பருப்பு, தானிய வகைகளை வண்டு வராமல் ஸ்டோர் செய்ய ஒரு புது ஐடியா இருக்கு. நீங்களும் இதை ட்ரை பண்ணி பாக்கலாமே!

- Advertisement -

நம்மில் நிறைய பேர் வீடுகளில் இருக்கக்கூடிய கஷ்டம்தான் இது. பருப்பு வகைகள், தானிய வகைகள் இவைகளை வாங்கி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவே முடியாது. சில நாட்களிலேயே அந்த தானிய வகைகளில் சிறிய சிறிய ஓட்டை விழுந்து, வண்டு பிடிக்க ஆரம்பித்துவிடும். என்னதான் வெயிலில் கொட்டி காயவைத்து ஸ்டோர் செய்தாலும், வண்டு வருவதை தடுக்க முடியாது. சிலர் இந்த தானிய வகைகளை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து கொள்வார்கள். ஆனால், எல்லோராலும் கிலோ கணக்கில் வாங்கிய தானியங்களை பிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்ய முடியாது அல்லவா? இதற்கு நம்முடைய பாட்டிமார்கள் என்ன வழியை பின்பற்றி வந்தார்கள். நாமும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

vilakkenai

கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு, பச்சைப் பயறு, கொள்ளு, வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு கொண்டை கடலை, மொச்சை, துவரம் பருப்பு, தட்டைப் பயறு இப்படி எந்த வகை பருப்பு வகையாக இருந்தாலும் சரி, எந்த வகையான தானிய வகையை சேர்ந்ததாக இருந்தாலும் சரி, வாங்கிய உடன் அந்த தானியத்தை கவரில் இருந்து மாற்றிவிட வேண்டும்.

- Advertisement -

2 கிலோ அளவு உள்ள தானியம் என்றால், அதனை பாதுகாக்க வெறும் 2 ஸ்பூன் விளக்கெண்ணை போதும். வாங்கிய தானியத்தை ஒரு அகலமான பேசினில் கொட்டி கொள்ள வேண்டும். உங்களுடைய இரண்டு கைகளிலும் அரை ஸ்பூன், அரை ஸ்பூன் அளவு விளக்கெண்ணையை விட்டு நன்றாக தடவிக் கொள்ளவும். எண்ணெய் தடவிய இரண்டு உள்ளங்கைகளையும் தானியத்தில் வைத்து நன்றாக கலந்து கொடுக்கவேண்டும். கையிலிருக்கும் எண்ணெய் தானியம் முழுவதிலும் பரவலாக பட்டுவிடும். பருப்பு வகைகளுக்கும் இப்படித்தான் எண்ணெயை தடவ வேண்டும்.

bottle

கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, தானிய வகைகளை உங்கள் கைகளால் நன்றாக பிசைந்து கொடுக்கப் போகிறீர்கள். அவ்வளவு தான். இன்னும் கொஞ்சம் எண்ணெய் தேவைப்படும் பட்சத்தில் தேவைப்பட்டால் மற்றொரு ஸ்பூன் எண்ணெய் எடித்து கைகளில் தடவி மீண்டும் அந்த தானியத்தில் முழுவதுமாக படும்படி கலந்து வைத்து விடுங்கள். இதை அப்படியே ஸ்டோர் செய்து விடக்கூடாது.

- Advertisement -

அந்த அகலமான தட்டிலேயே இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் நன்றாக வெயிலில் காய வைத்து விட்டு, விளக்கெண்ணை தடவிய அந்த தானியங்களை, வெயில் சூடு தணிந்த பின்பு ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். வருடமானாலும் பூச்சி வருவதற்கு வாய்ப்பு கிடையாது. (காய்ந்த தானியங்களை வெயிலில் சூட்டோடு போட்டு பாடலில் மூடி வைக்கக் கூடாது.)

thur-dal

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் தானிய வகைகளையும் விளக்கெண்ணை ஊற்றி தடவி, இப்படி ஸ்டோர் செய்தால் நிச்சயமாக நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். விளக்கெண்ணெயை எடுத்து அப்படியே நிறைய ஊற்றி விடாதீர்கள்‌. 2 கிலோ பருப்பு என்றால், இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் விளக்கெண்ணைக்கும் மேலாக பயன்படுத்தவே கூடாது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். என்னதான் எவர்சில்வர் டப்பாவும், பிளாஸ்டிக் டப்பாவும் இருந்தாலும்கூட கண்ணாடி பாடலுக்கு தனி மவுசுதான். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -