தட்டை செய்வது எப்படி என்று பாப்போம்

thattai

தீபாவளி என்றாலே நம் நினைவிற்கு வரும் பலகாரம் இந்த தட்டை. பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் இந்த தட்டையை நாம் எப்படி சுலபமாக செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

thatai_1

தட்டை செய்ய தேவையான பொருட்கள்:

மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
எள்ளு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஓமம் – 1 டீஸ்பூன்
உருக்கிய நெய் – சிறிதளவு
உளுந்தமாவு – 1/4 டம்ளர்
பொட்டு கடலை மாவு – 1 ஸ்பூன்
அரிசி மாவு – 1/2 டம்ளர்
கடலை பருப்பு – தேவையான அளவு
நெய் – 2 ஸ்பூன்

தட்டை செய்முறை:

ஒரு கின்னத்தில் அரிசிமாவு, உளுந்தமாவு , பொட்டு கடலைமாவு சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து அதனுடன் எள்ளு சேர்த்து கூடவே ஓமம் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஒரு மணிநேரம் ஊறவைத்த கடலை பருப்பினை சேர்க்க வேண்டும்.

thatai_2

- Advertisement -

பிறகு உப்பு சேர்த்து கலந்து உருகிய நெய் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். மாவினை நன்றாக பிசைந்தும் அதனை ஒரு கவரில் எண்ணெய் தடவி அதில் வைத்து அழுத்தி வட்டமாக தட்டி கொள்ளவும்.

thatai_3

மீதமுள்ள அணைத்து மாவினையும் இது போன்று தட்டி தயார் செய்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தட்டி வய்த்த மாவினை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான தட்டை தயார்.

thatai_4

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடங்கள்
தட்டைகளின் எண்ணிக்கை – 20

2019 ஆண்டு ராசி பலன்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

இதையும் படிக்கலாமே:
ஊத்தப்பம் செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thattai recipe in Tamil. It is also called as Thattai seimurai or Thattai seivathu eppadi in Tamil or Thattai ingredients in Tamil or Thattai preparation in Tamil.