தேங்காயை கஷ்டப்பட்டு துருவ வேண்டும் என்ற அவசியமே இனி கிடையாது. இந்த ஐடியாவை தெரிஞ்சு வச்சுக்கோங்க. ஈஸியா தேங்காய் துருவல் ரெடி ஆயிரும்.

coconut-thuruval
- Advertisement -

நம்ம வீட்டு சமையல் பெரும்பாலும் தேங்காய் இல்லாமல் இருக்காது. தேங்காய் சேர்த்து சமைப்பதால் உடலுக்கு எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும், என்பது நன்றாக தெரிந்து இருந்தால் கூட, தேங்காய் துருவுவதற்கு சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு தேங்காய் சேர்க்காமல் என்ன சமைக்கலாம் என்று யோசித்து செய்வோம். ஆனால் இனி அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம். இந்த ஒரு முறையை நீங்கள் பின்பற்றினால் போதும். தேங்காய் சேர்த்த பலகாரங்களை கூட நினைத்த உடனே சமைத்து சாப்பிட்டு விடலாம்.

இதற்கு முதலில் ஒரு முழு தேங்காய் எடுத்துக் கொள்ளுங்கள், அதை ஒரு பாத்திரத்தில் வைத்து தேங்காய் முழுவதுமாக மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அப்படியே இரண்டு நிமிடம் வரை வைத்து விடுங்கள். உங்களுக்கு இதற்கும் நேரமில்லை என்கிறீர்களா, அப்போது சிங்க் பைப்பை திறந்து விட்டு தண்ணீரில் இந்த தேங்காய் காட்டுங்கள், தேங்காய் முழுவதும் நனைந்த பிறகு இரண்டாக உடைத்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்து சூடேற்றிய பிறகு, இட்லி தட்டை வைத்து, உடைத்த தேங்காய் முடிகளை இட்லி வேக வைப்பது போல ஒரு பத்து நிமிடம் வேகவைத்து எடுத்து விடுங்கள். (இதே முறையில் குக்கரிலும் செய்யலாம் ஆனால் விசில் போட கூடாது).

அதன் பிறகு தேங்காய் எடுத்து சூடு ஆறியதும், தேங்காய் ஒட்டை சுற்றி மெதுவாக கத்தியோ, கரண்டியோ, கொண்டு எடுத்தால் ஓட்டிலிருந்து தேங்காய் தனியாக வெளியே வந்துவிடும். அதன் பிறகு நீங்கள் தேங்காய் மேல் உள்ள தோலை சீவி (தோலை எடுக்க வில்லை என்றாலும் பரவாயில்லை அது உங்கள் விருப்பம்) அப்படியே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பிரிட்ஜில் வைக்கலாம், அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு சுற்று மட்டுமே விட்டு எடுத்தால் பூ போல துருவிய தேங்காய் கிடைத்தது விடும்.

- Advertisement -

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள். ஒன்று தண்ணீர் ஊற்றி அரைக்கவே கூடாது. இன்னொன்று மிக்ஸியில் அதிக நேரம் ஒட விட கூடாது. தண்ணீர் ஊற்றி அரைத்தால் தேங்காய் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். மிக்ஸியில் அதிக நேரம் அரைத்தால் சூட்டில் தேங்காய் சுவை மாறிவிடும்.

இந்த இரண்டு குறிப்புகளை மட்டும் கவனத்தில் கொண்டு இந்த முறையில் நீங்கள் தேங்காய் துருவி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு ஃப்ரீட்ஸ் ஃப்ரீசரில் ஸ்டோர் செய்தால், ஒரு மாதம் ஆனாலும் இந்த தேங்காய் கெட்டுப் போகாது. பிறகு என்ன நீங்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் அவசர, அவசரமாக ஏதோ ஒன்று சமைக்காமல், உங்களுக்கு பிடித்ததை தேங்காய் சேர்த்த உணவை சமைத்து சாப்பிடுங்கள்.

- Advertisement -