உங்களுக்கு சகோதர, சகோதரிகளால் அனுகூலங்கள் ஏற்படுமா என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்

astro

ஜாதக கட்டத்தில் மூன்றாம் வீடு சகோதர ஸ்தானம் எனப்படுகிறது. மேலும் அந்த 3 ஆம் வீடு ஜாதகன் குணங்கள், மனோவலிமை, இளைய சகோதரம், சகோதரி, அவர்களால் ஜாதகருக்கு நன்மை உண்டா, இல்லையா? தாயாரின் பொருள் விரையம், பக்கத்துவீட்டு நபர்கள், குறுகிய பயணம், காது சம்பந்தமான நோய், வசிக்கும் வீடு மாறி செல்லுதல் எல்லாம் மூன்றாம் வீடு மூலம் தெரிந்து கொள்ளலாம். இங்கு மூன்றாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

Nakshatra

மூன்றாம் வீட்டு கிரகம் 1 வது வீடாகிய லக்னத்திலேயே இருந்தால் இளைய சகோதரர் ஜாதகருக்கு பல விதங்களில் உதவியாக இருப்பார். சங்கீதம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும். உடல் பலம் பெற்று போக சுகங்களை பெறுவார்கள். நகைகள் சேமிப்பு உண்டாகும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு.

மூன்றாம் வீட்டு கிரகம் 2 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் சகோதர, சகோதரிகளின் ஆதரவில் வாழ்பவராகவும், தைரிய குணமில்லாதவனாகவும், நோய்கள் பல பாதித்தவானாகவும் இருப்பார். மூன்றாம் வீட்டு அதிபதி கெட்ட கிரகங்கள் பார்வை இல்லை என்றால் சகோதர சகோதரிகளின் சொத்து ஜாதகருக்கு கிடைக்க வாய்ப்பு உருவாகும்.

jathagam astro

மூன்றாம் வீட்டு கிரகம் 3 ஆம் வீட்டிலேயே இருந்தால் ஜாதகரின் சகோதர, சகோதரிகள் நல்ல அந்தஸ்த்தோடு இருப்பார்கள். அவர்களால் ஜாதகருக்கு எல்லாவிதத்திலும் உதவிகள் கிடைக்கும். அனைத்து கலைகளிலும் ஆர்வம் கொண்டவனாக ஜாதகர் இருப்பார். உடல் பலம் மிகுந்தவராகவும், தங்கம், வெள்ளி, ஆடைகள் மீது அதிக ஆசை இருக்கும்.

- Advertisement -

மூன்றாம் வீட்டு கிரகம் 4 ஆம் வீட்டில் இருந்து சுப பலம் பெற்றால் ஜாதகரின் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். சகோதர, சகோதரிகள் நீண்ட ஆயுளுடனும் தாயார் தாய்வழி ஆதரவை பெற்றவர்களாகவும் வாழ்வார்கள். குடும்பத்தில் செல்வமும் சுகமும் எப்போதும் நிலைத்திருக்கும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 5 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் குழந்தை பாக்கியம் பெற்றவனாகவும், சகோதர சகோதரிகளின் ஆதரவை பெற்றவராகவும் இருப்பார். மேலும் ஜாதகரின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். ஞானிகள்,, மகான்களின் தொடர்பு கிடைக்கும்.

astrology

மூன்றாம் வீட்டு கிரகம் 6 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு உடன் பிறந்த சகோதர, சகோதரிகளே பரம எதிரிகளாக இருப்பார்கள். அந்த ஜாதகர் உடல் பலமில்லாதாவராகவும் இருப்பார். அடிக்கடி நோய்வாய்ப்படவும் கூடும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 7 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் பெண்களின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவராக இருப்பார். உழைக்காமல் ஊர் சுற்றி திரிபாவராகவும் இருப்பார். தன்னுடைய சுகங்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என நினைப்பான். நன்றாக சாப்பிடுபவராகவும், மனைவியின் சொத்துக்களை பெற முயல்பவராகவும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 8 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் அடிக்கடி உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் உடன் சண்டையிடுபவராக இருப்பார். ஒரு சிலருக்கு உடல் ஊனம் ஏற்பட கூடும். ஜாதகருக்கு கஷ்ட ஜீவனம் உண்டாகும். சிலருக்கு அதிக கடன்கள் ஏற்படும். அவமானங்களும் உண்டாகும்.

astrology

மூன்றாம் வீட்டு கிரகம் 9 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் நல்ல தைரியசாலியாகவும், பூர்வ ஜென்ம புண்ணியத்தால் இப்பிறவியில் நல்ல வசதி மிகுந்த வாழ்க்கை பெற்றவராகவும் இருப்பார்கள். மிகுதியான தெய்வபக்தி இருக்கும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 10 ஆம் வீட்டில் இருந்தால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் மூலமாக வேலை வாய்ப்புகள், தொழில் வியாபார உதவிகள் கிடைக்கும். அதன் மூலம் குடும்பத்தை நடத்துபவராக ஜாதகர் இருப்பார்.

astrology

மூன்றாம் வீட்டு கிரகம் 11 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் அன்பை பெற்றவராக இருப்பார். அவர்களால் ஜாதகருக்கு பல வகைகளில் லாபங்கள் ஏற்படும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 12 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு சகோதர, சகோதரிகள் மூலம் பொருள் விரையம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் விரயமும் ஏற்படும். ஜாதகருக்கு உடன் பிறந்தவர்களால் வீண் அலைச்சலும், மனசஞ்சலமும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை உண்டானால் யோகங்கள் உண்டு

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Third house palan in Tamil. It is also called as Third house in astrology in Tamil or Jathaga palangal in Tamil or Jothidam kanippu in Tamil or 3 aam veedu in Tamil.