தலை முடி வளர்ச்சி தாறுமாறாக இருக்க வேண்டுமா? யோசிக்காமல் இந்த ஒரு பேக்கை ரெடி பண்ணிடுங்க.

hair9
- Advertisement -

தலை முடி வளர்ச்சி தாறுமாறாக அதிகரிக்க வேண்டும் என்பதுதான் நாம் எல்லோருடைய ஆசையாக இருக்கின்றது. ஆனால் ஒரே நாளில் எல்லாமும் நடந்து விடாது. தலைமுடி வளருவதற்கு 3 லிருந்து 6 மாதங்கள் எடுக்கும். அந்த 6 மாதமும் தொடர்ந்து உங்களுடைய தலைமுடிக்காக நீங்கள் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். இரண்டு நாளைக்கு ஒரு முறை, 1 மணி நேரம் தலைமுடிக்காக கவனத்தை எடுத்தால் கூட, உங்களுடைய தலைமுடி சூப்பராக வளர்ந்து விடும். சரி இன்னைக்கு ஒரு ஈசி மெத்தெடையில் தலைமுடியை வளர செய்யும் ஹேர்பேக் எப்படி தயார் செய்வது என்று தான் பார்க்கப் போகின்றோம்.

தலை முடி வளர ஆளி விதை ஹேர்பேக்:
இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் ஆளி விதை. செம்பருத்திப்பூ, ஆலுவேரா ஜெல், இந்த 3 பொருட்களை வைத்து இன்றைக்கான அழகு குறிப்பு. நீங்கள் ரொம்ப ரொம்ப பிசியான ஆளாக இருந்தால் கூட இதை செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டொர் செய்து வைத்துவிட்டால், ஒரு மாதத்திற்கு சூப்பராக இந்த பேக்கை அப்ளை செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 5 டேபிள் ஸ்பூன், ஆளி விதையை போட்டுக் கொள்ளவும். இதை ஆங்கிலத்தில் ஃபிளக்ஸ் சீட்ஸ் (flax seeds) என்று சொல்லுவார்கள் அல்லவா. தண்ணீரில் அந்த ஆளி விதை நன்றாக கொதித்து வந்ததும் தண்ணீர் கொழகொழப்பாக மாறும்.

அந்த சமயத்தில் செம்பருத்தி பூ 10 லிருந்து 15 போடவும். காய்ந்த செம்பருத்தி பூக்களாக இருந்தாலும், போட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு அதுவும் கிடைக்கவில்லை என்றால் செம்பருத்திப்பூ பொடி 2 ஸ்பூன் இதில் போட்டு நன்றாக கலந்து, சூடாக இருக்கும்போதே ஒரு ஸ்டீல் வடிகட்டியில் ஊற்றி நன்றாக வடிகட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மீண்டும் அந்த திப்பியை அதே பாத்திரத்தில் போட்டு மீண்டும் 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி மீண்டும் கொதிக்க விட்டால் அதில் இருக்கும் எசன்ஸ் முழுவதும் உங்களுக்கு வீணாகாமல் கிடைக்கும். மீண்டும் கொதித்த அந்த தண்ணீரையும், முதலில் வடிகட்டி வைத்திருக்கும் ஜெல்லோடு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது சிவப்பு நிறத்தில் ஜாம் போல கொழகொழப்பாக உங்களுக்கு ஒரு பேக் கிடைத்திருக்கும். இதோடு ஆலோவேரா ஜெல் போட்டு நன்றாக அடித்து கலக்கவும். முடியவில்லை என்றால் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டுகள். எல்லாம் கலந்து கொள்ளும். கொழ கொழப்பாகத்தான் இந்த ஜெல் இருக்கும். இதைத்தான் நாம் தலையில் அப்ளை செய்ய போகின்றோம்.

- Advertisement -

உங்களுக்கு கொஞ்சம் நிறைய அளவில் குவாண்டிட்டி கிடைத்திருக்கும் அல்லவா. இன்றைக்கு தேவையான அளவு ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து ஹேர்பேக் அப்ளை செய்ய வேண்டும். தலைமுடியில் சிக்கு எடுத்து விட்டு இந்த ஜெல்லை வேர்க்கால்களில் படும்படி தடவி, பிறகு முடியின் நுனி வரை தடவி, 20 லிருந்து 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு ஜென்டலாக ஷாம்பு போட்டு குளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: தக்காளியே போடாமல் சுவையாக சாம்பார் வைக்க இதோ ஒரு புத்தம் புது ரெசிபி. தக்காளி விலையை பற்றி இனி நமக்கு கவலையே இல்லை.

மீதம் இருக்கும் ஜெல்லை டிரேவில் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து விட்டால் அது ஐஸ் கட்டிகளாக மாறிவிடும். அதை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு மீண்டும் ஃப்ரீசரில் ஸ்டார் செய்து விடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேவையான அளவு கட்டிகளை எடுத்து சின்ன கிண்ணத்தில் போட்டு அதை கரைய விட்டு விடுங்கள். கரைந்ததும் அது மீண்டும் ஜெல் பதத்திற்கு வந்து விடும். பிறகு தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான். இது ஒரு ஈசி மெத்தட். ஆனால், இந்த ஹேர் பேக் உங்களுடைய முடிக்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை கொடுக்கும். சீக்கிரம் முடியை வளர செய்யும். அழகு குறிப்பு பிடித்தவர்கள் ஒரு மாதம் ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

- Advertisement -