அடுத்தவர்களுடைய கண் பட்டு தங்கம் அடிக்கடி அடகு போகுதா. தங்கத்தை அடிக்கடி இந்த தண்ணீரில் போட்டு எடுத்தால் தங்கம் அடகு கடைக்கு போகவே போகாது.

- Advertisement -

நாம் தினமும் அணிந்திருக்கும் தங்க நகையாக இருந்தாலும் சரி, அல்லது பீரோவில் வைத்திருக்கும் தங்க நகையாக இருந்தாலும் சரி, நாம் போட்டு இருப்பதை ஒரு சிலர் பார்த்து விட்டால் போதும். அந்த நகை ஒரு சில நாட்களிலேயே அடகு கடைக்கு சென்று விடும். இல்லையென்றால் உடைந்து விடும். அழகாக இருந்த நகை நமக்கு ரொம்பவும் பிடித்த நகை, நம்முடைய கணவர் ஆசையாக வாங்கிக் கொடுத்த நகை, நம் கையை விட்டு போகும் போது நிச்சயம் நமக்கு கஷ்டம் இருக்கத்தான் செய்யும்.

அப்படி இல்லை என்றால் புதுசாக ஒரு நகையை வாங்கி இருப்போம். அதில் யார் கண்ணாவது பட்டு டேமேஜ் ஆகிவிடும். இப்படி நம்முடைய தங்கத்துக்கு, நம் வீட்டு ஐஸ்வர்யத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும் என்றால், தங்கத்தை என்ன செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்க என்ன செய்வது:
திருமணத்திற்கோ அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சிக்கோ உங்களிடம் இருக்கும் அழகான தங்க நகைகளை நீங்கள் போட்டுக் கொண்டு போனால், நிச்சயமாக அடுத்தவர்களுடைய கண்கள் அதன் மேல் விழும். பொறாமை நோக்கத்தோடு எல்லோர் கண்களும் பார்க்காது. இருந்தாலும் இது போல அழகான தங்க நகைகள் நம்மிடம் இல்லையே என்ற ஏக்கம் நிச்சயம் அடுத்த பெண்களுடைய மனதில் தோன்றும். அதை நாம் தவறு என்று சொல்லி விட முடியாது.

அந்த கண் திருஷ்டியை போக்கிவிட்டு தான், நம் கழுத்தில் இருந்து கழட்டிய நகைகளை பீரோவில் பத்திரப்படுத்த வேண்டும். நகைகளை கழுத்தில் இருந்து கழட்டும்போது அதில் வியர்வை போக வேண்டும் என்று சுத்தமான தண்ணீரில் கழுவுவோம் அல்லவா. அதில் கொஞ்சமாக கல் உப்பு, இரண்டு கல் உப்பு போட்ட தண்ணீரில், நீங்கள் அணிந்து சென்ற நகையை கழுவி, மீண்டும் நல்ல தண்ணீரில் கழுவி, ஒரு காட்டன் துணியில் துடைத்து நன்றாக காய வைத்து அதன் பின்பு பீரோவில் எடுத்து வையுங்கள். இப்படி செய்தால் தங்கத்தில் இருக்கும் தோஷம் விலகிவிடும் தங்கம் அடகு கடைக்கு போகாது.

- Advertisement -

ரொம்ப வருடமாக பீரோவில் பூட்டியே இருக்கும் நகைகளை கூட வருடத்தில் ஒருமுறை இப்படி உப்பு தண்ணீரில் கழுவி வைப்பது நல்லது. நீங்கள் தினந்தோறும் அணிந்திருக்கும் செயின், கம்பல், வளையல் இவைகளை எல்லாம் கூட ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்படி உப்பு தண்ணீரில் கழுவுங்கள். அப்படி இல்லை என்றால் உப்பு தண்ணீரில் நீங்களே குளித்து விடுங்கள். அந்த உப்பு தண்ணீரில் குளிக்கும் போது உங்களுடைய நகையும் உப்பு தண்ணீரில் நனையும் அல்லவா. அப்போது நகை தோஷம் உங்களுக்கு இருக்காது. நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுடைய வீட்டில் வெள்ளி பொருட்கள் கருக்காமல் இருக்க வேண்டும். நீங்கள் அணிந்திருக்கும் கொலுசு முதல் பூஜை அறையில் ஏற்றும் விளக்கு முதல், பீரோவில் வைத்திருக்கும் வெள்ளி பொருட்கள் முதல், குங்குமச்சிமிழ் வரை எதுவுமே கருத்துப்போக கூடாது. வெள்ளி கருக்கும் தன்மை கொண்டதுதான். ஆனால் வீட்டில் இருக்கும் வெள்ளி பொருட்களை அடிக்கடி எடுத்து சுத்தம் செய்து பளபளப்பாகத்தான் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சமையல் அறையில் இருக்கக் கூடாத பொருட்கள் என்ன? இந்தப் பொருள் இப்படி இருந்தால் பிரச்சனைகள் தான் வருமாம்!

வீட்டில் வெள்ளி பொருள் கருத்தால் அது வீட்டிற்கு நன்மை கிடையாது. வெள்ளி பொருளை சுத்தம் செய்வதற்கு எவ்வளவோ வழிமுறைகள் உள்ளது. அதை பின்பற்றி வெள்ளி பொருளை சுத்தம் செய்து விடுங்கள். உதாரணத்திற்கு வெறும் பல் தேக்கும் பல்பொடியை வைத்து வெள்ளி பொருட்களை தண்ணீர் ஊற்றாமல் தேய்த்தாலே அதில் இருக்கும் கருப்பு நிறம் நீங்கிவிடும். பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்து எடுத்தால் வெள்ளிப் பொருட்கள் எல்லாம் நிமிடத்தில் பளிச் பளிச். மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சொல்லும் குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -