவறி இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கி விட்டால், அந்த தங்கம் நம்மிடம் தங்காமலே போக கூட வாய்ப்பு உள்ளது.

gold
- Advertisement -

நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் நம் முன்னோர்கள் சொன்ன சில நல்ல விஷயங்களை பின்பற்றுவதில் தவறு ஒன்றும் கிடையாது. இந்த நேரத்தில், இந்த விஷயத்தை செய்யக்கூடாது என்றால், அந்த நேரத்தில் அந்த விஷயத்தை செய்யாதீங்க. அதுதான் உங்களுக்கு நல்லது. முன்னோர்கள் அனுபவ அறிவு இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு சொல்லிவிட்டு செல்லவில்லை. அந்த வரிசையில் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி அம்சம் பொருந்திய தங்கம் உப்பு இந்த இரண்டு பொருட்களையும் எந்த நேரத்தில் வாங்கக்கூடாது என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அந்த காலத்தில் எந்த வேலையாக இருந்தாலும் அதை மாலை நேரத்திற்கு முன்பாகவே செய்து முடித்து விடுவார்கள். பொழுது சாய்ந்த பின்பு பெரும்பாலும் எந்த ஒரு நல்ல காரியங்களையும் செய்ய மாட்டார்கள். அந்த காலத்தில் இந்த சம்பிரதாயத்தை பின்பற்ற காரணம், மின்விளக்குகள் இல்லாமல் இருந்தது என்று நாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அது கிடையாது. சூரிய வெளிச்சம் இருக்கும்போதே நம் ஒரு காரியத்தை மேற்கொள்ளும் போது தான் அது நமக்கு வெற்றியைக் கொடுக்கும். அந்தி சாய்ந்த பிறகு நாம் செய்யக்கூடிய காரியங்களின் மூலம் சில தாமதங்கள் ஏற்படும் என்பது அந்த காலத்தில் முன்னோர்களின் ஒரு நம்பிக்கையாக இருந்தது.

- Advertisement -

நீங்கள் தங்கம் வாங்க செல்வதாக இருந்தாலும் மாலை 6:00 மணிக்கு முன்பே நல்ல நேரத்தை பார்த்து தங்க நகைகளை வாங்கி விட வேண்டும். கூடுமானவரை மாலை 6:00 மணிக்கு மேல் தங்கம் வாங்க போக வேண்டாம். இதே போல தான் தங்கத்துக்கு இணையாக சொல்லக்கூடிய ஒரு பொருள்தான் உப்பு. உப்பையும் மாலை 6:00 மணிக்கு பிறகு வாங்க வேண்டாம்.

வீட்டில் விளக்கு வைப்பதற்கு முன்பு எந்த பொருளாக இருந்தாலும் வாங்குவது சிறப்பான பலனை கொடுக்கும். இன்றைய சூழ்நிலையில் ஷாப்பிங் என்றாலே அது விளக்கு வைத்த பின்பு தான் அதிகமாக நடைபெறுகிறது. கடைவீதியில் இருட்டிய பின்பு தான் கூட்டம் அலைமோதும். எல்லாம் தலைகீழாக ஆகிவிட்டது. என்ன செய்வது. அதனால் இழப்புகளும் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள சில மனது மறுக்கிறது.

- Advertisement -

நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் சில விஷயங்களை உணர முடியும். தவறான நேரத்தில் நாம் ஒரு வேலையை செய்வதாக வைத்துக் கொள்வோம். அந்த வேலையை செய்வதன் மூலம் நமக்கு எந்த ஒரு நல்ல பலனுமே கிடைக்காது. உதாரணத்திற்கு தங்க நகையை நேரம் காலம் பார்க்காமல் போய் வாங்கி வருவோம். அந்த நேரம் நமக்கு நல்ல நேரமாக அமைந்தது விட்டால் பிரச்சனை இல்லை. கெட்ட நேரத்தில் வாங்கும் போது அதாவது, ராகு காலம் எமகண்டம் பார்க்காமல் நல்ல நேரம் பார்க்காமல் கடைக்கு சென்று நகையை வாங்கி வருவோம்.

ஆனால் நகையை வாங்கி வந்த பிறகு நம்முடைய வீட்டில் பல குழப்பங்கள் வரும். வாங்கிய தங்க நகை நம்மிடம் தங்காமல் போகும். அடகு கடைக்கு போகும். சிலது உடைந்து போகும். வாங்கிய நகையை போட்டு அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இப்படி பல தடைகள் ஏற்படும்.

ஆனால் நமக்கு தெரியாது இந்த நகை வாங்கிய நேரத்தால் தான் இவ்வளவு பிரச்சனைகள் வந்தது என்று. எதற்கு இவ்வளவு சிரமங்கள். நகை வாங்குவதற்கு முன்பாகவே பெரியோரிடம் ஆலோசித்து அல்லது காலண்டரில் நல்ல நேரம் பார்த்து, நல்ல நேரம் பார்த்து நகையை வாங்குங்கள்.

நகை வாங்கும் போது உடன் கல் உப்பு, அல்லது மல்லிகைப்பூ அல்லது கண்ணாடி போன்ற பொருட்களை வாங்குவது நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அப்படி இல்லை என்றால் நகையோடு சேர்த்து சிறிது மஞ்சள் குங்குமம் வாங்கலாம். விரலி மஞ்சள் வாங்கலாம். நகை வாங்கும் போது நமக்கு ஏதேனும் தோஷம் இருந்தால் கூட அந்த தோஷம் கழிவதற்கு இந்த பொருட்களை வாங்கினால் போதும். நல்ல நாள் விசேஷத்திற்கு துணிமணிகள் எடுப்பதாக இருந்தாலும் அதை விளக்கு வைப்பதற்கு முன்பாகவே போய் எடுத்து வருவது நல்லது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -