குரு தட்சிணாமூர்த்தி 108 போற்றி

guru

64 சிவ வடிவங்களில் ஒருவராக இருப்பவரே தட்சிணாமூர்த்தி. ஞானத்தின் பொருளாக இருக்கும் இவரை வழிபட்டால் அறிவும் தெளிவும் ஞானமும் பிறக்கும். தென் திசை நோக்கி வீற்றிருக்கும் இவரை குரு பகவான் என்றும் நாம் அழைப்பதுண்டு. சிவ குருவான இவரை ஒருவர் வழிபடுவதன் மூலம் ஏராளாமான பலங்களையும் புண்ணியங்களையும் பெற்று வாழ்வில் சிறக்க முடியும். அந்த வகையில் தட்சிணாமூர்த்தியை வழிபடும் சமயத்தில் அவருக்குரிய மந்திரம் அல்லது போற்றியை கூறுவது நல்லது. இதோ அவருக்கான 108 போற்றி.

guru

தட்சிணாமூர்த்தி 108 போற்றி

ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழிவிலானே போற்றி
ஓம் அடைக்கலமே போற்றி
ஓம் அருளாளனே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி

ஓம் அடியாரன்பனே போற்றி
ஓம் அகத்துறைபவனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அபயகரத்தனே போற்றி

ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி
ஓம் ஆன்மீகநாதனே போற்றி
ஓம் ஆச்சாரியனே போற்றி
ஓம் ஆசாரக்காவலே போற்றி
ஓம் ஆக்கியவனே போற்றி

ஓம் ஆதரிப்பவனே போற்றி
ஓம் ஆதி பகவனே போற்றி
ஓம் ஆதாரமே போற்றி
ஓம் ஆழ்நிலையானே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி

- Advertisement -

ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
ஓம் இருமை நீக்குபவனே போற்றி
ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
ஓம் ஈடேற்றுபவனே போற்றி
ஓம் உய்யவழியே போற்றி

Guru baghavan

ஓம் ஊழிக்காப்பே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எளியோர்க்காவலே போற்றி
ஓம் ஏகாந்தனே போற்றி
ஓம் ஏடேந்தியவனே போற்றி

ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓங்கார நாதமே போற்றி
ஓம் கயிலை நாதனே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் கலையரசே போற்றி

ஓம் கருணைக்கடலே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சதாசிவனே போற்றி
ஓம் சச்சிதானந்தமே போற்றி

ஓம் சாந்தரூபனே போற்றி
ஓம் சாமப்பிரியனே போற்றி
ஓம் சித்தர் குருவே போற்றி
ஓம் சித்தியளிப்பவனே போற்றி
ஓம் சுயம்புவே போற்றி

ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞானநாயகனே போற்றி
ஓம் ஞானோபதேசியேபோற்றி

ஓம் தவசீலனே போற்றி
ஓம் தனிப்பொருளே போற்றி
ஓம் திருவுருவே போற்றி
ஓம் தியானேஸ்வரனே போற்றி
ஓம் தீரனே போற்றி

Guru astrology

ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் தேவாதிதேவனே போற்றி
ஓம் தேவருமறியா சிவனே போற்றி

ஓம்நன்னெறிக்காவலே போற்றி
ஓம் நல்யாக இலக்கே போற்றி
ஓம் நாகப்புரியோனே போற்றி
ஓம் நான்மறைப்பொருளே போற்றி
ஓம் நிலமனே போற்றி

ஓம் நிறைந்தவனே போற்றி
ஓம் நிலவணியானே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி

ஓம் பசுபதியே போற்றி
ஓம் பரப்பிரம்மனே போற்றி
ஓம் பிரம்மச்சாரியே போற்றி
ஓம் பிறப்பறுப்போனே போற்றி
ஓம் பேறளிப்பவனே போற்றி

ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி
ஓம் பொன்னம்பலனே போற்றி
ஓம் போற்றப்படுவனே போற்றி
ஓம் மறைகடந்தவனே போற்றி
ஓம் மறையாப் பொருளே போற்றி

ஓம் மஹேசுவரனே போற்றி
ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி
ஓம் மாமுனியே போற்றி
ஓம் மீட்பவனே போற்றி

ஓம் முன்னவனே போற்றி
ஓம் முடிவிலானே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி

guru

ஓம் முக்தியளிப்பவனே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூர்த்தியே போற்றி
ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி
ஓம் மோன சக்தியே போற்றி

ஓம் மௌன உபதேசியே போற்றி
ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி
ஓம் யோக நாயகனே போற்றி
ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி
ஓம் யம பயமழிப்பவனே போற்றி

ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் விரிசடையனே போற்றி

ஓம் வில்லவப்பிரியனே போற்றி
ஓம் வினையறுப்பவனே போற்றி
ஓம் விஸ்வரூபனே போற்றி
ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி

தட்சிணாமூர்த்தி 108 போற்றி அதனை கூறி அவரை வழிபடுவோருக்கு கர்ம வினைகள் அகலும், புண்ணியம் செய்வதற்கான வாய்ப்புகள் பெருகும். நாம் இவரிடம் வேண்ட நினைத்து மறந்த கோரிக்கைகளை கூட இவர் நமக்கு நிறைவேற்றி தருவார். அத்தகைய சிறப்பு இவருக்கு உண்டு.

இதையும் படிக்கலாமே:
திருமணம் விரைவில் நடக்க மந்திரம்

English overview:
This article has guru Dakshinamurthy 108 potri in tamil. If one chant the Dakshinamurthy 108 potri then he will get enormous benefits. God Dakshinamurthy is a form of Lord Shivan and mostly he faces in south direction. Dakshinamurthy is also called as guru. Let us Pray God Dakshinamurthy and get some good benefits.