மற்றவர்களுக்கு உதவி செய்வதால் நமக்கு கிடைக்கும் புண்ணியங்கள்.

mahabharatham-poor

அன்றாடம் தனது தேவைகளை கூட பூர்த்தி செய்யமுடியாமல் கஷ்டப்படுகின்றன. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேணடும். ஆன்மீக ரீதியாக நாம் செய்யும் உதவிக்கு பிற்காலத்தில் புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் என்பது என்னவென்று இப்பதிவில் காண்போம்.

money

 

ஒரு நல்ல காரியத்திற்கு நாம் உதவி செய்வது புண்ணியம் ஆகும். புண்ணியம் என்பது மூன்று வகையாக கூறப்படுகிறது. அதில் முதலாவதாக கூறப்படுவது, திருமணத்திற்கு உதவுவது, என்னவென்றால் அவர்களுக்கு பொண்ணாகவோ அல்லது பொருளாகவோ அல்லது திருமணத்திற்கு சம்பந்தப்பட்ட பொருட்களை தந்து உதவ வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை கிடைக்கும்.

 

இரண்டாவது புண்ணியம் என்னவென்றால் ஏழை மாணவர்களுக்கு பள்ளி சீருடை பேனா புத்தகப்பை போன்றவற்றை அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை தொகையை மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கி தருவதுதான் இருப்பதிலே மகா புண்ணியம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் நாம் ஒருவரை படிக்க வைப்பதன் மூலம் அவர்கள் குடும்பமே பயன்பெறும்.

- Advertisement -

 

மூன்றாவது புண்ணியம் வீடு கட்டுபவர்களுக்கு உதவி செய்வது. சிலரால் வீடு கட்டும் பொழுது ஏதாவது சில பிரச்சனைகள் இருக்கும். அப்பொழுது நாம் அவர்களுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ வீடு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனைகளாக இருந்தாலும் நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம். வீடு என்பது எல்லோராலும் கட்ட இயலாது தெய்வத்தின் ஆசி பெற்றால் தான் வீடு கட்ட இயலும். ஆதலால் வீடு கட்டுபவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்தால் நமக்கு தெய்வ புண்ணியம் கிடைக்கும். ஆகையால் நம்மால் முடிந்த உதவியை மற்றவருக்கு செய்யவேண்டும். நாம் இந்த உலகில் சுயநலவாதியாக இல்லாமல் வாழும் வரை பிறருக்கு உதவி செய்யவேண்டும்.

இதையும் படிக்கலாமே:
எந்த காரணம் கொண்டும் கணவனை திட்ட கூடாது. இல்லை என்றால் இதுதான் நடக்கும்

English Overview:
Here we have The benefits of helping others in tamil. We have details of The benefits of helping others too.