கோகோ பீட் உரம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? செடி வைக்கிறதுக்கு முன்னாடி மண்ணில் இதை செஞ்சு வெச்சா காசு கொடுத்து மண் வாங்க வேண்டிய அவசியமே இல்லை!

thengai-naar-planting
- Advertisement -

பூச்செடி, காய்கறி செடி அல்லது பழ செடி எதுவாக இருந்தாலும் நீங்கள் வீட்டில் செடி வைப்பதாக இருந்தால் அதை வைக்கும் மண்ணின் தரம் மிகவும் முக்கியம். தரமான மண்ணால் மட்டுமே ஆரோக்கியமான செடியை கொடுக்க முடியும். எல்லா இடங்களில் இருக்கும் மண்ணும் தரமானதா? செடி, கொடிகள் வளர்வதற்கு ஏற்றதா? என்று கேட்டால் நமக்கு தெளிவாக தெரியாது. எனவே இதற்காக நர்சரிகளில் மண்ணைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற சத்துள்ள மண்ணை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

விவசாயியின் நண்பனாக விளங்கும் மண்புழுக்களை கொண்ட மண் ரொம்பவும் தரமானதாக கருதப்படுகிறது. மண்புழுக்கள் அதிகம் இருக்கும் மண்ணில் தாவரங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இதனால் மண்புழு உரத்தை பணம் கொடுத்து வாங்க வேண்டியது இல்லை! காய்கறி மற்றும் பழ கழிவுகளை ஒரு மண்பானையில் மண்ணை நிரப்பி சேகரித்து வந்தால் நாளடைவில் அது உரமாகி, அதிலிருந்து மண்புழுக்களும் தோன்ற ஆரம்பிக்கும். காய்கறி கழிவு மற்றும் மண்புழுக்கள் கலந்த அந்த மண் நல்ல ஒரு உரமாக இருக்கும்.

- Advertisement -

நீங்கள் தேங்காய் நாரை நிறையவே சேகரித்து வாருங்கள். தேங்காய் நாரை தேவையான அளவிற்கு சேகரித்த பிறகு, அதை சிறு சிறு துண்டுகளாக கத்தரிப்பான் அல்லது அறிவாளால் வெட்டி கத்தரித்துக் கொள்ளுங்கள். இதனால் கிடைக்கக்கூடிய தூள் கோகோ பீட் எனப்படுகிறது. இது மண்ணிற்கு நல்ல ஒரு ஊட்ட சத்தை கொடுக்கும். இதில் வளர்க்கப்படும் தாவரங்கள் வேகமாகவும் வளரும்.

நார்பகுதிகளை வெட்டி எடுத்த பின்பு அதை ஒரு பெரிய ஓட்டைகள் நிறைந்த சல்லடையில் போட்டு சலித்தால் தூள் தனியாகவும், தேங்காய் நார் தனியாகவும் பிரிந்து கிடைக்கும். இந்த தேங்காய் நாரை மண் தொட்டியின் அடிப்பகுதிகளில் போடுவதற்கு பயன்படும். மீதம் இருக்கும் தேங்காய் நார் தூளை தண்ணீரில் ஊற வைத்தால் தரமான கோகோ பீட் தயார்.

- Advertisement -

இந்த கோகோ பீட் உரத்தை நீங்கள் கொண்டு வந்த எவ்வகையான மண்ணிலும் கலந்து கொள்ளலாம். மண்ணுடன் கோகோ பீட் சேரும் பொழுது மண்ணிற்கு நல்லதொரு ஊட்டச்சத்து கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் காய்கறி கழிவுகளை மக்க வைத்து கிடைத்த உரத்தையும் இதனுடன் சேர்த்து கலந்து விடுங்கள். அதிலிருந்து உருவாகக்கூடிய மண்புழுக்களும் மண்ணிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உரம் தயாரிக்கும் பொழுதே பேப்பர் அல்லது அட்டை பெட்டிகளை கூட வெட்டி துண்டுகளாக்கி சேர்த்து மக்க வைக்கலாம். இதுவும் நல்ல ஒரு உரமாக இருக்கும்.

இது போல வீட்டில் தேவையில்லாத இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை மக்க வைத்து உரமாக்கி அதை மண்ணுடன் கலந்து வைத்துக் கொண்டால் அது நல்ல ஒரு ஊட்டச்சத்துள்ள மண் கலவையாக மாறும். இது எந்த வகையான தாவரத்தையும் நல்ல ஒரு வளர்ச்சியை கொடுக்கக் கூடியதாக அமையும். பிறகு இம்மண்ணில் நீங்கள் விதைகளை விதைத்து வளர்த்து பாருங்கள், அதிவேகமாக உங்களுடைய செடி அல்லது மரம் சூப்பராக வளர துவங்கும்.

- Advertisement -