திடீர் திடீரென உங்கள் உடம்பில் மச்சம் தோன்றுகிறதா? அதற்கு இது தான் காரணம்!

mole-macham
- Advertisement -

மச்சம் என்பது நம் பிறப்பிலிருந்தே நம்முடன் இருக்கும் ஒரு விஷயம் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மச்சம் என்பது நாம் பிறக்கும் பொழுதே நம்முடன் இருக்கும் ஒரு விஷயம் மட்டும் அல்ல, நாம் வளர வளர திடீரென்று கூட நமக்கே தெரியாமல் நம் உடம்பில் அது தோன்ற ஆரம்பிக்கும். இப்படி நமக்கு திடீர் திடீரென தோன்றும் மச்சத்திற்கு என்ன காரணம்? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம் வாருங்கள்.

சாமுத்திரிகா லட்சணம், மச்ச சாஸ்திரம், அங்க லட்சண சாஸ்திரம் என்று பல்வேறு பெயர்களில் கூறப்படும் இந்த சாஸ்திரம் திடீரென தோன்றும் மச்சத்திற்கு காரணமாக என்ன கூறுகிறது தெரியுமா? அங்க லட்சணம் என்னும் சாஸ்திர வரிசையில் நம் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. நம்முடைய கண்கள், மூக்கு, வாய், காது என்று ஒவ்வொரு பகுதியும் எப்படி இருந்தால், என்ன பலன்? என்கிற பொதுவான கருத்து உண்டு.

- Advertisement -

அங்க லட்சணம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கும் மச்சத்திற்கும் பலன் உண்டு. உதட்டில் இருக்கும் மச்சத்திற்கு ஒரு பலன் என்றால், நம் கை விரல்களில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் கூறப்படுவது உண்டு. உதட்டுக்கு கீழே மச்சம் இருக்கும் எத்தனையோ பெண்கள் இன்று கலைத் துறையில் உச்சக்கட்ட புகழை சம்பாதித்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். கலைத்துறை மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய அதிர்ஷ்டங்கள் வந்து சேரக்கூடிய அமைப்பு தான் இந்த மச்சம்.

ஒருத்தருக்கு ஒரு யோகம் வரும் பொழுது நாம் சட்டென கூறுவது, ‘நீ மச்சக்காரண்டா’ என்று தான். ஆக மச்சம் என்பது நமக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு விஷயமாக தான் இன்று வரை இருந்து வருகிறது. இயற்கையாகவே நம்முடன் இருக்கும் சில மச்சங்கள் இப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கிறது ஆனால் திடீர் திடீரென நமக்கே தெரியாமல் தோன்றும் இந்த புதிய மச்சம் என்ன பலன்களைச் சொல்லும்? என்று கேட்கும் பொழுதே ஆர்வமாக இருக்கும்.

- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும் என்று அனைவரும் அறிந்தது தான். அந்த காரணம் முடிவதற்குள் அவர்களுடைய ஏதோ ஒரு கண்டம் ஆயுளை குறைக்கக் கூடியதாக இருந்தால் அதிலிருந்து நம்மை தப்புவிப்பதற்காகவே வந்துள்ளது தான் இந்த திடீர் மச்சம் என்று கூறப்படுகிறது. ஜனனம் என்றால் மரணம் இருக்கத் தான் செய்யும். ஆனால் நம் ஆயுள் முடிவதற்குள் நமக்கு எத்தனையோ கண்டங்கள் வந்து செல்லும். அப்படி நமக்கு வரும் ஆபத்தில் இருந்து தப்ப வைக்கும் பொழுது அதனை நமக்கு உணர்த்துவதற்காகவே இப்படி திடீரென நம் அங்கங்களில் மச்சம் தோன்றுகிறது என்கிறது லட்சண சாஸ்திரம்.

சிலரெல்லாம் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். சிலரோ சாதாரண கல் தடுக்கி கூட விழுந்து இறந்து விடுவார்கள். ஆனால் ஒரு சிலரோ எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் மரணத்தை அவர்களால் எட்ட முடியாது. நம் பிறப்பு எதற்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது? அந்த காரியம் முடிவதற்குள் நம்மால் நினைத்து கூட நம்மை ஆமே மரணித்து கொள்ள முடியாது. அதே போல நமக்கு வர இருக்கும் ஆபத்தையும் நம்மால் நினைத்தால் கூட தடுத்துக் கொள்ள முடியாது. இது இரண்டையுமே செய்யக்கூடிய பொறுப்பு இறைவனிடத்தில் உண்டு.

- Advertisement -