தீராத நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் கூட விரைவில், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் அடைய இந்த 1 வரி மந்திரமும், 1 பயிற்சியும் போதுமே!

vilvam-sivan

பொதுவாகவே சில பேருக்கு உடல் உபாதைகளால், தங்களுடைய உடம்பில் இருக்கும் வியாதிகளுக்கு நிரந்தரமாக மருந்து சாப்பிட்டு வருவார்கள். இன்றைய சூழ்நிலையில் தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளை, ஆரோக்கிய ரீதியாக எதிர்கொண்டு, மருந்து சாப்பிட்டால் தான் உயிர் வாழ முடியும் என்று நிறைய பேர் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லோருமே இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். அப்படி உடலில் எந்த விதமான வியாதியும் இல்லை எனும் பட்சத்தில், இருப்பினும் கூட சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியவில்லை, ஏதோ கண்திருஷ்டி பட்டது போல, உடல் அசதியாகவே உள்ளது. மனது வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், உடல் ஒத்துழைக்கவில்லை என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

bramha-mudra

முதலில் காலையில் எழுந்து பல் தேய்த்து முகம் கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு சம்மணம் போட்டு கிழக்கு பக்கம் நோக்கி அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளிலும் பிரம்ம முத்திரைகளை வைத்து, மனதை அமைதிப்படுத்தி மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். மூச்சு பயிற்சி என்பது மெல்லமாக மூச்சை உள்ளே இழுத்து, மெல்லமாக மூச்சை வெளியே விடுவது. அவ்வளவு தான். இது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்த ஒன்றுதான். சாதாரணமாக தியானம் செய்பவர்கள் செய்யும் பயிற்சிதான் இது.

தினமும் இதைச் செய்து வந்தாலே நம்முடைய உடலில் இருக்கும் அசதி நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுவதை நம்மால் உணரமுடியும். நம்மை அறியாமலேயே நம்முடைய வேலைகளை நம்மால் சுறுசுறுப்பாக செய்ய முடியும். முயற்சி செய்து பாருங்கள். இது தியானப் பயிற்சி. இரண்டாவதாக ஆன்மீக ரீதியாக பூஜையில் செய்யக்கூடிய வழிபாட்டு முறையை பற்றியும் இப்போது தெரிந்துகொள்வோம்.

vilvam1

வில்வம் என்பது ஒரு அதி அற்புதம் வாய்ந்த மூலிகை. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, தியானம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. பூஜையறையில் உள்ள தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து, ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். பூஜைக்கு அதி அற்புதம் வாய்ந்த வில்வ இலைகள் கட்டாயம் தேவை. சுத்தமான பசும் சாணத்தில் செய்த விபூதி அவசியம் தேவை.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக விபூதியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மற்றொரு கிண்ணத்தை உங்கள் முன்பாக வைத்து அந்தக் கிண்ணத்தில் இரண்டு வில்வ இலைகளை போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் கையில் கிண்ணத்தில் இருக்கும் விபூதியை ஒரு சிட்டிகை எடுத்து வில்வம் இருக்கும் கிண்ணத்தில் போட்டு, அர்ச்சனை செய்யவேண்டும் சிவபெருமானை மனமுருகி வேண்டி ‘ஓம் ருத்ராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து, 108 முறை விபூதியால் அர்ச்சனை செய்யுங்கள். சிவபெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக இந்த பூஜை செய்வது சிறப்பு.

shivan

அதாவது குங்கும அர்ச்சனை எப்படி செய்வோம்? கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும், சேர்த்து குங்குமத்தை ஒரு சிட்டிகை எடுத்து வெற்றிலையின் மேல் செய்வோம் அல்லவா! அதேபோல் தான் விபூதியை எடுத்து, வில்வ இலைகள் உள்ள கிண்ணத்தில் போட்டு, உங்களது பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். (வெற்றிலையின் மேல் குங்கும அர்ச்சனை செய்வோம். வில்வ இலையின் மேல் விபூதி அர்ச்சனை செய்கின்றோம் அவ்வளவுதான்.) தினந்தோறும் வில்வ இலையோடு கலந்து இருக்கும் அந்த விபூதியை நெற்றியில் நம்பிக்கையோடு பூசிக் கொண்டு வந்தாலும் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

vibuthi

இந்த விபூதியை கொஞ்சமாக நல்ல தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நிச்சயமாக நம்பிக்கையோடு இந்த பரிகாரங்களை செய்தால் நல்ல பலனைப் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.