வீட்டைக் கூட்டினால் இந்த இடத்தில் மட்டும் தெரியாமல் கூட இனி குப்பையை குவிக்காதீர்கள் பணம் சேரவே சேராது!

broom-vasthu-vastu
- Advertisement -

பொதுவாக வீட்டில் குப்பைகளை மூலைக்கு மூலை குவித்து வைப்பது தவிர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூற நாம் கேட்டிருப்போம். இதனால் தரித்திரம் உண்டாகும் என்று கூறுவார்கள், ஆனால் இந்த இடத்தில் தெரியாமல் கூட நாம் குப்பைகளை குவித்து வைத்தால், பணம் சேரவே சேராது என்று எச்சரிக்கிறது வாஸ்து சாஸ்திரம்! அப்படியான மூலை எது? அந்த இடத்தில் வைக்க கூடாதவை எவை எல்லாம்? என்பதைத் தான் இந்த வாஸ்து குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் வீட்டில் வாஸ்து பகவான் இருப்பதாக இந்த சாஸ்திரம் கூறுகிறது. இவருடைய தலை முதல் கை, கால், உடல் வரை அனைத்தும் நம் வீட்டில் பதிந்திருக்கும். எந்தெந்த மூலையில் எப்படியான வாஸ்து பகவானுடைய உடல் அமைந்து இருக்கிறதோ, அதற்கு ஏற்ப பலன்களும் கூறப்படுகிறது. அந்த வகையில் தென்கிழக்கு மூலையை அக்னி மூலை என்று கூறுவார்கள். இந்த அக்னி மூலையில் தான் சமையல் அறையை அமைத்து வைத்திருப்பார்கள். இங்கு கழிவறை போன்ற நீர் சார்ந்த வேறு எந்த ஒரு விஷயமும் அமைய பெற்றிருக்கக் கூடாது.

- Advertisement -

அக்னி இருக்கும் இடத்தில் நீர் இருந்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமாம். இதனால் விபத்துகள் நேர்வதற்கும் வாய்ப்புகள் உண்டாம். வீட்டின் அக்னி மூலையில் சமையலறை இடம் பெற்று இருக்க வேண்டும். இது போல அக்னி சார்ந்த எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் அமைந்திருக்கலாம். பிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன் போன்றவை அமைந்திருக்கலாம். குளியலறை, கழிவறை, தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க், துணி துவைக்க பயன்படுத்தும் கல் போன்றவை அமைந்திருக்கக் கூடாது. இவையெல்லாம் தண்ணீர் புலங்கும் இடமாக இருக்கிறது.

மேலும் நம்முடைய வீட்டில் எந்த ஒரு மூலையிலும் குப்பையை பொதுவாக பெருக்கும் பொழுதும், கூட்டி வைக்கும் பொழுதும் குவிக்க கூடாது என்று சாஸ்திரங்கள் உண்டு. அப்படி ஒரு இடத்தில் குப்பையை குவித்து வைத்துவிட்டு அள்ளாமல் போய்விட்டால் சுப காரியங்களில் தடைகள் ஏற்படும் என்று கூறுவார்கள். நல்ல நாட்கள், விசேஷங்களின் பொழுது அதில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் என்றும் நம்பப்படுகிறது.

- Advertisement -

அதுபோல அக்னி மூலை என்று கூறப்படும் இந்த தெற்கும், கிழக்கும் இணைந்த தென்கிழக்கு மூலையில் குப்பைகளை கண்டிப்பாக குவித்து வைக்க கூடாது. அப்படி அந்த இடத்தில் குப்பைகளை அள்ளாமல் குவித்து வைத்தால், குடும்பத்தில் வருமானம் தடைபடும், தொழில் நஷ்டம் ஏற்படும், கையில் இருக்கும் பணம் கரையும், பொருளாதாரம் நலிவடையும் என்று கூறப்படுகிறது. எனவே தென்கிழக்கு பகுதியில் அறியாமல் கூட குப்பைகளை கூட்டி குவித்து வைக்காதீர்கள், உடனே அள்ளி விடுங்கள். தென்கிழக்கு பகுதி மட்டுமல்ல, வீட்டில் எங்கேயும் குப்பைகளை குவிக்காமல் உடனே அள்ளி வைப்பது தான் குடும்பத்திற்கு நல்லது.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் வறுமை நீங்கி அளவில்லாத செல்வம் சேர வீட்டின் வடக்கு திசையில் இதை எல்லாம் வைத்தாலே போதும். செல்வம் தானாக உங்கள் வீடு தேடி வரும்.

வீட்டில் அசைவம் சாப்பிடுபவர்கள், அந்த அசைவ கழிவுகளை சமையலறையில் நீண்ட நேரம் போட்டு வைக்கக்கூடாது. சுத்தம் செய்தவுடன் அதை குப்பையில் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். சமையலறையில் அசைவ கழிவுகள் இருப்பது குடும்பத்திற்கு ஆகாது. அது போல சாப்பிட்ட உடன் மீதம் இருக்கும் அசைவ குப்பை கழிவுகளையும், உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். அதை தென்கிழக்கு திசையில் கண்டிப்பாக போட்டு வைக்கக் கூடாது.

- Advertisement -