சமையல் அறையில் இருக்கக் கூடாத பொருட்கள் என்ன? இந்தப் பொருள் இப்படி இருந்தால் பிரச்சனைகள் தான் வருமாம்!

- Advertisement -

குடும்பம் சுபிட்சம் அடைய மகாலட்சுமி கடாட்சம் தேவை. மகாலட்சுமி நம் வீட்டிற்குள் நுழைவதற்கு அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து, சாணம் இட்டு கோலம் போட வேண்டும் என்பார்கள் நம் முன்னோர்கள். அந்த மகாலட்சுமி முதலாவதாக வாசம் செய்யும் இடம் சமையலறை! அத்தகைய இந்த சமையல் அறையில் இந்த பொருட்கள் எல்லாம், இப்படி இருந்தால் மகாலட்சுமி கடாட்சம் குறைவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படியான பொருட்கள் என்னென்ன? அதை எப்படி அமைத்து வைக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

அன்னபூரணியும், மகாலட்சுமியும் வாசம் செய்யும் சமையல் அறையில் எப்பொழுதும் தூசுகள் இல்லாமல், குப்பை கூலங்களை சேர்க்காமல் சுத்தமாக நறுமணமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதில் துர்நாற்றங்கள் வீசினால் மகாலட்சுமி கடாட்சம் குறையும். அதனால் தான் இரவில் சமையல் பாத்திரங்களை எல்லாம் கழுவி சுத்தம் செய்து விட வேண்டும் என்று கூறுகின்றனர்.

- Advertisement -

அது போல சமையல் அறையில் அடுப்பிற்கு மேலே கல் உப்பு மஹாலக்ஷ்மி அம்சம் என்பதால் இருக்கலாம். மற்றபடி இந்த பொருட்கள் எல்லாம் அடுப்பிற்கு கீழே தான் இருக்க வேண்டும் என்கிற நியதி உண்டு. அரைத்த சால்ட் உப்பு அடுப்பிற்கு மேலே இருக்கக் கூடாது. அடுப்பிற்கு கீழே அல்லது செல்ஃப்களில் வைக்கலாம். கல் உப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை மட்டும் அடுப்பிற்கு இணையாகவோ அல்லது அடுப்பிற்கு மேலேயோ அமைக்கலாம்.

மாமிச பொருட்கள் மற்றும் கருவாடு போன்ற ஸ்டோர் செய்து வைக்கக்கூடிய பொருட்களை அடுப்பிற்கு கீழே அமைக்க வேண்டும்.அடுப்பிற்கு இணையாக வைக்கக் கூடாது. சமைக்கும் பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சேகரித்து வைக்கும் பொழுது இவற்றை அடுப்பிற்கு இணையாக வைக்காதீர்கள். அது போல கீரை, புளி, கருப்பு உளுந்து போன்றவற்றையும் அடுப்பிற்கு இணையாகவோ அல்லது அடுப்பிற்கு மேலேயோ அமைக்க கூடாது. அடுப்பிற்கு கீழே அல்லது செல்ஃப்களில் நீங்கள் அடுக்கி வைக்கலாம். இதனால் லட்சுமி கடாட்சம் குறைவதாகவும், குடும்பத்தில் தேவையில்லாத நிம்மதி இன்மை ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது.

- Advertisement -

அடுப்பிற்கு அருகில் குப்பை கூலங்களை சேகரிக்கக் கூடாது. சிங்க் போன்ற பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளையும் அவ்வப்பொழுது அகற்றி விட வேண்டும். ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருந்து துர்நாற்றம் வீசும் வரை காத்திருக்கக் கூடாது. அவ்வபொழுது சுத்தம் செய்யக்கூடிய சமையலறை கழிவுகளை குப்பைக்கு கொண்டு சென்று போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உடம்பில் தீராத நோய்கள் தீர இந்த 2 பொருளை கோவிலில் நோயாளியை சுற்றி திருஷ்டி கழித்து இப்படி செய்யுங்கள்! நோய் தீர சக்தி வாய்ந்த பழங்கால எளிய பரிகாரம்.

மாமிச பொருட்களை சிங்கிள் வைத்து கழுவுபவர்கள், நன்கு கழுவிய பின்பு சிங்கை ஒருமுறை சோப்பு போட்டு சுத்தம் செய்து விடுங்கள். இதனால் ஆரோக்கிய பிரச்சனையும் ஏற்படாது, லட்சுமி கடாட்சமும் குறையாது தடுக்கலாம். மாமிச வாசம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வது கிடையாது. தீட்டு சமயங்களில் கூட பெண்கள் குளித்துவிட்டு தான் சமையல் அறைக்கு செல்வார்கள். ஆனால் இப்பொழுது அதற்கெல்லாம் நேரமில்லை என்பதால் முகம், கை, கால் கழுவி விட்டு, வாய் கொப்பளித்து விட்டு பிறகு நீங்கள் சமையல் அறைக்கு செல்லலாம். அப்படியே செல்வது முறையல்ல! இப்படி நீங்கள் உங்களுடைய சமையல் அறையை வைத்திருந்தால் குடும்ப பிரச்சனைகளும் குறையும், மகாலட்சுமி வாசமும் குறையாமல் நிறைந்திருக்கும்.

- Advertisement -