நாளை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணருக்கான படையலில் வைக்க வேண்டிய பலகாரங்கள் என்னென்ன? அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

burfi
- Advertisement -

கிருஷ்ணர் என்றாலே மனதிற்குள் கொண்டாட்டம் தான். இதற்கு காரணம் கிருஷ்ணரின் லீலைகள் தான். எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் கிருஷ்ணர் என்ற பெயரை கேட்டவுடனே சோகங்கள் மறைந்து மனதிற்குள் புத்துணர்ச்சி வந்துவிடும். இவ்வாறான கிருஷ்ணரின் பிறந்த நாளையே கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். இந்த தினத்தில் கிருஷ்ணருக்குப் பிடித்த பலகாரங்களை படைத்து கிருஷ்ணரை வணங்கி அவரின் அருளைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கிருஷ்ணருக்கான படையலில் வைக்கும் இனிப்புகளான தேங்காய் பர்ஃபி மற்றும் திரட்டுப் பால் இவற்றை எவ்வாறு செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

coconut-burfi3

தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – 1 கப், சர்க்கரை – 2 கப், கடலைமாவு – 2 ஸ்பூன், நெய் – 3 ஸ்பூன், ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 15.

- Advertisement -

செய்முறை:
முதலில் தேங்காயை வைத்து நன்றாகக் கிளறி தேங்காய் துருவல் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு முந்திரி பருப்புகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடலை மாவை சேர்த்து லேசாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

thirattu-pal

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும், 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை நன்றாக கிளறி விடவேண்டும். பிறகு இதனுடன் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள கடலை மாவு, ஏலக்காய் பொடி இவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவை நன்றாக கெட்டியாக வரும்போது அடுப்பை அனைத்துவிட்டு, ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் நெய் தடவி தேங்காய் கலவையை அதில் சேர்த்து நன்றாக தட்டிக்கொண்டு, வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். இறுதியாக பொடி செய்து வைத்துள்ள முந்திரிப் பருப்புகளைத் தூவி விடவேண்டும்.

- Advertisement -

திரட்டுப் பால் செய்ய தேவையான பொருட்கள்:
பால் – ஒரு லிட்டர், வெள்ளம் – 300 கிராம், ஏலக்காய்த் தூள் – ஒரு ஸ்பூன், நெய் – அரை ஸ்பூன், முந்திரிபருப்பு – 10.

thirattu-pal1

செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளற வேண்டும். பால் நன்றாக சுண்ட ஆரம்பிக்கும். பால் மூன்றில் ஒரு பங்கு வரும் வரை நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு இதனுடன் 300 கிராம் வெல்லத்தை நன்றாக தூள்செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

thirattu-pal2

அதன்பின் ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்பொழுது பால் நன்றாக கெட்டியாக சுருண்டு வந்திருக்கும். அந்த சமயத்தில் நெய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான திரட்டுப் பால் தயாராகிவிட்டது.

- Advertisement -