2 நிமிசத்துல தேங்காய் சேர்க்காமல் ரொம்ப சிம்பிளா இந்த சட்னியை செஞ்சு பாருங்க. சட்னியே பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட பத்து இட்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

- Advertisement -

இட்லி என்றாலே அதற்கு பர்ஃபெக்ட்டான காம்பினேஷன் சட்னி தான். அந்த சட்னியில் பல வகைகள் உண்டு. தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி, என்று எத்தனையோ வகைகள் இருக்கிறது. இப்படி வித்தியாசமான முறையில் ஒரு சட்னி ரெசிபி செஞ்சு சாப்பிட்டு பாருங்க, ஒரு சட்டி நிறைய இட்லி வச்சா கூட பத்தாது.

தேங்காய் இல்லாமல் அரைக்கும் இந்த சட்னி ரொம்பவே ருசியாகவும், அதே நேரம் சட்னியே பிடிக்காது என்பவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு மிகவும் ருசியாக இருக்கும். இந்த சிம்பிள் சட்னி ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் ஆறு காய்ந்த மிளகாய், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். இதை வதங்கிய பிறகு ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் ஓரளவிற்கு வதங்கிய பிறகு, நான்கு டேபிள் ஸ்பூன் உடைத்த கடலையும் இதில் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி, ஒரு கொத்து கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக ஒரு முறை வதக்கி விடுங்கள். அதன் பிறகு இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய அனைத்தையும் நன்றாக ஆற விட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் உப்பையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் ஒரு பவுலில் மாற்றி விடுங்கள்.

- Advertisement -

கடைசியாக ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் விட்டு சூடானதும், அரை ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து சேர்த்து பொரிந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது சூடாக இருக்கும் இந்த தாளிப்பு கரண்டியில் கொஞ்சமாக நறுக்கிய கொத்தமல்லி தழை, பத்து கறிவேப்பிலை இலையும் சேர்த்து கடைசியாக கால் டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து அரைத்து வைத்த சட்னியில் ஊற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சுவையான கேழ்வரகு பன் தோசை இப்படி மட்டும் 10 நிமிடத்தில் சுலபமாக செஞ்சு பாருங்க 2k கிட்ஸ் கூட அடிக்கடி கேட்டு அடம் பிடிப்பாங்க!

சுவையான இந்த சட்னி நிமிடத்தில் தயாராகி விட்டது. சுட சுட இட்லி தோசை போன்றவற்றுடன் சாப்பிட இந்த சட்னி மிகவும் நன்றாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் உப்புமா, வடை, பொங்கல் என அனைத்து டிபன் வகைகளுக்கும் இந்த சட்னி மிக பிரமாதமாகவே இருக்கும். ஒரு முறை இந்த சட்னி ரெசிபியை நீங்களும் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -