- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனி மகா பிரதோஷம் தில்லை நடராஜர் பாடல்.

சனி மகா பிரதோஷம் தில்லை நடராஜர் பாடல்.

- Advertisement -

பல நாட்களாக ஈசனை வழிபாடு செய்கின்றேன். பலன் இல்லை. கையில் பணம் இல்லை. மனதில் சந்தோஷம் இல்லை. பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை. இது போன்று இல்லை என்ற வார்த்தை உங்கள் வாயிலிருந்து இருந்து நிச்சயமாக வராது. தில்லை நடராஜரை இன்றைய தினம் மனதில் நினைத்து இந்த பாடலை படித்தால்.

அந்த பாடலை தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு அற்புதமான மகா பெரியவா அவர்கள் நமக்காக சொன்ன ஒரு சிறு கதையை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சனி மகா பிரதோஷத்தன்று இந்த கதையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம்.

- Advertisement -

சிவபெருமானின் பக்தி கதை

ஒரு பக்தன், ஈசனிடம் சென்று, உன்னை நான் பார்த்ததில்லை, உன்னிடம் இதுவரை பிரார்த்தனை செய்ததில்லை, இதுவரை பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்ததில்லை, இதுவரை நான் உன்னிடம் எதையுமே கேட்டதில்லை, பெரியவர்கள் சித்தர்கள் சொன்னபடி எல்லாம் நான் உன்னை ஒரு நாளும் வழிபட்டதும் இல்லை. எனக்கு என்ன வரம் கொடுப்பாய் என்று ஈசனைப் பார்த்து இந்த மானுடன் கொஞ்சம் திமிரோடு தான் பேசுகின்றான். “சிவபெருமான் உடனடியாக அந்த மானுடனுக்கு மோட்சத்தை கொடுத்து விட்டாராம்”.

பக்கத்தில் இருந்தவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எதுவுமே செய்தது இல்லை என்று சொன்ன மனிதனுக்கு, எதற்கு இந்த மோட்சம். “இதற்கும் சிவபெருமான் ஒரு பதிலை சொல்லுகின்றார். என்ன கூறினார் தெரியுமா? “அவன் இல்லை என்றா சொன்னான். என் காதில் தில்லை என்று தானே விழுந்தது”.

- Advertisement -

நான் பிரார்த்தனை செய்தது இல்லை என்று சொன்னது, சிவபெருமான் காதில் “நான் பிரார்த்தனை செய்தது தில்லையில்” என்று விழுந்துள்ளது. தில்லை என்ற வார்த்தைக்கு எத்தனை ஒரு மகிமை என்று பாருங்கள். தவறாக ஒரு மனிதன் எதையாவது இறைவனிடம் பேசினால் கூட, இறைவன் அதை தனக்கு சாதகமாக சரியான வார்த்தைகளை போட்டு எடுத்துக் கொள்கின்றான்  அதுதான் நம் அப்பன் ஈசன். தில்லை நடராஜனை மனதில் நினைத்து, இன்று உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலில் அமர்ந்து பிரதோஷ நேரத்தில் பின் சொல்லக்கூடிய இந்த பாடலை உச்சரித்தால் உங்களுக்கான மோட்சமும் கிடைக்கும். செய்த பாவத்திலிருந்து விடுதலை அடைவீர்கள். வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை என்ற வார்த்தை நிச்சயமாக உங்கள் வாயிலிருந்து வராது.

தில்லை நடராஜர் பாடல்

பத்தனாய்ப் பாட மாட்டேன்
பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன்
என்னைநீ இகழ வேண்டா

- Advertisement -

முத்தனே முதல்வா தில்லை
அம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்த வாறே.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் பலிக்க சனி மஹா பிரதோஷ வழிபாடு

எளிமையான தமிழ் வார்த்தைகளைக் கொண்ட இந்த பாடலை இன்றைய தினம் தில்லை நடராஜரை நினைத்து படித்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். தீராத துன்பங்கள் உங்களை விட்டு விலகும். நீங்கள் இறைவனை திட்டினால் கூட அந்த இறைவன் உங்களுக்கு நிச்சயம் நல்லதை மட்டும் தான் செய்தான். அதுதான் இறைவனுடைய சுபாவமும் கூட. இந்த சனி பிரதோஷ நாளில் இந்த பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்