வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் இந்த 3 பொருட்களை புதியதாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். பழசா போன பொருளை பயன்படுத்திக்கொண்டே இருந்தால், வீட்டில் நிச்சயம் தரித்திரம் தலைவிரித்தாடும்.

home

பொதுவாகவே நம் வீட்டில் பயன்படுத்தப்படும் எந்த பொருளாக இருந்தாலும் சரி, அது ரொம்ப ரொம்ப தேய்ந்து, பழைய பொருளாக மாறி விட்டால் அதை மாற்றி விட்டோ அல்லது தூக்கி தூர போட்டுவிட்டோ புதிய பொருளை வாங்கி வைப்பது தான் நல்லது. குறிப்பாக அந்த வரிசையில் நாம் பயன்படுத்தக்கூடிய ஆடைக்கு முதலிடம். ரொம்பவும் மக்கிப்போன கிழிந்த பழைய ஆடைகளை வீட்டில் உடுத்த கூடாது என்று சொல்லுவார்கள். இந்த ஆடையோடு சேர்த்து நம் வீட்டில் இருக்கக்கூடிய வேறு 3 பொருட்கள் பழுதடைந்தால் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது எந்த பொருள், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cloth

முதலில் நம் பாதங்களைப் பாதுகாக்க கூடிய செருப்பு. இந்த செருப்பை நாம் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது தினம்தோறும் செருப்பு, ஷூ அணிந்து கொண்டு வெளியில் செல்பவர்களாக இருந்தால் அந்தக் காலனி தேய்ந்த உடனேயே மாற்றிவிட வேண்டும். குறிப்பாக தேய்ந்த காலணிகளை வேறு எப்பவாவது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிகளிலோ அல்லது செருப்பு ஸ்டாண்டில் அடுக்கி வைக்கவே கூடாது. இது நம் வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டுவந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதேபோல் புதிய காலணிகள் ஆக இருந்தாலும் சரி, நீங்கள் வாங்கி இருப்பீர்கள். உங்களது கால்களுக்கு அது பொருந்தி இருக்காது. அதைக் கொண்டுபோய் பத்திரப்படுத்தி வைப்பீர்கள். இதுவும் மிகத் தவறு. பயன்படுத்தாத காலணிகள், ஷூக்கள் உங்களுடைய வீட்டில் இருக்காத படி பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. முடிந்த வரை உங்களது காலணிகளை வேறு ஒருவரை அணிய விடாதீர்கள். நீங்கள் வேறு யாருடைய காலணிகளையும் அணியும் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளாதீர்கள்.

cheppal

இரண்டாவதாக சொல்லப்படுவது நாம் படுத்து உறங்கும் பாய். இந்த காலத்தில் யார் பாயில் படுப்பது என்று சிந்திக்கிறீர்களா? உங்களுடைய வீட்டின் பாய் இருந்தால் அந்த பாய் கிழிந்து, குச்சு வெளியே வந்து தேய்ந்து இருக்கவே கூடாது. சேதமடைந்த, அந்தப் பாயை தூக்கி தூர போட்டுவிட்டு புதிய பாதை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

- Advertisement -

உங்கள் வீட்டில் பாய் பயன்படுத்தும் பழக்கம் இல்லையா? நீங்கள் பயன்படுத்தும் மெத்தைகளும் அசுத்தமான நிலையில் இருக்கக்கூடாது. மெத்தை விரிப்பு, தலையணை அழுக்கு படிந்து, கறை படிந்து, நாற்றம் பிடித்து, கிழிந்து, உள்ளிருக்கும் பஞ்சு அனைத்தும் வெளியே வரும் நிலையில் இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட அசுத்தமான படுக்கையை பயன்படுத்தினாலும் தரித்திரம் பிடிக்கும். முடிந்தவரை அதை அனைத்தையும் புதியதாக மாற்றிவிடுங்கள்.

mat

மூன்றாவதாக, நம் வீட்டில் பயன்படுத்தும் பூட்டு சாவி, தாழ்பாள், கேட் இவைகள் துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கவே கூடாது. உங்களுடைய வீட்டில் இரும்பு கேட், இரும்பு பூட்டு போட்டு இருந்தால் அதில் எண்ணெய் விட்டு அதை எப்போதுமே சுலபமாக பயன்படுத்தும் படி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது அந்த பூட்டை பயன்படுத்தும் போது உங்களுடைய வீட்டில் துருப்பிடித்த சத்தம் கேட்கக் கூடாது. (இரும்பு என்பது சனி பகவானுக்கு உரியது. வீட்டிலிருக்கும் எந்த இரும்பு பொருட்களாக இருந்தாலும், அது பழுதடைந்து மூலையில் கிடைக்கவே கூடாது. அதை சுத்தப்படுத்தி பயன்படுத்துங்கள். அப்படி இல்லை என்றால் அதை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுங்கள்.)

pootu

முடிந்தவரை வீட்டிற்கு வாங்கும் பூட்டு பித்தளை பூட்டாக இருந்தால் நல்லது. சில பேர் வீட்டில் பீரோவின் லாக்கர் போட முடியாமல் இருக்கும். பீரோவை திறக்கும் போது மூடும்போது அதில் ஒருவிதமான சத்தம் எழுப்பும். இப்படி இருந்தாலும் சரி, அதை உடனே மாற்றி விடுங்கள். உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் இரும்பு கேட் இருந்தால், எப்போதுமே கீச்சுகீச்சு சத்தத்தோடு இருக்கக்கூடாது. அதையும் உடனடியாக மாற்றி விடுங்கள். இவ்வாறாக உங்களுடைய வீட்டில் தரித்திரத்தை சேர்க்கக்கூடிய இப்படிப்பட்ட பொருட்கள் இருந்தால், அதை உடனடியாக மாற்றும்போது வீட்டில் நிச்சயம் லட்சுமி கடாட்சம் அதிகரித்து, நிலைத்திருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த தீபத்தை ஒருமுறை ஏற்றினாலே போதும். வாழ்நாள் முழுவதும் உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்திற்கு ஒரு துளிகூட குறைவிருக்காது. உங்களுடைய வேண்டுதல் 11வது நாளில் நிச்சயம் நிறைவேறும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.