தக்காளியே போடாமல் சுவையாக சாம்பார் வைக்க இதோ ஒரு புத்தம் புது ரெசிபி. தக்காளி விலையை பற்றி இனி நமக்கு கவலையே இல்லை.

sambar1
- Advertisement -

தங்கம் தான் வாங்க முடியாதுன்னு நினைச்சா, இன்றைக்கு தக்காளி பழத்தை கூட வாங்க முடியாத சூழ்நிலை. ஆப்பிள் பழத்திற்கு இணையான விலை, தக்காளி பழத்திற்கு. என்ன செய்வது. நடுத்தர வருடத்தினரால் 1 கிலோ தக்காளியை, 1 வாரத்திற்கு நிச்சயம் வாங்க முடியாது. தக்காளி இல்லாமல் சாம்பார் ரெசிபி கிடைத்தால் நன்றாக தான் இருக்கும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து இந்த ரெசிபியை தெரிந்து கொள்ளலாம். தக்காளி இல்லாமல் கூட சாம்பார் வைத்து சுவையாக சாப்பிடலாம்.

செய்முறை

முதலில் ஒரு குக்கரை எடுத்து அதில் 100 கிராம் – துவரம்பருப்பு போட்டு, 2 டம்ளர் – தண்ணீர் ஊற்றி, கொஞ்சமாக – மஞ்சள் பொடி, 1 ஸ்பூன் – நல்லெண்ணெய் விட்டு மூன்று விசில் விட்டு பருப்பை வேகவைத்து மசித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து கடாயில் 1 ஸ்பூன் – எண்ணெய் விட்டு, வரமிளகாய் – 5, வரமல்லி – 2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், வெந்தயம் – 10 கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பொருட்கள் எல்லாம் வறுபட்டு வந்தவுடன் இறுதியாக 1 – கைப்பிடி தேங்காய் துருவல், போட்டு தேங்காயின் ஈரத்தன்மை போக வறுக்கவும். அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து சின்ன நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு நீர்க புளிக்கரைசலாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், கேரட், முருங்கைக்காய் இதில் தேவையான அளவு காய்கறிகளை நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாம்பாரில் நாம் வெங்காயமும் சேர்க்கப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுத்து இப்போது சாம்பாரை தாளிக்க போகின்றோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 – ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை 2 – கொத்து, வர மிளகாய் – 3 கிள்ளிப்போட்டு, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், போட்டு தாளிக்கவும். அடுத்தபடியாக வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளை எண்ணெயில் போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகளுக்கு மட்டும் 1/4 ஸ்பூன் – உப்பு போட்டு, ஒரு மூடி போட்டு காய்கறிகளை அரைபாகம் வேக வையுங்கள்.

பிறகு மூடியை திறந்து கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை இதில் ஊற்றி மீண்டும் இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு, அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதில் ஊற்றி, வெல்லம் – 1 ஸ்பூன், சாம்பாருக்கு தேவையான அளவு – உப்பு, வேகவைத்த பருப்பு ஊற்றி, சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு, ஒரு கொதி வந்ததும் உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: ஒரு கட்டு கொத்தமல்லி இருந்தா வெங்காயம் தக்காளி தேங்காய் எதையுமே சேர்க்காம ரொம்ப சிம்பிளா அதே சமயம் அட்டகாசமான இந்த சட்னியை அரைச்சிடலாம். டேஸ்ட் சும்மா வேற லெவல் இருக்கும்.

பிறகு சாம்பாரை பச்சை வாடை போகும் அளவிற்கு கொதிக்க வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, இறக்கினால் சூப்பரான சாம்பார் தயார். இந்த சாம்பாரில் நாம் அரவை அரைத்து ஊற்றி இருக்கிறோம் அல்லவா. இது ரொம்பவும் திக்காகும். ஆகவே கொஞ்சம் தண்ணீரை அதிகமாக ஊற்றிக் கொள்ளுங்கள். சாம்பார் நன்றாக ஆறிய பிறகு திக்காகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த எளிமையான ரெசிபி பிடிச்சிருந்தா தக்காளி விலை உயர்வாக இருக்கும் இந்த சமயத்தில் முயற்சி செய்து பார்க்கவும். இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி, சாப்பாட்டிற்கு சூப்பரான சாம்பார் இது.

- Advertisement -