வெள்ளை சட்னியை தேங்காய் பொட்டுக்கடலை எதையும் சேர்க்காமல் இப்படி வித்தியாசமா அரைச்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுடச்சுட இட்லியோடு இந்த சட்னி வைத்து சாப்பிட்டா சான்சே இல்ல.

white chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு எப்போதுமே இந்த தேங்காய் சட்னி ஒரு ஸ்பெஷல் சைடிஷ் தான். சைடிஷ் செய்ய எதுவுமே இல்லை என்றாலும் சட்டு என்று ஒரு சட்னி அரைத்து விடுவோம். அப்படியான இந்த ஸ்பெஷல் சட்னியை இன்னும் ஸ்பெஷலாக பொட்டுக் கடலை தேங்காய் எதையும் சேர்க்காமல் எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் -1, பச்சை மிளகாய் -3, பூண்டு பல் – 2, இஞ்சி -1/2 இன்ச், உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு -1/4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -2, கடலை எண்ணெய் -2 டீஸ்பூன், உப்பு -1/4, கருவேப்பிலை -1கொத்து.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து பச்சை மிளகாய் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு உளுத்தம் பருப்பை அதில் சேர்த்து லேசாக வாசம் வரும் வரை கொள்ளுங்கள் . அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு வதக்கியதை அப்படியே ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் வதக்கிய வெங்காயம், உளுந்து அனைத்தையும் சேர்த்த பிறகு உப்பையும் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்த பிறகு இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: தேங்காய் குல்பி ஐஸ் செய்முறை

அடுத்ததாக அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு போட்டு பொரிய விடுங்கள். அதன் பிறகு காய்ந்த மிளகாயும் கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். கடாய் இறக்கும் சமயத்தில் கருவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் அதை அரைத்து வைத்து சட்னியில் ஊற்றி கலந்து விடுங்கள். தேங்காய் பொட்டுக்கடலை எதையும் சேர்க்காமல்  நிமிடத்தில் சூப்பரான ஒரு வெள்ளை சட்னி தயார்.

- Advertisement -