நாளை ஆடி அமாவாசையில் வீட்டிலேயே முறையாக தர்ப்பணம் கொடுப்பது எப்படி? தர்ப்பணம் கொடுக்க கூடாதவர்கள் யாரெல்லாம்?

- Advertisement -

ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வந்தால் நம்முடைய வாழ்வு சுபீட்சம் பெறும் என்கிறது சாஸ்திரம். ஆனால் ஒரு சிலரோ அதனை சரியாக பின்பற்றுவது இல்லை. இன்னும் சிலருக்கு அதனை தொடர்ந்து பின்பற்ற முடியாத சூழல் இருக்கும். இப்படி நேரமின்மை காரணமாக பித்ரு தர்ப்பணத்தை தவற விடுபவர்கள் பெரிய அமாவாசைகளில் முறையாக தர்ப்பணம் கொடுத்து பித்ரு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற்றுக் கொள்ளலாம் என்பது நியதி.

Amavasai Tharpanam

பித்ரு தோஷத்தால் குடும்பத்தில் பிரச்சனைகளும், தொழில் தடை, வியாபார தடை, வருமானக் குறைவு, நிம்மதியின்மை போன்ற பிரச்சனைகள் மேலிடத் துவங்கும் என்று கூறப்படுகிறது. எனவே முறையாக பெரிய அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை சாந்தி அடைய செய்வது நல்லது. இவ்வகையில் நாளை வரக்கூடிய ஆடி அமாவாசையில் கோவிலுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக முறையாக தர்ப்பணம் கொடுப்பது எப்படி? மேலும் தர்ப்பணம் கொடுக்க கூடாதவர்கள் யார்? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

பொதுவாக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது ஆண்களாக இருப்பார்கள். பெண்கள் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் கணவனை இழந்த கைம்பெண்ணாக இருக்க வேண்டும். சுமங்கலி பெண்களை தவிர யார் வேண்டுமானாலும் தங்களுடைய முன்னோர்களுக்கு தாராளமாக எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கலாம்.

tharpanam

வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை:
தர்ப்பணம் கொடுப்பவர்கள் தரையில் அமர கூடாது எனவே பூமியில் ஒரு வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு தாம்பூலத் தட்டை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது கை மோதிர விரலில் தர்பையை சுற்றி மோதிரம் போல முறுக்கி விட்டுக் கொள்ளுங்கள். உள்ளங்கையில் கொஞ்சம் எள் மற்றும் பச்சரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். எள்ளானது வெள்ளையாக இருக்க கூடாது, கருப்பு எள்ளாக மட்டுமே இருக்க வேண்டும்.

- Advertisement -

பஞ்சபாத்திரம் எனப்படும் பித்தளை சொம்பில் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். வலது கையில் இருக்கும் எள்ளை தாம்பூல தட்டில் இறைக்க வேண்டும். இறைக்கும் எள்ளானது உங்களுடைய வலது கையின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு இடையே வழிந்து செல்லுமாறு சாய்த்துக் கொள்ளுங்கள். வலது கையால் பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை எடுத்து எள்ளையும், தண்ணீரையும் சேர்த்து இறையுங்கள். இறைத்து முடித்த பிறகு கையை அதிலேயே நன்கு கழுவிக் கொள்ளுங்கள். ஒரு எள் கூட கைகளில் ஒட்டி இருக்கக் கூடாது.

tharpanam

பின்னர் தர்ப்பையை அவிழ்த்து அதிலேயே போட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஏரி, குளம், கிணறு போன்ற ஏதாவது ஒரு இடங்களில் அதனைக் கொண்டு சென்று கரைத்து விடுவது நல்லது. பித்ரு தர்ப்பணம் செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் இதோ! இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே எள்ளும், தண்ணீரும் இறைக்க வேண்டும். இப்படி முறையாக தர்ப்பணம் கொடுத்து பித்ருக்களின் மனம் சாந்தி அடைய செய்து பின்னர் பசுவிற்கு அகத்திக்கீரையும், வாழைப்பழமும் தானம் கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இப்படி செய்தால் பித்ருக்கள் உடைய பசி, தாகம் தீர்ந்து உங்களுடைய சந்ததியினர் பெருவாழ்வு வாழ அவர்கள் நல்லாசி புரிவார்கள்.

- Advertisement -

பித்ரு தர்ப்பண மந்திரம்:
ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே
ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய : பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச

Amavasai Tharpanam

நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச
துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:

Amavasai Tharpanam

தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:
யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:

- Advertisement -