வளர்பிறை ஏகாதிசி வழிபாடு

perumal poojai
- Advertisement -

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு திதிகள் உகந்ததாக இருக்கும். அந்த வகையில் இந்த திதி பெருமாள் வழிபாட்டிற்கும் விரத முறைக்கும் உகந்த திதி. அதே போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த நாள் பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் புதன்கிழமை. நாளைய தினம் பெருமாளுக்கு உகந்த புதன்கிழமையில் இந்த ஏகாதிசி திதியும் வந்திருப்பது பெருமாளை வழிபட நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்பு என்றே சொல்லலாம்.

அப்பேர்ப்பட்ட வளர்பிறை ஏகாதிசி திதியில் பெருமாளை வணங்கும் போது நம்முடைய செல்வ வளம் வளரும் என்பது ஐதீகம். நாளைய தினத்தில் பெருமாளை எப்படி எளிமையாக வழிபாடு செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

செல்வம் பெருக வளர்பிறை ஏகாதிசி வழிபாடு
இந்த வழிபாடு செய்வதற்கு நாளைய தினம் பிரம்மமுகூர்த்த நேரத்திலே எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். இந்த வழிபாட்ட நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது ஆறு முப்பதிலிருந்து ஏழு முப்பது மணிக்குள்ளாக செய்யலாம் அடுத்து ஒன்பது முப்பது மணியிலிருந்து பதினோரு முப்பது மணி வரை செய்யுங்கள். இந்த நேரத்தை தவறவிட்டால் மாலை ஆறு முப்பதிலிருந்து எட்டு முப்பதுக்குள் செய்துவிட வேண்டும்.

நாளைய தினத்தில் உங்கள் வீட்டில் பெருமாளுக்கு உரிய ஆன்மீக பொருள்கள் ஏதேனும் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள. கோமதி சக்கரம், சங்கு, மகாலட்சுமி தாயார் திரு உருவ சிலை, சாளக்கிராம கல், சிப்பிகள், சோழி, என எது இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். இவைகளுக்கு நாளைய தினத்தில் துளசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.

- Advertisement -

இவை எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை கொஞ்சம் துளசி தீர்த்தத்தை தொட்டு வீட்டில் இருக்கும் மகாலட்சுமி தாயார் திரு உருவப்படம் அல்லது பெருமாள் படத்தை துடைத்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். அதன் பிறகு இவைகளுக்கு துளசி மாலை அணிவியுங்கள் படமாக இருந்தால் படத்திற்கும் துளசி மாலை போடுங்கள்.

நெய்வேத்தியமாக ஏதேனும் ஒன்றை செய்து வைத்து விடுங்கள். இத்துடன் ஒரு இனிப்பையும் வைத்து வணங்க வேண்டும். மேலும் வெற்றிலை பாக்கு,பழம் வைக்க விரும்புபவர்கள் அதையும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பெருமாள் படத்திற்கு முன்பாக ஒற்றைப்படையில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் ஒரே ஒரு தீபம் ஏற்றினாலும் தவறில்லை.

- Advertisement -

இந்த தீபத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து வடக்கு நோக்கி கொள்ளுங்கள். அப்போது ஓம் வாசுதேவாய நமக என்ற இந்த ஒரு மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொண்டு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து உண்ணுங்கள்.

நாளைய தினத்தில் வாய்ப்புள்ளவர்கள் அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலை வாங்கி கொடுங்கள். இது உங்கள் வழிபாட்டை மேலும் பலனுள்ளதாக மாற்றிக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: அடகு நகை மீட்க மந்திரம்

நாளைய தினத்தில் எளிமையான முறையில் வீட்டிலே இந்த வழிபாடு செய்யும் போது பெருமானின் அனுகிரகம் முழுவதுமாக கிடைத்து உங்களுடைய ஏழ்மை நிலை அகன்று பொருளாதார நிலை மேம்படும் என்று சொல்லப்படுகிறது

- Advertisement -