கருவறையின் பின்புறம் விரிந்துகிடக்கும் சிவனின் ஜடா முடி. சன்னதியை சுற்ற தடை

jadaamudi
- Advertisement -

கோயில் என்றாலே சுவாமி சன்னதியை சுற்றுவது முக்கியமான அம்சம். ஆனால், திருவையாறில் உள்ள ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சன்னதியை சுற்றக்கூடாது என்ற தடை உள்ளது. எதற்காக இந்த தடை? அந்த கோவிலின் சிறப்பம்சங்கள் என்ன? இப்படி பல தகவல்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

முழுமுதற் கடவுளான சிவபெருமான் சிறப்பாக எழுந்தருளியுள்ள இடமாக கருதப்படுகிறது திருக்கயிலாய மலை. அனால் திருக்கையிலாயம் சென்று இறைவனை தரிசிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் இந்த தளத்திற்கு வந்து ஈசனை வணங்குவோர்க்கு பரமசிவனின் திருவடி நிழல் கிட்டும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

சுயம்பு மூர்த்தியாக இங்கு அருள்பள்ளிக்கும் சிவனின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். ஆகையால் சிவபெருமானின் ஜடா முடியை யாரும் மிதிக்கக்கூடாது என்பதற்காக, சன்னதியை சுற்ற இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்திருக் கோயிலுள், ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.

- Advertisement -

கி.மு. முதலாம் நூற்றான்டில் வாழ்ந்த சோழ பேரரசனான கரிகாற்பெருவளத்தான், இமயமலையில் புலி கோடியை பறக்கவிட்டு வெற்றியுடன் திரும்பி வரும் வழியில், ஐயாற்றை அடைந்ததும், அவன் வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை.

அதன் அடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது என்பதை உணர்த்த அரசன் அவ்விடத்தை தோண்ட ஆணையிட்டான் அப்போது அந்த இடத்திற்கு அடியில் சுயம்பு லிங்கம் தென்பட்டது. அதோடு உள்ளே சடை வளர்ந்தவராக நியமேசர் எனும் சித்தர் தென்பட்டார். அவர் பாதம் பணிந்த சோழனிற்கு ஆசி வழங்கிய நியமேசர், தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட அந்த சுயம்பு லிங்கத்தை பிரதிஸ்டை செய்து அங்கு கோவில் எழுப்புமாறு கூறினார்.

அது போலவே கரிகாற்சோழன் சிறப்பாக கோவில் கட்டி, குடமுழுக்கும் செய்து, நிவந்தங்களும் அளித்தான். கரிகாற் சோழனுக்கு ஐயாறப்பரே, எல்லாம் வல்ல சித்தர் வடிவில் வந்து, சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடத்தை காட்டி கோவில் கட்ட செய்தார்.

இப்போதும் அகப்பேய்ச் சித்தர்(நியமேசர்) மூலவரின் வடபுறம் உள்ள சண்டிகேஸ்வரர் அருகில் சமாதியாகி உள்ளார். ஸ்ரீ ஜிரஹரேஸ்வரர் எனும் நாமம் கொண்ட லிங்கம் அகப்பேய் சித்தரின் ஐக்கியம் பெற்ற இடமாகும். ஸ்ரீ ஜிரஹரேஸ்வரரின் எதிரே அகப்பேய் சித்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அங்கு அமர்ந்து தவம் செய்தால் அவர் இருப்பதை உணரலாம்.

- Advertisement -