தீராத நோய் தீர தானம்

vibhuthi lingam
- Advertisement -

நோய் நொடி இல்லாத வாழ்க்கையை நிம்மதியான வாழ்க்கை என்ற கூற்றை அறியாதவர் எவரும் கிடையாது. எவ்வளவு பொன் பொருள்களை சம்பாதித்து சேர்த்தாலும் உடல் ஆரோக்கியமாக இல்லை என்றால் நாம் சம்பாதித்து அனைத்தும் வீண் தான். ஆரோக்கியம் சீர்குழையாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவருடைய தலையாகிய கடமை என்றே சொல்லலாம்.

அப்படி இருப்பினும் இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு வியாதியால் துன்பப்படுபவர்கள் இருக்கிறார்கள். தினந்தோறும் மாத்திரை எடுத்துக் கொள்ளும் ஏதாவது ஒரு நபர் நிச்சயம் இருக்கிறார்கள். இது இன்றைய காலக்கட்டத்தின் ஒரு மோசமான நிலை என்றே சொல்லலாம். இப்படியான நிலை மாற செய்யக் கூடிய எளிய ஒரு தான வழிப்பாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நோய் தீர செய்ய வேண்டிய தானம்

இன்றைய காலக்கட்டத்தில் நோய் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. தினமும் மூன்று வேளை சாப்பிடுவது போல மாத்திரை எடுத்துக் கொள்வதும் ஒரு வழக்கமாக போய் விட்டது. ஒரு சிலருக்கு அது சரியாகும் ஒரு சிலருக்கு என்ன நோய் என்றே தெரியாது. எவ்வளவு மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் சரி ஆகாது. இதற்கு இந்த தானம் நல்ல தீர்வு அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு சிவாலயத்திற்கு நாம் சில பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதில் முதலாவதாக விபூதியை தானமாக கொடுக்கலாம். இந்த விபூதியை உங்கள் வசதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம். இதில் இன்னொரு முறையும் உள்ளது விபூதியை வாங்கி சிவன் பாதத்தில் வைத்து வணங்கி அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நோய்வாய்ப்பட்டவர் யாரோ அவர் கையாலயே சிவாலயத்தில் வருபவர்களுக்கு இந்த விபூதியை தானமாக கொடுக்க சொல்லுங்கள். இதன் மூலம் அவர் வியாதியில் இருந்து விரைவில் வெளிவருவார். அவரால் முடியாத பட்சத்தில் குடும்ப உறுப்பினர்கள் அவருக்காக செய்யலாம். அடுத்தது அரச மர குச்சிகளை கோவிலுக்கு தருவது.

பெரும்பாலும் அரச மர குச்சிகளை நாம் சமையலுக்கு நம்முடைய வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என்று சொல்வார்கள். அப்படியான அரசமரம் உங்கள் வீட்டில் இருந்தாலும் வீட்டின் அருகில் இருந்தாலும் அதிலிருந்து விழக்கூடிய குச்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த குச்சிகளை அருகில் உள்ள சிவாலயத்திற்கு கொடுத்தால் அங்கு அவர்கள் செய்யும் யாகங்களுக்கு இதை பயன்படுத்துவார்கள். இதன் மூலம் அந்த புண்ணிய பலன் உங்களுக்கு வந்து சேரும். இப்படி செய்வதன் மூலமும் வீட்டில் நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வளர்பிறை ஏகாதிசி வழிபாடு

சிவாலயத்திற்கு நீங்கள் தரக் கூடிய இந்த எளிய தான முறை உங்களுடைய குடும்பம் என்றென்றைக்கும் நோய் இன்றி ஆரோக்கியமாக வாழக் கூடிய அருளை பெற்று தரும். இந்த தானா முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெற முடியும் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -