தரித்திரம் நீங்க துளசி இலை பரிகாரம்

mahalakshmi thulasi
- Advertisement -

எல்லோருக்கும் செல்வ செழிப்பான நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். இப்படி ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் எனில் அந்த வீட்டில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்திருக்க வேண்டும். லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்ற உடன் அதற்கான பூஜை புனஸ்காரங்கள் தான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். எந்த ஒரு விஷயத்திற்கும் நல்லது உள்ளே வரவேண்டும் என்றால் உள்ளிருக்கும் தீயவை வெளியேற வேண்டும்.

அதே போலத் தான் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டும் எனில் வீட்டில் இருக்கும் தரித்திரம் முதலில் வெளியேற வேண்டும். அதை செய்யாமல் நீங்கள் எத்தனை பூஜை நமஸ்காரங்கள் செய்தாலும் ஒரு பலனும் இருக்காது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் வீட்டில் இருக்கும் தரித்திரம் பீடைகள் ஒழியவும் மகாலட்சுமி தாயார் நம் இல்லம் தேடி வரவும் செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

தரித்திரம் பீடை நீங்க பரிகாரம்

தரித்திரம் நம்மை ஆட்கொள்ளாமல் இருக்க வேண்டுமெனில் முதலில் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் பொருட்களை ஆங்காங்கே இரைத்து வைப்பது அழுக்கு துணிகளை போட்டு வைப்பது போன்றவை நாமே தரித்திரத்தை விருந்து வைத்து அழைத்து விடுவது போல தான். அதே போல் வீட்டை எப்பொழுதும் நறுமணம் மிக்கதாக வைத்திருக்க வேண்டும். நல்ல மணங்கள் கமிழும் இடத்தில் தாயாரின் வாசம் நிச்சயமாக இருக்கும்.

தரித்திரம் நீங்க நாம் செய்யப் போகும் இந்த பரிகாரமானது வீட்டை சுத்தப்படுத்தும் முறை தான். பொதுவாகவே நம் இல்லங்களில் வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் பூஜை செய்ய அதற்கு முன் தினமும் வீட்டை துடைத்து சுத்தம் செய்வோம். இதை செய்வது வீட்டிற்கு நல்லது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

- Advertisement -

அப்படி சுத்தம் செய்யும் போது அந்த தண்ணீரில் உப்பு, மஞ்சள், பச்சை கற்பூரம் போன்றவற்றை கலந்து சுத்தப்படுத்துவோம். இது ஓரளவிற்கு அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக வீட்டில் இருக்கும் தீய சக்திகள் கண் திருஷ்டி போன்றவை விலகும். அந்த வகையில் வீட்டை சுத்தப்படுத்த நாம் இப்பொழுது செய்யப் போகும் இந்த முறையும் தரித்திரத்தை அடியோடு விரட்டி அடித்து தாயாரை நம் இல்லத்திற்கு வர வைக்கும்.

இதற்கு வீடு துடைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொஞ்சம் வெதுவெதுப்பான நீராக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி துளசி இலைகளை போட்டு விடுங்கள் இந்த தண்ணீர் 10 நிமிடம் அப்படியே இருக்கட்டும். அப்போது தான் புதினா இலையில் இருக்கும் சாறுகள் தண்ணீரில் முழுவதாக இறங்கும். அதன் பிறகு இந்த இலையை தூர போட்டு விடுங்கள்.

- Advertisement -

முதலில் இந்த தண்ணீரை தொட்டூ நம்முடைய நிலை வாசல் ஜன்னல் போன்ற இடங்களில் எல்லாம் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை நிலை வாசலில் இருந்து தொடங்கி வீடு முழுவதும் துடைத்து கடைசியாக வீட்டில் தென்கிழக்கு மூலையில் கொண்டு துடைத்து நிறுத்த வேண்டும். தென்கிழக்கு மூலையில் பெரும்பாலும் சமையலறை தான் இருக்கும். ஆகையால் நிலை வாசல் தொடங்கிய இந்த முறை சமையல் கட்டில் முடிப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள்.

இதில் இரண்டு நன்மைகள் உண்டு. முதலாவதாக துளசி இலையை போட்டு சுத்தம் செய்யும் போது தெய்வீக தன்மை அதிகரிக்கும். இது நம் ஆரோக்கியத்திற்கான ஒரு விஷயமாகவும் பார்க்கலாம். அத்துடன் இந்த திசையில் இருந்து நாம் துடைக்க தொடங்கும் முறையும் முடிக்கும் முறையும் வீட்டிற்கு பணவரவை ஏற்படுத்தக்கூடிய பரிகார முறைகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நிறைவேற தேங்காய் தீபம்

ஆகையால் ஒரே ஒரு விஷயத்தில் நமக்கு இத்தனை பலன்களை அனுபவிக்க முடியும் என்றால் அதை முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்றே சொல்லலாம். ஆன்மீகம் தொடர்பாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்த அனைத்து செயல்களுக்கும் பின்னால் ஒரு அறிவியல் நிச்சயம் இருக்கும். இந்த முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையோடு செய்து நல்ல பலன்களை பெறலாம்.

- Advertisement -