நாளை(2/6/2021) தேய்பிறை அஷ்டமி! பைரவருக்கு வீட்டிலேயே பஞ்ச தீப விளக்கு ஏற்றினால் காலத்தால் தீர்க்க முடியாத உங்கள் பிரச்சினைகள் கூட நிச்சயம் தீருமாம்!

kala-bairavar-vilakku

அந்தகாசுரனை அழிக்க அவதாரம் எடுத்தவர் பைரவர். சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார். எனவே இவருக்கு ஐந்து தீபங்கள் வைத்து விளக்கு ஏற்றி வழிபடும் பொழுது நமக்கு காலத்தால் தீர்க்க முடியாத எத்தகைய பிரச்சனையும் அவர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. அவரை நாளை தேய்பிறை அஷ்டமியில் எப்படி வழிபாடு செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kala-bairavar

சிவபெருமானுக்கு எப்படி 64 அவதாரங்கள் இருக்கின்றதோ! அதே போல கால பைரவருக்கும் 64 வடிவங்கள் உள்ளதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. ஆனால் 64 வகைகளில் குறிப்பிட்ட சில வகை தான் நமக்கு இப்போது தெரிய வந்துள்ளது. அதில் ஒன்று தான் காலபைரவர் ஆவார். கால பைரவர் கால சக்கரத்தை சுழற்றும் பொறுப்பை கொண்டுள்ளவர் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. காலபைரவர் உடைய மூச்சுக்காற்றில் உருவானது தான் வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்று கூறப்படுகிறது. இவருடைய உடம்பில் நவகிரகங்களும், 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. காலத்தை தாண்டி வெல்லக்கூடிய ஆற்றல் பெற கால பைரவரை முறையாக வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.

மனிதன் பிறப்பு எடுப்பது தத்தம் கர்மவினைப் பயன்களை அனுபவிக்க தான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். எப்பொழுது கர்ம வினைகள் குறைகிறதோ! அப்போது மனித பிறவி இல்லாத நிலையை அவன் அடைகிறான். காலபைரவர் காலத்தை வெல்லக் கூடியவர் என்பதால் இவருக்கு காலத்தை மாற்றி அமைக்கும் சக்தியும் உண்டு. நாம் எத்தனை பிறவிகள் எடுத்து இருந்தாலும் அத்தனை பிறவியிலும் இருக்கும் கர்மவினை பாவ, புண்ணியங்களை தீர்த்துக் கொள்வதற்கு கால பைரவரை வழிபட்டால் நல்லது. மிகவும் உக்ர தெய்வமான காலபைரவரை உளமாற சரணடையும் பொழுது நம்முடைய பாவ புண்ணியங்கள் அனைத்தும் அழிந்து மறுபிறவி என்பது இல்லாமல் போகுமாம்.

sathur-kala-bairavar

பைரவருக்கு மிகவும் உகந்த தினம் தேய்பிறை அஷ்டமி ஆகும். பவுர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். கோவிலுக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தே பைரவரை வழிபடலாம். நாளை அஷ்டமி திதியில் வீட்டிலேயே பஞ்ச தீப எண்ணெய் ஏற்றி மனதில் பைரவரை நினைத்து பைரவ மந்திரத்தை உச்சரித்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -

பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும். அதாவது 5 அகல் விளக்குகளை பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும். நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

kalabairavar

கால பைரவ மந்திரம்:
‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ!’

agal-vilakku

ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பைரவர் உடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் உங்களுடைய எல்லா விதமான பிரச்சினைகளும் சட்டென தீரும் என்பது நியதி. இந்த நாளில் பைரவாஷ்டகம் வாசிப்பது உள்ளத்திலும், எண்ணத்திலும் நல்ல விஷயங்களை விதைக்கும். நேர்மறை எண்ணங்கள் பெருகி குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அத்தனையும் நீங்கச் செய்து குடும்பம் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சுபீட்சம் அடையும். ஆகவே இந்நாளை தவறவிடாமல் பைரவ வழிபாடு செய்து அனைவரும் பயன் பெறலாமே!