தேய்பிறை அஷ்டமியில் நாய்களுக்கு இந்த பொருட்களை தானம் செய்தால் வாழ்வில் நீங்கள் செய்த பாவங்கள் பாதியாய் குறையும் தெரியுமா?

bairavar-dog-chappathi
- Advertisement -

நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லும் நிலா மீண்டும் தேய ஆரம்பிக்கும் பொழுது இந்த பிரபஞ்சத்தில் ஒரு விதமான மாற்றம் நிகழ்கிறது. இம்மாற்றத்தின் இறுதியாக அமாவாசை தோன்றும் பொழுது பிரபஞ்சத்தில் அதீதமான சக்தி நிலவும். இந்த சக்தியை நல்ல விசயத்திற்கும் பயன்படுத்துவார்கள், அமானுஷ்ய விஷயத்திற்கும் பயன்படுத்திக் கொள்வது உண்டு. அத்தகைய சக்தி வாய்ந்த தேய்பிறை நாட்கள் ரொம்பவே விசேஷமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு ரொம்பவே உகந்ததாக இருக்கிறது.

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவர்களுக்கு கடன் எல்லாம் தீரும், பகை எல்லாம் ஒழியும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அவருடைய வாகனமாக இருக்கக்கூடிய நாய்களுக்கு அன்றைய நாளில் நாம் இந்த தானங்களை வழங்குவதால் நமக்கு செய்த பாவங்கள் பாதியாய் குறையும் என்கிற நம்பிக்கையும் உண்டு. அவ்வகையில் நாம் தேய்பிறை அஷ்டமி அன்று நாய்களுக்கு செய்ய வேண்டியது என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக தகவல்கள் ஆக அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் எவ்வளவு பெரிய கடன் தொகையில் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து உடனடியாக மீண்டு விடுவார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும், பைரவரை மனதார வழிபட்டு செவ்வரளி மலர் சாற்றினால் இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

அது போல பகைவர்கள் தொல்லைகளால் அவதிப்படுபவர்களும் பைரவர் சன்னிதிக்குச் சென்று அவருக்கு அபிஷேகம் செய்து அவருடைய விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டாலே போதும், பகைவர்கள் உங்களை நெருங்க கூட மாட்டார்கள். பைரவர் உடைய விபூதியை வியாழன் கிழமை அன்று கோவிலுக்கு சென்று எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் அனைத்தும் தலைதெறிக்க ஓடி விடும். எவ்வளவு கஷ்டங்கள் வீட்டில் இருந்தாலும் அவை ஒழிந்து சுபீட்சம் பெருகும் என்ற நம்பிக்கையும் உண்டு. பைரவருக்கு அத்தகைய சக்திகள் உண்டு. அது போல பைரவர் உடைய வாகனமாக இருக்கக்கூடிய நாய்களுக்கு உணவாக நாம் எதைக் கொடுத்தாலும் அது புண்ணியக் கணக்கில் சேரும்.

- Advertisement -

அந்த வகையில் தேய்பிறை அஷ்டமியில் நாய்களுக்கு தானம் கொடுப்பது ரொம்பவே சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது நாய்களுக்கு சப்பாத்தி கொடுப்பது என்பது இன்னும் அதிகமான பலன்களைக் கொடுக்கக் கூடிய ஒரு தானமாக இருந்து வருகிறது. வட மாநிலங்களில் அதிகம் தயாரிக்கப்படும் இந்த சப்பாத்தியை பைரவரின் வாகனமாக இருக்கும் நாய்களுக்கு தேய்பிறை அஷ்டமியில் தானம் செய்வது என்பது ரொம்பவே விசேஷமானது. சப்பாத்தி மட்டுமல்ல கோதுமையால் செய்யப்பட்ட எந்த உணவையும் நாய்களுக்கு தானம் கொடுப்பது என்பது பாவங்களைப் போக்கக் கூடிய சூட்சுமமான பரிகாரமாக இருந்து வருகிறது.

மேலும் அது மட்டுமல்லாமல் பிஸ்கட் போன்ற மைதாவில் செய்யப்பட்ட உணவு வகைகளையும் நாம் அன்றைய தினத்தில் நாய்களுக்கு தானம் செய்தால் நம்முடைய பாவங்கள் பாதியாய் குறைந்து நம்முடைய பிரச்சினைகளும் குறைய ஆரம்பிக்கும் என்பது நம்பிக்கை எனவே நீங்களும் தேய்பிறை அஷ்டமியில் நாய்களுக்கு உங்களால் முடிந்த தானத்தை செய்து பைரவரின் அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -