உங்கள் வீட்டில் பூஜையின் போது இந்த ஒரு பொருளை மட்டும் சாமி படத்திற்கு முன்பாக காட்டுங்கள், தெய்வம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக வந்து அமர்ந்து விடும்.

- Advertisement -

மனிதர்களை திருப்திப்படுத்த ஆடை, நகை, பொருள், என பிடித்ததை வாங்கி கொடுக்கலாம். அவர்களுக்கு பிடித்தமானவற்றை செய்யலாம். இப்படி ஒருவருக்கொருவர் பிடித்தது என்று எதையாவது செய்து கொண்டே இருக்கலாம். இதன் மூலம் நாம் யாரை திருப்தி படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் தெய்வத்தையே திருப்திப்படுத்த வேண்டும் என்றால் எப்படி? பூஜை புனஸ்காரங்கள் இதையெல்லாம் செய்வதின் மூலம் நம் பக்தியை தெய்வத்திற்கு காட்டுகிறோம். ஆனால் இதனால் தெய்வம் மகிழ்ச்சி அடையாதா? என்றால் அது சந்தேகம் தான். அப்படியானால் தெய்வத்தை மகிழ்ச்சிபடுத்த என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மனிதர்களை திருப்தி படுத்த, சந்தோஷப்படுத்துவதே நம்மால் முடியவில்லை. இதில் தெய்வத்தை எப்படி திருப்திப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று நீங்கள் யோசிக்கலாம். மனிதர்கள் வேறு கடவுள் வேறு. உங்களால் என்ன முடியுமோ உங்கள் சக்திக்கு எதை செய்ய முடியுமோ அதை செய்தாலே தெய்வங்கள் திருப்தி அடைந்து விடுவார்கள். அதே போல் தான் அவரை சந்தோஷப்படுத்த நீங்கள் பெரிதாக எதையும் பண்ண வேண்டாம் தெய்வத்திற்கு முன் தினமும் கண்ணாடியை காட்டினாலே போதும்.

- Advertisement -

தெய்வத்திற்கு கண்ணாடியை காட்டுவதா அனைத்தும் தெரிந்த அவருக்கே அவரை காட்டுவதா என்று நீங்கள் நினைக்கலாம். நாம் பொதுவாக எப்போது மகிழ்ச்சி அடைவோம் ஏதாவது ஒரு நல்ல ஆடையை அணியும் போது, ஆபரணம் அணியும் போது அழகான அலங்காரம் இப்படி ஏதாவது ஒன்று செய்த பிறகு, கண்ணாடி முன் நின்று நம்மை நாமே ரசித்து மகிழ்ச்சி கொள்வோம் இல்லையா.

அதே போல் தான் தெய்வமும். நீங்கள் சாமி படத்திற்கு தினமும் பொட்டு வைத்து பூ போட்டு அலங்காரம் செய்து முடித்த பிறகு அவர்கள் முன் சின்ன ஒரு கண்ணாடியை காட்டி நான் உங்களுக்கு எப்படி அலங்காரம் செய்திருக்கிறேன் பாருங்கள் என்று நீங்கள் மனதுக்குள் எண்ணிக் கொண்டு அந்த கண்ணாடியை தெய்வத்தின் முன் காட்டினால் போதும் அவர்கள் மனம் குளிர்ந்து உங்கள் வீட்டில் சந்தோஷமாக குடியிருப்பார்கள்.

- Advertisement -

இது ஒன்றும் நாம் புதிதாக கண்டுபிடித்த விஷயம் கிடையாது. இன்றும் பாரம்பரியமான பழைய பெரிய கோவில்களில் திரையை மூடி அலங்காரம் எல்லாம் செய்த பிறகு சாமிக்கு முன் அந்த கண்ணாடியை காட்டிய பிறகு தான் திரையை விளக்குவார்கள். இது மட்டும் இன்றி தெய்வத்திற்கு நேராக குறிப்பாக அம்மன் கோவில்களில் பார்த்தால் தெரியும், கடவுள் கர்ப்ப கிரகத்திற்கு எதிரே ஒரு பெரிய கண்ணாடியை வைத்திருப்பார்கள் நாம் வெளியே வரும்போது நம் முகத்தைப் பார்த்து விபூதி வைத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, அந்த கண்ணாடி தெய்வத்தின் அலங்காரத்தை அவர்களுக்கு காட்டுவதற்காகவும் தான்.

இதையும் படிக்கலாமே: மணக்குழப்பத்தை தீர்த்து வைக்கும் மாரியம்மன். அம்பாள் கோவிலுக்கு சென்று இதை மட்டும் செய்தால், உங்கள் மனசு உடனே லேசாகும்.

தினமும் நாம் செய்யும் இந்த ஒரு சின்ன விசயத்தில் தெய்வமே நம் வீட்டில் மகிழ்ந்து இருக்கும் என்றால் இதை விட வேற என்ன பாக்கியம் நமக்கு பெரிதாக கிடைத்து விட போகிறது. கண்ணாடி முன் நின்று நாம் மட்டும் சந்தோசப்படாமல் நம் வீட்டு தெய்வத்திற்கும் இந்த கண்ணாடியை தினமும் காட்டி தெய்வத்தை மகிழிச்சியாக நம் வீட்டில் வைத்திருந்து நாமும் மகிந்திருப்போம்.

- Advertisement -