தார தோஷம் பரிகாரம்

thara dosham pariharam
- Advertisement -

ஒருவரின் ஜாதகத்தில் தார தோஷம் என்பது அந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் ஏற்படக்கூடிய ஒரு உப தோஷமாக கருதப்படுகிறது. இந்த தார தோஷம் என்பது ஆண்களின் ஜாதகத்திலேயே வரும் அமைப்பை கொண்டதாகும். அந்த வகையில் தார தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற ஆண்கள் சிறப்பான திருமண வாழ்க்கை அமைய செய்ய வேண்டிய தார தோஷ பரிகாரம் ( Thara dosham pariharam in Tamil ) குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தார தோஷம் நீங்க பரிகாரம்

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் தங்களுக்கு இருக்கின்ற தார தோஷம் நீங்க, முருகப்பெருமான் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கின்ற முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று, முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமைகள் தோறும் இப்படி முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று பாலாபிஷேகம் செய்ய இயலாதவர்கள், தினமும் தங்கள் வீடுகளில் காலை – மாலை முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். மந்திர சொற்கள் நிறைந்த கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால், ஜாதகத்தில் இருக்கின்ற செவ்வாய் கிரகம் பலம் பெற்று, தார தோஷத்தின் பாதிப்பை குறைத்து, இனிமையான மணவாழ்க்கை உண்டாக முருகப்பெருமான் அருள் புரிவார்.

- Advertisement -

தார தோஷம் என்றாலே பெரும்பாலானோருக்கு முதலில் அறிவுறுத்தப்படுகின்ற பரிகாரம் என்பது வாழை மரத்திற்கு தாலி கட்டுதல் பரிகாரம் தான். காரணம், தார தோஷம் இருந்தாலே அந்த ஜாதகருக்கு இரு தாரம் எனப்படும் இரண்டு முறை திருமணம் நடைபெறும் அமைப்பை குறிப்பதாக கருதப்படுகிறது. அதிலும் முதல் தாரம் இறந்து, இரண்டாவது தாரத்தை திருமணம் செய்ய கூடிய அமைப்பை குறிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் தார தோஷம் இருக்கின்ற ஆண்கள் ஒரு சுப முகூர்த்த நாளில், தங்களின் குலதெய்வ கோயிலுக்கு சென்று, ஒரு வாழை மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புது வஸ்திரத்தை வாழை மரத்துக்கு சாற்றி, அதன் பிறகு அந்த வாழை மரத்திற்கு தாலி கட்ட வேண்டும்.

பிறகு அந்த வாழை மரத்தை ஒரு கத்தியை கொண்டு இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டி ஓடும் ஆற்று நீரில் வீசி விட வேண்டும். இப்படி செய்வதால் ஜாதகத்தில் இருக்கின்ற தார தோஷம், இருதார தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கி அந்த ஆணுக்கு நல்ல மன வாழ்க்கை அமையும். மேலும் இந்த பரிகாரத்தை தார தோஷம் இருக்கின்ற ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும். இரண்டு திருமண யோகம் அமைந்த ஜாதகம் கொண்ட பெண்கள் இந்த வாழை மரத்திற்கு தாலி கட்டுதல் பரிகாரத்தை செய்யக்கூடாது.

- Advertisement -

ஜாதகத்தில் தார தோஷம் இருப்பவர்கள் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்று ரங்கநாயகி, ஆண்டாள் சமேத ரங்கநாதர் பெருமாளை தரிசனம் செய்வதால் ஜாதகத்தில் இருக்கின்ற தார தோஷத்தின் வீரியம் குறைந்து, நல்ல மணவாழ்க்கை அமையும். தார தோஷம் இருப்பவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசை தினத்தன்று, உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கோ அல்லது கோயிலில் இருக்கின்ற ஆஞ்சநேயர் சன்னதிக்கோ சென்று ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபாடு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பச்சை கற்பூர பரிகாரம்

இப்படி செய்பவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற தார தோஷம், இருதார தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கி மணவாழ்க்கை சிறக்கும். தினந்தோறும் மாலையில் விளக்கு ஏற்றும் நேரத்தில் கந்தர் அனுபூதி பாடலை முருகப்பெருமானை நினைத்து படித்து வருபவர்களுக்கு இந்த தார தோஷம் ( Thara dosham pariharam in Tamil ) நீங்கி சிறப்பான மணவாழ்க்கை கிடைக்க முருகப்பெருமான் அருள் புரிவார்.

- Advertisement -